சிஞ்சார் மலைகள்

ஆள்கூறுகள்: 36°22′0.22″N 41°43′18.62″E / 36.3667278°N 41.7218389°E / 36.3667278; 41.7218389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிஞ்சார் மலைகள்
سنجار
Şengal
شەنگال/شەنگار
சிஞ்சார் மலைகளின் செய்மதி காட்சி
உயர்ந்த இடம்
உயரம்1,463 m (4,800 அடி)
ஆள்கூறு36°22′0.22″N 41°43′18.62″E / 36.3667278°N 41.7218389°E / 36.3667278; 41.7218389
புவியியல்
சிஞ்சார் மலைகள் سنجار Şengal شەنگال/شەنگار is located in ஈராக்
சிஞ்சார் மலைகள் سنجار Şengal شەنگال/شەنگار
சிஞ்சார் மலைகள்
سنجار
Şengal
شەنگال/شەنگار
சிஞ்சார் மலைகள், சிஞ்சார் மாவட்டம், நினிவே மாகாணம் ஈராக்

சிஞ்சார் மலைகள் (Sinjar Mountains)[1][2] (அரபு மொழி: جبل سنجارJabal Sinjār; வடமேற்கு ஈராக் நாட்டின் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில், கிழக்கிலிருந்து மேற்காக 100 கிமீ தொலைவிற்கும், 1,463 மீட்டர் உயரத்திலும் பரந்துபட்ட ஒரு மலைதொடராகும். சிரியாவின் வடகிழக்கில் இம்மலைத்தொடர் 25 கிமீ நீளத்திற்கு பரவியுள்ளது. இம்மலைத்தொடரின் தெற்கில் சிஞ்சார் நகரம் அமைந்துள்ளது.[3][4] யாசிதி மக்களால் இம்மலைத்தொடர் புனிதமாகக் கருதப்படுகிறது.[5][6]

சிஞ்சார் சமவெளியில் வேளாண்மை
சிஞ்சார் மலைத்தொடரின் மேற்கில் அமைந்த ஜெபல் சிஞ்சார் பிரதேசம்

மக்கள் & வரலாறு[தொகு]

சிஞ்சார் மலைத்தொடரில் கால்நடைகளை மேய்க்கும் யசீதி மக்கள்

வரலாற்று முந்தைய காலத்தில் இம்மலைத்தொடர், அசிரியர்களுக்கும், இட்டைட்டுகளுக்கும் எல்லையாக விளங்கியது. கிமு 538-இல் பார்த்தியப் பேரரசு ஆட்சியிலும், பின்னர் சிஞ்சார் மலைகளை பார்த்தியர்களிடமிருந்து உரோமைப் பேரரசு கைப்பற்றி கிமு 115 வரை ஆட்சி செலுத்தியது. கிபி 363-இல் பைசாந்தியப் பேரரசுக்கும், சாசானியப் பேரரசுக்கும் நடைபெற்ற போரின் முடிவில் சிஞ்சார் மலைகள் இரு பேரரசுகளின் எல்லைகளாக விளங்கியது.

பாரசீகப் பேரரசின் ஆட்சியால், இம்மலைத்தொடர் பகுதிகளில் சொராட்டிரிய நெறி பரவத்தொடங்கியது. கிபி 4-ஆம் நூற்றாண்டில் இம்மலைப்பகுதிகளில் நெஸ்டோரியன் கிறித்தவம் தழைத்தது. கிபி 6-ஆம் நூற்றாண்டில் இசுலாமியப் படையெடுப்புகளால், இம்மலைதொடர்களில் வாழ்ந்த கிறித்தவர்கள், இசுலாமிய கலீபாக்களுக்கு ஜிசியா வரியைக் கட்டி வாழ்ந்தனர்.[7]

கிபி 12-ஆம் நூற்றாண்டு முதல் சிஞ்சார் மலைத்தொடர்களில் யசீதி மக்கள் கால்நடைகளை மேய்த்து வாழ்கின்றனர்.[8][9] ஊழிக்காலத்தின் முடிவில் நோவாவின் பேழை இம்மலைத்தொடரின் உயர்ந்த முகட்டில் நின்றதாக பழைய ஏற்பாடு கூறுகிறது.[10]

