காசிட்டு மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபிலோனியாவின் காசிட்டு வம்சம்

கிமு 1531 — 1155
 

கிமு 13ம் நூற்றாண்டில் காசிட்டுகள் ஆட்சியில் பாபிலோனியாப் பேரரசு
தலைநகரம் துர்-குரிகல்சு
மொழி(கள்) காசிட்டு மொழி
அரசாங்கம் முடியாட்சி
பாபிலோனிய மன்னர்
 -  கிமு 1500 இரண்டாம் அகும் (முதல்)
 -  கிமு 1157—1155 என்லில்- நதின் - அகி (இறுதி)
வரலாற்றுக் காலம் வெண்கலக் காலம்
 -  உருவாக்கம் கிமு 1531
 -  பாபிலோனை அழித்தல் 1531
 -  காசிட்டு மன்னர் சாபாப - சூமா - இட்டின் அசிரியா மற்றும் ஈலம் மீது படையெடுத்தல் கிமு 1158
 -  குலைவு கிமு 1155
தற்போதைய பகுதிகள்  ஈரான்
 ஈராக்
காசிட்டுகளின் இராச்சியம் உள்ளடக்கிய கிமு 1400ல் பண்டைய அண்மை கிழக்கு
தற்கால ஈராக்கில் காசிட்டுகள் கைப்பற்றிய முக்கிய நகரங்களின் வரைபடம்]](clickable map)

காசிட்டு மக்கள் (Kassites) (கிமு 1531 — 1155) பண்டைய அண்மை கிழக்கில், பழைய பாபிலோனியப் பேரரசுக்குப் பின், பாபிலோனியாவை கிமு 1531 முதல் கிமு 1155 முடிய 366 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள்.[1]

1595ல் இட்டைட்டு பேரரசினர் பாபிலோனியாவை தாக்கி அழித்த போது, காசிட்டு மக்கள் பாபிலோனியாவைக் கைப்பற்றி துர் - குரிகல்சு நகரத்தில் காசிட்டு வம்சத்தை நிறுவினர். [2][3]

இராணுவ பழங்குடி மக்களான காசிட்டு வம்ச ஆட்சியாளர்கள் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்கினாலும், உள்ளூரில் செல்வாக்கு பெற இயலவில்லை.[4] காசிட்டு வம்சத்தின் 500 ஆண்டு ஆட்சியில் பாபிலோனிய பண்பாட்டை வளர்த்தெடுத்தனர். [3] காசிட்டு மக்களின் போர்க் குதிரைகள் மற்றும் போர் இரதங்கள் போற்றப்படும் முறை முதன்முதலில் பபிலோனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. [4]

வரலாறு[தொகு]

காசிட்டு மக்களின் தாயகம் தற்கால ஈரானின் சக்ரோசு மலைத்தொடர் ஆகும். ஈல மக்கள், குடியன்களைப் போன்று காசிட்டு மக்களும் மெசொப்பொத்தேமியாவில் தங்களது இராச்சியத்தை நிறுவினர். [5][6]

அம்முராபியின் மகன் ஆட்சியில் கிமு 18ம் நூற்றாண்டில் பாபிலோனியா எதிரிகளால் தாக்கப்படும் போது, காசிட்டு மக்கள் பாபிலோனில் குடியேறினர். கிமு 1595ல் பாபிலோன் நகரம் இட்டைட்டு பேரரசால் அழிந்த பின்னர், காசிட்டு மக்கள் துர் - குரிகல்சு நகரத்தை நிறுவி, 1531ல் காசிட்டு வம்ச ஆட்சியை மெசொப்பொத்தேமியாவில் நிறுவி, தற்கால ஈராக் மற்றும் ஈரானின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தனர்.

பாபிலோனியாவை ஆண்ட காசிட்டு வம்ச ஆட்சியாளர்கள்[தொகு]

பண்பாடு, மொழி, சமூகம், சமயம்[தொகு]

பாபிலோனியப் பெயர்களை காசிட்டு வம்ச மன்னர்கள் சூட்டிக் கொண்டாலும், காசிட்டு மக்களின் பழங்குடி மரபுப்படி வாழ்ந்தனர். காசிட்டு மக்கள் தங்கள் குலமரபை போற்றினர்.[7]

மித்தானி இராச்சிய மக்கள் போன்று காசிட்டு மக்கள், இந்திய-ஐரோப்பிய மொழியை பேசினர். [3] [8][9]

காசிட்டு வம்சத்தின் இறுதி எட்டு மன்னர்கள் காலத்தில், காசிட்டு மக்கள் அக்காதியம் மொழி பேசினர். காசிட்டு மக்கள் அசிரியர்களுடன் திருமண உறவு பூண்டனர்.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Trevor Bryce, 2009, The Routledge Handbook of the Peoples and Places of Ancient Western Asia: The Near East from the Early Bronze Age to the Fall of the Persian Empire, Abingdon, Routledge, p. 375.
  2. "The Old Hittite Kingdom". Encyclopædia Britannica Online. Encyclopædia Britannica, Inc. 8 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 "The Kassites in Babylonia". Encyclopædia Britannica. 8 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 "Kassite (people)". Encyclopædia Britannica. 8 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Lorestan - Facts from the Encyclopedia - Yahoo! Education". Education.yahoo.com. 2013-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-02-12 அன்று பார்க்கப்பட்டது.
  6. "History of Iran". Iranologie.com. 1997-01-01. 2013-02-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-02-12 அன்று பார்க்கப்பட்டது.
  7. J. Boardman et al. (eds) Cambridge Ancient History Vol III Pt 1 (2nd Ed) 1982
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; India: Early Vedic period என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Iranian art and architecture என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kassites
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிட்டு_மக்கள்&oldid=3586558" இருந்து மீள்விக்கப்பட்டது