சிதோன்
சிதோன்
صيدا சைதா | |
---|---|
நகரம் | |
லெபனான் நாட்டில் சிதோன் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 33°33′38″N 35°23′53″E / 33.56056°N 35.39806°E | |
நாடு | லெபனான் |
ஆளுநகரம் | தெற்கு லெபனான் ஆளுநகரம் |
மாவட்டம் | சிதோன் மாவட்டம் |
பரப்பளவு | |
• நகரம் | 3 sq mi (7 km2) |
• மாநகரம் | 10 sq mi (25 km2) |
மக்கள்தொகை | |
• நகரம் | 80,000 |
• பெருநகர் | 2,66,000 |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
இணையதளம் | www |
சிதோன் (Sidon) நகரத்தை உள்ளூர் மக்கள் சைதா (Sayda or Saida) (அரபு மொழி: صيدا) என அழைக்கின்றனர். லெபனான் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான சிதோன் நகரம், தெற்கு லெபனான் ஆளுநகரம் மற்றும் சிதோன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாக உள்ளது.[1]
அமைவிடம்
[தொகு]நடுநிலக் கடலின் கிழக்கு கடற்கரையில் சிதோன் நகரம் உள்ளது. லெபனான் நாட்டின் டயர் நகரத்திற்கு தெற்கே அமைந்த சிதோன் நகரம், தேசியத் தலைநகரமான பெய்ரூத்திற்கு வடக்கே 40 கிமீ தொலைவில் உள்ளது. சிதோன் நகரத்தின் மக்கள் தொகை 80,000 ஆகும். சிதோன் பெருநகர மக்கள் தொகை 2,66,000 ஆகும்.
பெயர்க் காரணம்
[தொகு]பிலிஸ்தியர்கள் பேசிய பொனீசிய மொழியில் இந்நகரத்தை சிதுன் (Ṣīdūn) என அழைத்தனர். சிதுன் என்பதற்கு மீன்பிடித்தல் அல்லது மீன்பிடி நகரம் எனப்பொருள்படும்.[2] விவிலிய எபிரேயம், சிரியாக் மொழி மற்றும் அரபு மொழியில் சிதோன் நகரம் குறித்தான சொற்கள் உள்ளது. நவீன அரபு மொழியில் சிதோன் நகரத்தை சைதா எனக்குறிப்பிடுகிறது. யூதர்களின் தொடக்க நூலில் நோவாவின் பேரன் கானோன் என்பவர் சிதோன் நகரத்தை நிறுவியதாக கூறப்படுகிறது.
வரலாறு
[தொகு]பண்டைய போனீசியா (கிமு 1200 – கிமு 539) நாட்டின் முதன்மை நகரங்களில் ஒன்றாக சிதோன் நகரம் விளங்கியது. பிலிஸ்தியர்கள் காலத்தில் சிதோன் நகரம் கண்ணாடி உற்பத்தி தொழில், சாயத் தொழிலில் சிறந்து விளங்கியது.
கிறித்துவத்திற்கு முன்னர் சிதோன் நகரம் அசிரியர்கள், பாபிலோனியர்கள், எகிப்தியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. உரோமைப் பேரரசின் முதலாம் ஏரோது சிதோன் பகுதியின் ஆட்சியாளராக இருக்கும் போது இயேசுவும், புனித சவுலும் சிதோன் நகரத்திற்கு வருகை புரிந்ததாக எபிரேய விவிலியம் கூறுகிறது. இறுதியில் கிபி 632-இல் சிதோன் நகரம், ராசிதீன் கலீபாக்களின் படையெடுப்புகளால் கைப்பற்றப்பட்டது. பின்னர் இந்நகரத்தை துருக்கிய உதுமானியப் பேரரசினர் கைப்பற்றினர். போனீசியாவின் பிற நகர இராச்சியங்கள் போன்று சிதோன் இராச்சியமும் பல அரசுகளின் படையெடுப்புகளால் துயரப்பட்டது.
