சுமேரியக் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
SaintPierre1.JPG

இக் கட்டுரை
மேலைநாட்டுக்
கட்டிடக்கலை வரலாற்றுத்

தொடரின்
ஒரு பகுதியாகும்.

புதியகற்காலக் கட்டிடக்கலை
பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை
சுமேரியக் கட்டிடக்கலை
செந்நெறிக்காலக் கட்டிடக்கலை
பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை
பண்டை உரோமன் கட்டிடக்கலை
மத்தியகாலக் கட்டிடக்கலை
பைசண்டைன் கட்டிடக்கலை
ரோமனெஸ்க் கட்டிடக்கலை
கோதிக் கட்டிடக்கலை
மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை
பரோக் கட்டிடக்கலை
புதியசெந்நெறிக்காலக் கட்டிடக்கலை
நவீன கட்டிடக்கலை
Postmodern architecture
Critical Regionalism
தொடர்பான கட்டுரைகள்
கட்டத்தைத் தொகுக்கவும்
ஊர் என்னும் நகரத்தில் உள்ள ஊர்நம்மு என அழைக்கப்படும் சிகூரட்டின் மீட்டுரு
ஊர் எனுமிடத்தில் ஊர்நம்மு சிகரட்டின் 2006 எடுக்கப்பட்ட படம்


சுமேரியக் கட்டிடக்கலை என்பது மெசொப்பொத்தேமியா என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இன்றைய ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கட்டிடக்கலையைக் குறிக்கும். இவர்களுடைய காலம் கிமு 4 ஆம் ஆயிரவாண்டு முதல் கிமு 3 ஆம் ஆயிரவாண்டு வரையிலாகும். மெசொப்பொத்தேமியாவில் பாரிய கட்டிடங்களை அமைக்கும் வழக்கம், ஏறத்தாழ கிமு 3100 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், சுமேரியர்களுடைய நகரங்கள் அமைக்கப்பட்ட காலத்தில் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. இக் காலத்திலேயே எழுத்து முறையும் கண்டுபிடிக்கப்பட்டது. கிமு 4 ஆவது ஆயிரவாண்டின் நடுப்பகுதியில் இருந்து கிமு 3 ஆவது ஆயிரவாண்டின் தொடக்கம் வரையான 500 ஆண்டுக்காலப் பகுதியில் சுமேரியர்களால் அமைக்கப்பட்ட சமயச் சார்புடைய கட்டிடங்கள் கட்டிடக்கலை வடிவமைப்புக்கான முன் முயற்சிகளைத் தெளிவாகக் கட்டுகின்றன. இக் கோயில்கள் இரண்டு வகைகளாகக் காணப்பட்டன. ஒரு வகை மேடைகள் மீது அமைக்கப்பட்ட சிறிய கட்டிடங்களாகும். கோயில்களும், மேடையும் சுடாத செங்கற்களினால் அமைக்கப்பட்டன. இரண்டாவது வகைக் கோயில்கள் மேடையின்றி நில மட்டத்தில் அமைக்கப்பட்டன.

தொடக்கத்தில் சிறியவையாக இருந்த மேடைக் கோயில்கள் காலம் செல்லச் செல்லப் பெரிய அளவில் கட்டப்பட்டன. கிமு 2100 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்ட, ஊர் என்னும் நகரத்தில் இருந்த கோயில் மேடை 60 மீ நீளமும், 45 மீ அகலமும், 23 மீ உயரமும் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. இம் மேடைகள் சிகூரட் '(ziggurats) என அழைக்கப்பட்டன. இப் பெயர் உயரமானது என்னும் பொருள் கொண்ட அசிரிய மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.

உபைதுகள் காலச் சிகூரட்டுகள், மேலே செல்லச் செல்ல அளவில் குறைந்து செல்வனவும், ஒன்றன்மீது ஒன்றாக அமைக்கப்பட்டனவுமான பல மேடைகளைக் கொண்டவையாக அமைக்கப்பட்டன.

நகரங்கள்[தொகு]

சுமேரியர்களுடையது என அடையாளம் காணப்பட்ட மிகப் பழைய நகரம் எரிது ஆகும். இங்கே பல கால கட்டங்களையும் சேர்ந்த பல கோயில்கள் இருந்ததை அகழ்வாய்வுகள் காட்டுகின்றன. இங்கே அகழ்ந்து காணப்பட்ட மிகப் பழைய கோயில் சுமேரியக் கட்டிடக்கலைக்கே உரித்தான இயல்புகளைப் பெறத் தொடங்கிவிட்டதைக் காண முடிகின்றது. இங்கே காணப்படும் பிந்திய கோயில்கள் ஒப்பீட்டளவில் பெரியவை. கருவறை தவிர மேலும் இரண்டு அறைகளை இரு பக்கமும் கொண்டவையாக இவை காணப்படுகின்றன.

சுமேரியர்களின் மிகப்பெரிய நகரம் வர்க்கா ஆகும். இது கிமு 2900 - கிமு 2340 காலப் பகுதியில் 9 கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்டதாக அமைந்திருந்தது. இதன் பரப்பளவின் மூன்றில் ஒரு பகுதியில் கோயில்களும், பொதுக் கட்டிடங்களும் அமைந்திருந்தன. இந்த நகரத்தில் அமைந்திருந்த கட்டிடங்களுள் முக்கியமானவை தாய்க் கடவுளுக்கும், வானக் கடவுளுக்கும் உரிய இரண்டு கோயில்கள் ஆகும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]