1920-களில் யசீதி மக்கள் அரேபியர்களாலும், மற்றவர்களாலும் துரத்தப்பட்டு இம்மலையில் தஞ்சமடைந்தனர்.[8]

3 ஆகஸ்டு 2014 அன்று சிஞ்சார் நகரம் இசுலாமிய அரசுப் படைகளால் கைப்பற்றப்பட்டு, 40,000 யசீதி மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.[11][12] [13][14] யசீதி மக்களுக்கு எதிரான இசுலாமிய அரசின் கொடூரங்களால் மக்கள் நீர், உணவு, உடை, உறைவிடம் இன்றி அலைந்து திரிந்தனர்.[15] யசீதி மக்களுக்கு ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க அரசின் விமானப் படைகள் வானிலிருந்து உணவு, நீர், மருந்துகளை யசீதி மக்களுக்கு வழங்கினர்.[16][17][18][19] 10 ஆகஸ்டு 2014 முதல் இசுலாமிய அரசுப் படைகளிடமிருந்து, குர்து மக்கள் படையினர் யசீதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கினர்.[14][20][21][22] இசுலாமியப் படைகளால் 7,000 யசீதிப் பெண்கள் பாலியல் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப்பட்டு, 7,000 யசீதி ஆண்களின் தலை வீசப்பட்டு கொல்லப்பட்டனர்.[16][21][23] பல யசீதிப் பெண்கள் இசுலாமிய அரசுப் படையினருக்கு அஞ்சி சிஞ்சார் மலையிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.[24]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Jabal Sinjār (Approved) , United States National Geospatial-Intelligence Agency
 2. சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து جبل سنجار (Native Script) , United States National Geospatial-Intelligence Agency
 3. Edgell, H. S. 2006. Arabian Deserts: Nature, Origin, and Evolution. Springer, Dordrecht, The Netherlands. 592 pp. ISBN 978-1-4020-3969-0
 4. Numan, N. M. S., and N. K. AI-Azzawi. 2002. Progressive Versus Paroxysmal Alpine Folding in Sinjar Anticline Northwestern Iraq. Iraqi Journal of Earth Science. vol. 2, no.2, pp.59-69.
 5. Phillips, David L. (7 October 2013). "Iraqi Kurds: "No Friend but the Mountains"". https://www.huffingtonpost.com/david-l-phillips/iraqi-kurds-no-friend-but_b_4045389.html. 
 6. By Rudaw. "ISIS resumes attacks on Yezidis in Shingal". http://www.rudaw.net/english/middleeast/iraq/20102014. 
 7. Fuccaro, Nelida (1995). Aspects of the social and political history of the Yazidi enclave of Jabal Sinjar (Iraq) under the British mandate, 1919-1932. Durham University. பக். 22–3. http://etheses.dur.ac.uk/5832/1/5832_3247.PDF?UkUDh:CyT. பார்த்த நாள்: 13 May 2018. 
 8. 8.0 8.1 Tim Lister (August 12, 2014). "Dehydration or massacre: Thousands caught in ISIS chokehold". CNN. http://www.cnn.com/2014/08/10/world/meast/iraq-isis-sinjar/index.html. பார்த்த நாள்: 2014-08-13. 
 9. Fuccaro, Nelida (1999). The Other Kurds: Yazidis in Colonial Iraq. London: I.B.Tauris. பக். 47–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86064-170-1. 
 10. Parry, Oswald Hutton (1895). Six Months in a Syrian Monastery: Being the Record of a Visit to the Head Quarters of the Syrian Church in Mesopotamia: With Some Account of the Yazidis Or Devil Worshippers of Mosul and El Jilwah, Their Sacred Book. London: H. Cox. பக். 381. இணையக் கணினி நூலக மையம்:3968331. 
 11. Martin Chulov (3 August 2014). "40,000 Iraqis stranded on mountain as Isis jihadists threaten death". தி கார்டியன். https://www.theguardian.com/world/2014/aug/06/40000-iraqis-stranded-mountain-isis-death-threat. பார்த்த நாள்: 2014-08-06. 
 12. "Northern Iraq: UN voices concern about civilians’ safety, need for humanitarian aid". United Nations News Centre. 2014-08-08. https://www.un.org/apps/news/story.asp?NewsID=48444#.U-ppGGNCxI0. பார்த்த நாள்: 2014-08-12. 
