இசிமூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்காதியர்களின் கிமு 2300 காலத்திய உருளை முத்திரையில் பொறிக்கப்பட்ட இஷ்தர், உது, என்கி மற்றும் இரு முகம் கொண்ட இசிமூத் சிறு தெய்வம்

இசிமூத் (Isimud) பண்டைய மெசொப்பொத்தேமியாவின் சுமேரியர்களின் சிறு தெய்வம் ஆவார். இச்சிறு தெய்வம் என்கி எனும் பெருந்தெய்வத்தின் ஆலோசகர் மற்றும் தூதுவர் ஆவார். இசிமூத் சிறு தெய்வம் எதிர்எதிர் திசையில் இரண்டு முகங்கள் கொண்டுள்ளது.

சுமேரியத் தொன்மவியலின் படி, இஷ்தர் மற்றும் என்கி எனும் பெரும் தெய்வங்கள் எரிது நகரத்தின் கோயிலுக்கு வருகை தரும் போது, இசிமூத் அவர்களை வரவேற்றார். கடவுள் என்லில், என்கி கடவுளுக்கு வழங்கிய சுமேரிய மெஸ்[1] எனும் தர்மசாத்திர நூல் காணாமல் போனது குறித்து கடவுள் என்கிக்கு இசிமூத் தகவல் கொடுத்தார்.[2] சுமேரியத் தொன்மவியலில் தூதுவராக செய்படும் இசிமூத், இஷ்தர் கடவுளிடம் மெஸ் சட்ட நூல்களை கடவுள் என்கியிடம் திருப்பித் தரும்படியும், இல்லை எனில் கடுமையான விளைவுகள் எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Me (mythology)
  2. "Inana and Enki: translation". etcsl.orinst.ox.ac.uk.

உசாத்துணை[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசிமூத்&oldid=3851132" இலிருந்து மீள்விக்கப்பட்டது