கட்டிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கட்டிடம் (Building) என்பது பல கூறுகளை இணைத்து உருவாக்கப்படும் ஒன்றாகும். மனிதனால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் நிலத்துடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.

கட்டிடம் ஒரு தனிக் குடியிருப்பாளரை மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கூரை மட்டும் கொண்ட ஒரு குடிசையாகவோ அல்லது வெப்பநிலை, காற்றோட்டம், வெளிச்சம், வாயுக் கொள்ளளவு, பக்டீரியா நடமாட்டம், அமுக்கம், மக்கள் நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வசதிகளைக் கொண்ட, சிக்கலான, மருத்துவ மனைகள் போன்ற கட்டிடங்களாகவோ இருக்கக்கூடும். சிக்கலான அமைப்புகளும், வசதிகளும் தேவைப்படும் கட்டிடங்கள், கட்டிடக்கலைஞர்கள், அமைப்புப் பொறியாளர்கள், கட்டிடச் சேவைகள் பொறியாளர்கள் உட்படப் பல்வேறு தொழில் வல்லுநர்களின் உதவியுடன் கட்டப்படுகின்றன. எனினும் வீடுகள் போன்ற சிறிய, எளிமையான கட்டிடங்களில் நிபுணர்களின் பங்களிப்புகள் குறைவாகவேயிருக்கும். விசேடமாக வளர்ந்துவரும் நாடுகளில் மிகக் குறைந்த வீதமான மக்களே கட்டிடம் கட்டுவதற்குத் தொழில் நிபுணர்களின் பங்களிப்பை நாடுகின்றார்கள்.

பொதுவாக எல்லா நாடுகளிலும் பெரு நகரப்பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்களில் உரிய நிபுணர்களின் பங்களிப்பு இன்றிக் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை அதற்குரிய அதிகாரம் பெற்ற நிறுவனங்களிலிருந்து பெறமுடியாது.

கட்டிடம் கட்டப்படுகின்ற சூழல், உரிமையாளர்களின் நிதி நிலை, நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகள் என்பவற்றைப் பொறுத்துக் கட்டிடங்களில் கட்டிடப் பொருட்களின் பயன்பாடு அமைகின்றது.

கட்டிட உறுப்புக்கள்[தொகு]

ஒரு கட்டிடம் பல வகையான கட்டிடக் கூறுகள் சேர்ந்து அமைந்த ஒன்று. இத்தகைய கூறுகள் சிலவற்றைக் கீழேயுள்ள பட்டியல் காட்டுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டிடம்&oldid=2222081" இருந்து மீள்விக்கப்பட்டது