இட்டைட்டு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்டைட்டு
𒉈𒅆𒇷 nešili
Hittite Cuneiform Tablet- Cultic Festival Script.jpg
பிராந்தியம்அனத்தோலியா[1]
Eraகிமு 16 முதல் 13 ஆம் நூ.ஆ. வரை
இந்திய-ஐரோப்பியம்
இட்டைட்டு ஆப்பெழுத்து
மொழிக் குறியீடுகள்
ISO 639-2hit
ISO 639-3Variously:
oht — பழைய இட்டைட்டு
hit — (செந்நெறி) இட்டைட்டு
htx — இடை இட்டைட்டு
nei — புதிய இட்டைட்டு
மொழிசார் பட்டியல்
oht பழைய இட்டைட்டு
 hit (செந்நெறி) இட்டைட்டு
 htx இடை இட்டைட்டு
 nei புதிய இட்டைட்டு
மொழிக் குறிப்புhitt1242[2]

இட்டைட்டு மொழி (Hittite Language) இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இறந்த மொழி. இன்று துருக்கி எனப்படும் பண்டைய அனதோலியாவின் வட மத்திய பகுதியில், அத்துசாவை (Hattusa) மையமாகக்கொண்டு அமைந்திருந்த பேரரசொன்றை உருவாக்கிய இட்டைட்டு மக்கள் இம்மொழியைப் பேசினர். கிமு 16 தொடக்கம் கிமு 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இம்மொழியின் ஆப்பெழுத்துப் பதிவுச் சான்றுகள் காணப்படுகின்றன. அதேவேளை கிமு 20 ஆம் நூற்றாண்டில் இருந்தே பழம் அசிரிய மொழிப் பதிவுகளில் இட்டைட்டு மொழிக் கடன்சொற்களையும், ஏராளமான மக்கட்பெயர்களையும் காணமுடிகிறது.

பிந்திய வெண்கலக் காலத்தை அண்டி, இட்டைட்டு மொழி தனது தகுதியை அதற்கு நெருங்கிய உறவுள்ள லூவிய மொழியிடம் இழக்கத் தொடங்கியது. கிமு 13 ஆம் நூற்றாண்டில், லூவிய மொழியே இட்டைட்டுத் தலைநகரமான அத்துசாவில் பரவலாகப் பேசப்பட்ட மொழியாக இருந்தது.[3] பொதுவான வெண்கலக்கால வீழ்ச்சியின் ஒரு பகுதியாக இட்டைட்டுப் பேரரசு வீழ்ச்சியடைந்தது இதன் பின்னர் தொடக்க இரும்புக்காலத்தில் தென்மேற்கு அனத்தோலியாவிலும், வடக்கு சிரியாவிலும் உருவான புதிய இட்டைட்டு நாடுகளின் முதன்மை மொழியாக லூவிய மொழி விளங்கியது. இட்டைட்டு மொழியே சான்றுகளுடன் கூடிய மிகப்பழைய இந்திய-ஐரோப்பிய மொழி ஆகும். இம்மொழிக் குடும்பத்தின் அனத்தோலியக் கிளையின் பெருமளவு அறியப்பட்ட மொழியும் இதுவே.

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. /xlu.html Cuneiform Luwian ("Hittite")
  2. Nordhoff, Sebastian; Hammarström, Harald; Forkel, Robert ஏனையோர்., தொகுப்பாசிரியர்கள் (2013). "இட்டைட்டு". Glottolog 2.2. Leipzig: Max Planck Institute for Evolutionary Anthropology. http://glottolog.org/resource/languoid/id/hitt1242. 
  3. Yakubovich 2010, p. 307
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டைட்டு_மொழி&oldid=2561755" இருந்து மீள்விக்கப்பட்டது