அமோரிட்டு மக்கள்
அமோரிட்டு மக்கள் ( Amorites) செமிடிக் மொழி பேசிய மக்கள் ஆவார்.[1] பண்டைய சிரியாவிலிருந்து தற்கால ஈராக் நாட்டின் மெசொப்பொத்தேமியாவின் தெற்கு பகுதியான பபிலோனியாவில் குடியேறி கிமு 21ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரை பாபிலோன் போன்ற பெரிதும் சிறிதுமான நகர அரசுகளை அமைத்து ஆட்சி செய்தவர்கள். அமோரிட்டு மக்களின் முதன்மைக் கடவுள் அம்முரு ஆவார்.
அமோரிட்டு மக்கள், பண்டைய எகிப்தின் கீழ் எகிப்து பகுதிகளைக் கைப்பற்றி ஆவரிஸ் நகரத்தை தலைநகராகக் கொண்டு, 14-வது வம்ச ஆட்சியாளர்களாக கிமு 1725 முதல் கிமு 1650 முடிய 75 ஆண்டுகள் ஆண்டனர். யூதர்களின் விவிலியம் நூலில், அமோரிட்டு மக்கள் யோசுவாவிற்கும் முன்னும், பின்னும் கானான் நாட்டில் குடியிருந்ததாக கூறுகிறது.
மெசொப்பொத்தேமியாவில் அமோரிட்டுகளின் தாக்கம்
[தொகு]மெசொப்பொத்தேமியாவில் அமோரிய ராஜ்யங்களின் எழுச்சி அதன் அரசியல், சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பில், குறிப்பாக தெற்கு மெசொப்பொத்தேமியாவில் ஆழமான மற்றும் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தியது.
தெற்கு மெசொப்பொத்தேமியாவில் உள்ள பிரதேசங்கள் பாபிலோனிய நகர இராச்சியங்களில் பிரித்து வைத்தனர். மனிதர்கள், நிலம் மற்றும் கால்நடை ஆகியவை கடவுட்களுக்கு அல்லது கோவில்களுக்கும் அல்லது அரசர்களுக்கும் உரியதானாது. புதிய அமொரைட்டு மக்களின் முடியாட்சி ஒரு புதிய சமுதாயத்தை வெளிப்படுத்துவதற்கு நகர அரசுகளை உருவாக்கியது. பூசாரிகள் கடவுளின் சேவையை ஏற்றுக் கொண்டனர்.
அமோரைட்டு மக்களின் முதன்மை நகர அரசுகள், லெவண்ட் மற்றும் மெசொப்பொத்தேமியாவில் மாரி, இசின், குவட்னா, யாம்ஹத், லார்சா, பாபிலோனில் நிறுவப்பட்டது.
கிமு 1894ல் சிறிய நகர அரசாக இருந்த பாபிலோன், அமோரைட்டு பேரரசர் அம்முராபி ஆட்சியில், கிமு 18ம் நூற்றாண்டின் முற்பகுதியில் மெசொப்பொத்தேமியாவின் தெற்கு பகுதி பபிலோனியா என அழைக்கப்பட்டது.
அமோரிட்டுகளின் வீழ்ச்சி
[தொகு]கிமு 1740 மற்றும் கிமு 1735களில் வடக்கு மெசொப்பொத்தேமியா பகுதிகளில் வாழ்ந்த அமோரிட்டு மக்களை, அசிரியர்கள் தாக்கி வெளியேற்றினர். பழைய அசிரியப் பேரரசர் புசூர் - சின் ஆட்சிக் காலத்தில் பாபிலோனை ஆண்ட அமோரைட்டு மக்களை வென்றார். லெவண்ட் பகுதியை ஆண்ட அமோரைட்டு மக்களை இட்டைட்டு மக்கள் வெளியேற்றினர்.
விவிலியத்தில் அமோரிட்டு மக்கள்
[தொகு]விவிலியத்தின் தொடக்க நூலில் (10:16) அமோரிட்டு மக்கள் கானான் பகுதியில் வாழ்ந்த மலைமக்கள் எனக் குறித்துள்ளது. வளுமிக்க அமோரைட்டு மக்கள் ஜோர்டான் ஆற்றின் கிழக்கு மற்றும் மேற்கு கரைப் பகுதிகளை ஆண்டு வந்தனர்.[2]
இதனையும் காண்க
[தொகு]- அசிரிய மக்கள்
- இட்டைட்டு மக்கள்
- பாபிலோன் நகரம்
- புது பாபிலோனியப் பேரரசு
- பாபிலோனியா
- பழைய அசிரியப் பேரரசு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Amorite (people)". Encyclopædia Britannica online. Encyclopædia Britannica Inc. பார்க்கப்பட்ட நாள் 30 November 2012.
- ↑ Nave's Topical Bible: Amorites, Nave, Orville J., Retrieved:2013-03-14
ஆதார நூற்பட்டி
[தொகு]- E. Chiera, Sumerian Epics and Myths, Chicago, 1934, Nos.58 and 112;
- E. Chiera, Sumerian Texts of Varied Contents, Chicago, 1934, No.3.;
- H. Frankfort, AAO, pp. 54–8;
- F.R. Fraus, FWH, I (1954);
- G. Roux, Ancient Iraq, London, 1980.
வெளி இணைப்புகள்
[தொகு]- Amorites in the Jewish Encyclopedia