உரோமைப் பேரரசு
| உரோமைப் பேரரசு Roman Empire |
|||||
|
|||||
|
|
|||||
|
கிபி 117 இல் உரோமைப் பேரரசு எழுச்சியுற்றிருந்த காலத்தில்.[1]
|
|||||
| தலைநகரம் |
|
||||
| மொழி(கள்) |
|
||||
| சமயம் |
|
||||
| அரசாங்கம் | குடும்ப வல்லரசில் வல்லாட்சி | ||||
| பேரரசர் | |||||
| - | 27 BC – AD 14 | அகஸ்ட்டஸ் (first) | |||
| - | 98–117 | திராயான் | |||
| - | 284–305 | தியோகிளாத்தியன் | |||
| - | 306–337 | முதலாம் கான்ஸ்டன்டைன் | |||
| - | 379–395 | தியோடோசியசு I | |||
| - | 475–476 | உரொமூலசு அகுஸ்தசுa | |||
| - | 527–565 | முதலாம் ஜஸ்டினியன் | |||
| - | 1449–1453 | ஒன்பதாம் கான்ஸ்டன்டீன் b | |||
| சட்டசபை | செனட் | ||||
| வரலாற்றுக் காலம் | Classical to late antiquity | ||||
| - | உரோமைக் குடியரசின் இறுதிப் போர் |
கிமு 32–30 | |||
| - | பேரரசு நிறுவல் | கிமு 30–2 | |||
| - | அதியுச்சத்தில் பேரரசு |
கிபி 117 | |||
| - | பிரிவு | 293 | |||
| - | தலைநகராக கான்சுடன்டினோப்பிள் |
330 | |||
| - | இறுதி கிழக்கு-மேற்குப் பிரிவினை |
395 | |||
| - | கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி | மே 29 1453 | |||
| பரப்பளவு | |||||
| - | கிமு 25[3][4] | 27,50,000 km² (10,61,781 sq mi) | |||
| - | 117[3][5] | 50,00,000 km² (19,30,511 sq mi) | |||
| - | 390[3] | 44,00,000 km² (16,98,849 sq mi) | |||
| மக்கள்தொகை | |||||
| - | கிமு 25[3][4] est. | 5,68,00,000 | |||
| அடர்த்தி | 20.7 /km² (53.5 /sq mi) | ||||
| நாணயம் | செஸ்டெர்சியசுc | ||||
| தற்போதைய பகுதிகள் |
47 நாடுகள்
|
||||
|
|||||
| Warning: Value not specified for "common_name"|- style="font-size: 85%;" | Warning: Value specified for "continent" does not comply[[பகுப்பு:முன்னாள் பேரரசுகள்|]] | ||||
உரோமைப் பேரரசு (Roman Empire) ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரவியிருந்த ஒரு முன்னாள் ஏகாதிபத்திய அரசு ஆகும். இது பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ஜேர்மனி மற்றும் எகிப்து என பல்வேறு நாடுகளையும் தனது கைவசம் வைத்திருந்த பண்டைக் காலத்து மாபெரும் பேரரசாகும். ரோமப் பேரரசானது 500-ஆண்டுகள் பழமை வாய்ந்த ரோமக் குடியரசை (கிமு 510 – கிமு 1ம் நூற்றாண்டு) அடுத்து ஆட்சிக்கு வந்தது. உள்நாட்டுப் போர்களால் இப்பேரரசு வலிமை குன்றி பின்னர் பைசண்டைன் பேரரசாக கொன்ஸ்டண்டினோபிள் வீழ்ச்சி (1453) வரை ஆட்சியில் இருந்தது. குடியரசில் இருந்து பேரரசாக மாறிய காலப்பகுதி பலராலும் பலவிதமாகத் தரப்பட்டுள்ளது. கிமு 44 இல் ஜூலியஸ் சீசர் பேரரசின் மன்னனாக முடிசூடல், சீசரின் வாரிசான ஆகுஸ்டஸ் செப்டம்பர் 2, கிமு 31 இல் ஆக்டியம் போரில் வென்றமை ஆகியவை சிலவாகும்.