கிமு 351-இல் பாரசீக அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸ் சிதோன் நகரத்தை கைப்பற்றினார். பேரரசர் அலெக்சாண்டருக்குப் பின்னர் கிமு 333-இல் ஹெலனியக் காலத்தில் கிரேக்க நாட்டின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றாக சிதோன் விளங்கியது.[3]
பின்னர் கிமு 33-இல் உரோமைப் பேரரசு ஆட்சியின் கீழ் சிதோன் நகரம் சென்றது. உரோமானியர்கள் இந்நகரத்தில் புகழ்பெற்ற அரண்மனைகள் மற்றும் ஆலயங்கள் நிறுவினர். கிபி 551-இல் பைசாந்தியப் பேரரசு ஆட்சியின் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிதோன் நகரத்தின் பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தது. கிபி 636-இல் அரபு இசுலாமிய ராசிதீன் கலிபாக்களின் படையெடுப்புகளால் சிதோன் நகரம் அரேபியர்களின் ஆட்சியின் கீழ் சென்றது.
4 திசம்பர் 1110-இல் நடைபெற்ற சிலுவைப் போரின் போது, ஜெருசலம் இராச்சியப் படைகளும், நார்வே இராச்சியப் படைகளும் சிதோன் நகரத்தை இசுலாமியர்களிடமிருந்து கைப்பற்றினர். 1187-இல் குர்து இன இசுலாமிய மன்னராக சலாகுத்தீன் சிதோன் நகரத்தை கைப்பற்றினார். கிபி 1249-இல் சாரசானியர்கள் சிதோன் நகரத்தை கைப்பற்றினர். 1260-இல் மங்கோலியர்கள் சிதோன் நகரத்தை கைப்பற்றி அழித்தனர். பின்னர் சிதோன் நகரம் துருக்கிய உதுமானியப் பேரரசு ஆட்சியில் 16-ஆம் நூற்றாண்டு வரை இருந்தது. 1839 - 1841-இல் நடைபெற்ற எகிப்திய - உதுமானியப் போரில் எகிப்தியர்கள் சிதோன் நகரத்தை கைப்பற்றினர். பின்னர் பிரித்தானியப் படைகளின் ஆதரவுடன் உதுமானியப் பேரரசினர் சிதோன் நகரத்தை 26 செப்டம்பர் 1840 அன்று எகிப்தியர்களிடமிருந்து கைப்பற்றினர்.
நவீன காலம்
[தொகு]முதல் உலகப் போருக்குப் பின்னர் பிரான்சு நாட்டின் காலனியாதிக்கப் பகுதியாக லெபனான் நாட்டுடன் சிதோன் நகரமும் இருந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவின் போது, லெபனான் தன்னாட்சி பெற்ற நாடானது. 1948-இல் பாலஸ்தீன அகதிகள் சிதோன் நகரத்தில் குடியேறினர்.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிதோன் நகரத்தின் மக்கள் தொகை 80,000 ஆகும். பெருநகர சிதோனின் மக்கள் தொகை 2,66,000 ஆகும். சிதோன் நகரத்தில் கிரேக்க கிறித்துவக் கத்தோலிக்கர்கள் வாழ்கின்றனர்.[4] தெற்கு சிதோனில் சியா இசுலாமியர்கள் அதிகமாக வாழ்கின்றனர். மேலும் யூதர்கள் 3,588 பேர் வாழ்கின்றனர்.[5]
சமயம் | வாக்காளர்கள் | % | சமயம் | வாக்காளர்கள் | % |
---|---|---|---|---|---|
சன்னி இசுலாமியர் | 36163 | 79.7 | |||
சியா இசுலாமியர் | 4888 | 10.8 | உரோமன் கத்தோலிக்கர்கள் | 82 | 0.2 |
ஆர்மீனிய கத்தோலிக்கர்கள் | 38 | 0.1 | |||
துருசிகள் | 43 | 0.1 | சால்டிய கத்தோலிக்கர்கள் | 19 | 0.0 |
ஆலவாய்டுகள் | 2 | 0.0 | சிரியாக் கத்தோலிக்கர்கள் | 18 | 0.0 |
மெல்கைட்டு கிரேக்க கத்தோலிக்கர்கள் | 1686 | 3.7 | சிரியாக் கத்தோலிக்கர்கள் | 17 | 0.0 |
மரோனைட்டு கிறித்துவர்கள் | 1513 | 3.3 | கிழக்கு அசிரியக் கிறித்தவர்கள் | 4 | 0.0 |
லெபனான் கிரேக்க கிழக்கு திருச்சபையினர் | 310 | 0.7 | காப்டுகள் | 1 | 0.0 |
வைதீக ஆர்மீனியர்கள் | 256 | 0.6 | பிற கிறித்தவர்கள் | 19 | 0.0 |
கிறித்தவம் பரப்பும் கொள்கையினர் | 171 | 0.4 | 161 | 0.4 |
கல்வி
[தொகு]2006-ஆம் ஆண்டின் கணக்குப்படி சிதோன் நகரத்தின் 29 பள்ளிகளில் 18,731 மாணவர்கள் படித்தனர். மேலும் இங்கு 10 பல்கலைக் கழகங்கள் உள்ளது.
