உள்ளடக்கத்துக்குச் செல்

இஷ்தர் கோயில் நுழைவாயில்

ஆள்கூறுகள்: 32°32′36″N 44°25′20″E / 32.54333°N 44.42222°E / 32.54333; 44.42222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈராக்கின்பண்டைய பாபிலோனின் சீரமைக்கப்பட்ட இஷ்தர் கோயிலின் நுழைவாயில், பெர்கமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி

இஷ்தர் கோயில் நுழைவாயில் (Ishtar Gate ) (அரபு மொழி: بوابة عشتار‎) புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர், தற்கால ஈராக் நாட்டின் பண்டைய பாபிலோன் நகரக் கோட்டையின் எட்டு நுழைவாயில்களில் ஒன்றில் நிறுவிய இஷ்தர் தெய்வத்திற்கான கோயிலின் நுழைவு வாயில் ஆகும்.

இஷ்தர் கோயில் நுழைவாயிலை, கிமு 575ல் புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் (ஆட்சிக் காலம்:கிமு 604 - 562) கிமு 575ல் 120 சிங்கங்கள், காளை மற்றும் யாழிகளின் சிற்பங்களுடன் கட்டினார்.

இஷ்தர் கோயிலின் கோட்டைச்சுவர் மற்றும் நுழைவு வாயில், கிபி 1930ல் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டது. இஷ்தர் கோயில் நுழைவுவாயிலை சீரமைத்து பெர்லின் நகரத்தின் பெர்கமோன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

வரலாறு

[தொகு]

புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் கிமு 575ல் பாபிலோனியர்களின் இஷ்தர் எனும் தாய்க் கடவுளுக்கு மெருக்கூட்டிய செங்கற்களால் கோயில் சுவர்களை எழுப்பினார். இச்சுவர்களில் பாபிலொனியக் கடவுளர்களை போற்றும் வகையில் 120 சிங்கங்கள், காளைகள் மற்றும் யாழிகளின் சிற்பங்களை நிறுவினார்.[1]

பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாக பாபிலோனின் இஷ்தர் கோயில் நுழைவாயில் போற்றப்படுகிறது.[2]

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kleiner, Fred (2005). Gardner's Art Through the Ages. Belmont, CA: Thompson Learning, Inc. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-15-505090-7.
  2. Clayton, Peter A.; Price, Martin. The Seven Wonders of the Ancient World (in ஆங்கிலம்). Routledge. p. 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781136748103. பார்க்கப்பட்ட நாள் 11 August 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]