குடியரசாக இருக்கும் போது ரோமின் விரிவாக்கம் இடம்பெற்றது. ஆனாலும் அதன் உச்ச நிலை டிராஜான் என்ற பேரரசின் காலத்தில் ஏற்பட்டது. இவனது காலத்தில் ரோமப் பேரரசு அண்ணளவாக 5,900,000 கிமீkm² (2,300,000 sq மைல்) நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. இவ்வளவு பரந்த நிலப்பரப்பை பல நூற்றாண்டுகளாக இப்பேரரசு கொண்டிருந்தமையால், மொழி, சமயம், கட்டிடக்கலை, மெய்யியல், சட்டம், மற்றும் அரசுத் துறைகளில் இதன் செல்வாக்கு இன்று வரையில் மிகுந்து காணப்படுகிறது.
ரோமப் பேரரசின் முடிவு காலம் கிட்டத்தட்ட செப்டம்பர் 4 கிபி 476 ஆகக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் மேற்கு ரோமப் பேரரசின் கடைசி மன்னன் ரொமூலஸ் ஆகுஸ்டஸ் என்பவன் பதவியில் இருந்து இறக்கப்பட்டான். ஆனாலும் பதிலுக்கு எவரும் நியமிக்கப்படவில்லை. இந்நாளுக்கு முன்னர் ரோமப் பேரரசு மேற்கு, கிழக்கு என இரண்டாகப் பிரிந்திருந்தாலும் டயோகிளேசியன் என்ற கடைசிப் பேரரசன் கிபி 305 ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரையில் அவனே முழுமையான பேரரசின் கடைசி மன்னனாக இருந்தான். மேற்கு ரோமப் பேரரசு 5ம் நூற்றாண்டில் வீழ்ச்சியடைந்தது. பைசண்டைன் பேரரசு என அழைக்கப்படும் கிழக்கு ரோமப் பேரரசு 1453 இல் ஓட்டோமான் பேரரசிடம் வீழ்ச்சியடையும் வரையில் கிரேக்க-ரோமன் சட்டபூர்வ மற்றும் கலாசார பாரம்பரியத்தைப் பேணி வந்திருந்தது.
பேரரசர்கள்[தொகு]
உரோமைப் பேரரசை முதன் முறையாக உரோமப் பேரரசை ஆட்சி செய்தவர் ஒகஸ்டஸ் ஆவார்.[6] இவரது ஆட்சிக்காலமே உரோமைப் பேரரசின் பொற்காலம் என அழைக்கப்பட்டது. பின்பு யூலியஸ் சீசர், நீரோ மன்னன் மற்றும் குளோடியசு போன்ற பேரரசர்கள் ஆட்சி செய்தனர்.
உரோமப் பேரரசர்கள் சிலரின் படத்தொகுப்பு[தொகு]
-
கல்லால் செதுக்கப்பட்ட உரோமப் பேரரசன் யூலியஸ் சீசர்
-
கல்லால் செதுக்கப்பட்ட உரோமப் பேரரசன் ஒகஸ்டஸ் சீசர்
-
கல்லால் செதுக்கப்பட்ட உரோமப் பேரரசன் நீரோ மன்னன்
-
கல்லால் செதுக்கப்பட்ட உரோமப் பேரரசன் குளோடியசு
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Bennett, J. Trajan: Optimus Princeps. 1997. Fig. 1. Regions east of the புராத்து ஆறு river were held only in the years 116–117.
- ↑ Constantine I (306–337 AD) by Hans A. Pohlsander. Written 2004-01-08. Retrieved 2007-03-20.
- ↑ 3.0 3.1 3.2 Taagepera, Rein (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D". Social Science History (Duke University Press) 3 (3/4): 118. doi:10.2307/1170959. http://www.jstor.org/stable/1170959?seq=4.
- ↑ John D. Durand, Historical Estimates of World Population: An Evaluation, 1977, pp. 253–296.
- ↑ Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of world-systems researc h 12 (2): 219–229. ISSN 1076-156X. http://cliodynamics.info/PDF/Turchin_Adams_Hall_2006.pdf. பார்த்த நாள்: 12 August 2010.
- ↑ Galinsky, Karl (2005). The Cambridge companion to the Age of Augustus. பக். 13–14. ISBN 978-0-521-80796-8. http://books.google.com/books?id=ftcx-5j7rjwC&pg=PA13. பார்த்த நாள்: 2011-08-03.