தொல்லியல்
[தொகு]சிதோன் நகராத்தின் கிழக்கில் உள்ள தொல்லியல் களத்தில் கிமு 3800 - 3200 இடைப்பட்ட காலத்திற்குரிய தொல்பொருள்களான குறுகிய கோடாரிகள் கண்டெடுக்கப்பட்டது.[6]
விவிலியத்தில் சிதோன் நகரம்
[தொகு]எபிரேய விவிலியத்தில் சிதோன் நகரம் குறித்து பல இடங்களில் கூறப்பட்டுள்ளது:
- சிதோன் நகரத்தின் பெயர் நோவாவின் பேரன் கானான் பெயரால் வழங்கப்படுகிறது. (தொடக்க நூல் 10:15, 19).
- சிதோன் நகரம் போனீசியர்களின் தாய் வீடாக விளங்கியது.[7] (யோசுவா 11:8; 19:28).
- டயர் நகரத்தின் தாய் நகரமாக சிதோன் நகரம் விளங்கியது. (நியாயாபதிகள் 1:31).
- சிதோனியர்கள் நீண்ட காலமாக இஸ்ரவேலர்களை அடக்கி வைத்தனர். (நியாயாபதிகள் 10:12).
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sidon, LEBANON
- ↑ Frederick Carl Eiselen (1907). Sidon: A Study in Oriental History, Volume 4. Columbia University Press. p. 12.
- ↑ "Istanbul Archaeology Museum". The New York Times இம் மூலத்தில் இருந்து 24 May 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120524104810/http://travel.nytimes.com/travel/guides/europe/turkey/istanbul/attraction-detail.html?vid=1154654614207. பார்த்த நாள்: 10 May 2008.
- ↑ "Saïdā (Sidone) (Maronite Eparchy) [Catholic-Hierarchy]". www.catholic-hierarchy.org. பார்க்கப்பட்ட நாள் 2019-03-28.
- ↑ Simon, Reeva S., Michael M. Laskier, and Sara Reguer, eds. 2003. The Jews of the Middle East and North Africa in Modern Times. New York: Columbia University Press. P. 332
- ↑ Gigues, P.E., Leba'a, Kafer Garra et Qraye, nécropoles dde la région sidonienne. BMB, vol. 1, pp. 35–76, vol. 2, pp. 30–72, vol. 3, pp. 54–63.
- ↑ Sidon
உசாத்துணை
[தொகு]- Additional notes taken from Collier's Encyclopedia (1967 edition)
மேலும் படிக்க
[தொகு]- Aubet, Maria Eugenia. The Phoenicians and the West: Politics, Colonies and Trade. 2d ed. Translated by Mary Turton. Cambridge, UK: Cambridge University Press, 2001.
- Markoe, Glenn. Phoenicians. Vol. 2, Peoples of the Past. Berkeley: University of California Press, 2000.
- Moscati, Sabatino. The World of the Phoenicians. London: Phoenix Giant, 1999.
வெளி இணைப்புகள்
[தொகு]Sidon பற்றிய நூலக ஆதாரங்கள் |
- Sidon On Google Maps Street View By Paul Saad
- Sidonianews (Sidon News Portal) (அரபு மொழி)
- Lebanon, the Cedars' Land: Sidon
- Sidon excavations