 13. "Irak : la ville de Sinjar tombe aux mains de l'Etat islamique" (in French). Le Monde. 2014-08-03. http://www.lemonde.fr/proche-orient/article/2014/08/03/irak-la-ville-de-sinjar-tombe-aux-mains-de-l-etat-islamique_4466279_3218.html. பார்த்த நாள்: 2014-08-12. 
 14. 14.0 14.1 "Thousands of Yazidis 'still trapped' on Iraq mountain". BBC News. 2014-08-12. https://www.bbc.com/news/world-middle-east-28756544. பார்த்த நாள்: 2014-08-12. 
 15. "People Eating Leaves to Survive on Shingal Mountain, Where Three More Die". Rûdaw.net. 2014-08-07. http://rudaw.net/english/middleeast/iraq/070820143. பார்த்த நாள்: 2014-08-12. 
 16. 16.0 16.1 "Iraq crisis: No quick fix, Barack Obama warns". BBC News. 2014-08-09. https://www.bbc.co.uk/news/world-middle-east-28725908. பார்த்த நாள்: 2014-08-09. 
 17. "Britain's RAF makes second aid drop to Mount Sinjar Iraqis trapped by Isis – video". தி கார்டியன். 2014-08-12. https://www.theguardian.com/world/video/2014/aug/12/raf-drop-aid-mount-sinjar-iraqis-trapped-isis-video. பார்த்த நாள்: 2014-08-12. 
 18. "JTF633 supports Herc mercy dash". Media Release (Department of Defence). 22 August 2014 இம் மூலத்தில் இருந்து 26 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140826160817/http://news.defence.gov.au/stories/2014/08/jtf633-supports-herc-mercy-dash/. பார்த்த நாள்: 25 August 2014. 
 19. "Irak : les opérations pour sauver les réfugiés yézidis continuent" (in French). Le Monde. 2014-08-12. http://www.lemonde.fr/proche-orient/article/2014/08/12/la-syrie-en-guerre-accueille-1-000-familles-de-refugies-fuyant-l-irak_4470547_3218.html. பார்த்த நாள்: 2014-08-12. 
 20. Parkinson, Joe (18 August 2014). "Iraq Crisis: Kurds Push to Take Mosul Dam as U.S. Gains Controversial Guerrilla Ally". https://www.wsj.com/articles/kurds-with-u-s-aid-push-to-take-mosul-dam-1408322338. 
 21. 21.0 21.1 "Irak: les yazidis fuient les atrocités des djihadistes" (in French). Le Figaro. 10 August 2014 இம் மூலத்தில் இருந்து 2014-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6RjrIjnKe?url=http://www.lefigaro.fr/international/2014/08/10/01003-20140810ARTFIG00116-irak-les-frappes-americaines-se-poursuivent-tandis-que-les-yazidis-fuient-les-djihadistes.php. 
 22. Rubin, Alissa J.; Almukhtar, Sarah; Kakol, Kamil (April 2, 2018). "In Iraq, I Found Checkpoints as Endless as the Whims of Armed Men". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/04/02/magazine/iraq-sinjar-checkpoints-militias.html?smid=tw-nytimesatwar&smtyp=cur. 
 23. "Etat islamique en Irak : décapités, crucifiés ou exécutés, les yézidis sont massacrés par les djihadistes" (in French). Atlantico. 9 August 2014 இம் மூலத்தில் இருந்து 11 ஆகஸ்ட் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6Rjrq80F5?url=http://www.atlantico.fr/pepites/etat-islamique-en-irak-decapites-crucifies-ou-executes-yezidis-sont-massacres-djihadistes-1698567.html. 
 24. Ahmed, Havidar (14 August 2014). "The Yezidi Exodus, Girls Raped by ISIS Jump to their Death on Mount Shingal". Rudaw Media Network. http://rudaw.net/english/kurdistan/140820142. பார்த்த நாள்: 26 August 2014. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஞ்சார்_மலைகள்&oldid=3714920" இருந்து மீள்விக்கப்பட்டது