உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிஸ்தியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிமு 1,200 முதல் கிமு 539 முடிய பிலிஸ்தியர்கள் ஆண்ட போனீசியா பகுதி (பச்சை நிறம்)
மூன்றாம் ராமேசஸ் (கிமு 1185-1152) ஆட்சியின் போது எகிப்தியர்களால் சிறைபிடிக்கப்பட்ட பிலிஸ்திய போர்க்கைதிகளின் காட்சி, இடம் மெடிநெத் அபு

பிலிஸ்தியர்கள் அல்லது பெலஸ்தியர்கள் (Philistine) தற்கால கிரேக்கத்திற்கும்துருக்கி இடையே உள்ள ஏஜியன் கடலில் உள்ள கிரீட் மற்றும் சைப்பிரசு தீவுகளிலிருந்து, கிமு 12-ஆம் நூற்றாண்டில் இசுரவேலர்களின் நாட்டின் தெற்குப் பகுதியில், மத்தியதரைக் கடல் ஒட்டிய காசா, அஸ்தோது, எக்ரோன் , காத் கானான் [1] மற்றும் அஸ்கெலோன் [2]போன்ற பிரதேசங்களில் குடியேறிய கிரேக்க இன மக்கள் ஆவார்.[3] இம்மக்கள் பெலிஸ்த்திய மொழியைப் பேசினர். பிலிஸ்தியர்கள் ஆண்ட நாட்டை போனீசியா என்பர்.

வரலாற்று ஆவணங்களில் அல்லது தொல்லியல் ஆவணங்களில் பிலிஸ்திய மக்களைக் குறித்தான குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை எனிலும், யூதர்களின் பழைய ஏற்பாடு நூலில் பிலிஸ்திய மக்களைக் குறித்த குறிப்புகள் பரவலாக உள்ளது.

யூதர்களின் பழைய ஏற்பாடு நூலின் இணைச் சட்டம் (நூல்): 2:23 மற்றும் எரேமியா (நூல்): 47:4-இன் படி, பிலிஸ்திய மக்கள் கிரிட் தீவிலிருந்து இஸ்ரேலின் தென் பகுதியில் குடியேறிய மக்கள் எனக்கூறுகிறது.[4]

புது எகிப்திய பேரரசரும், எகிப்தின் இருபதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் மூன்றாம் ராமேசசின் கல்லறைக் கட்டிடத்தில் (கிமு 1186 – 1155), பிலிஸ்திய மக்கள் குறித்த கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளது. அக்கல்வெட்டில் பிலிஸ்திய மக்களை பிர்ஸ்ட்கள் என்றும் கடலோடிகள் என்றும், பிலிஸ்தியர்கள் கிமு 1190-இல் அனதோலியா, சைப்பிரசு மற்றும் சிரியாவின் பகுதிகளை தாக்கி, இறுதியில் எகிப்தை தாக்கியதாகவும், போரில் தோற்ற பிலிஸ்தியர்கள் எகிப்தியர்களின் அனுமதியுடன் பாலஸ்தீனத்தின் கடற்கரைப் பகுதிகளில் குடியேறியதாக குறிப்புகள் உள்ளது. பிலிஸ்திய மக்கள் வாழ்ந்த பகுதியை பின்னர் உரோமானியர்கள் பாலஸ்தீனம் எனப்பெயரிட்டனர்.[5]

போர்க் குணம் கொண்ட பிலிஸ்திய மக்கள் பயங்கரமான போர் ஆயுதங்களைக் கொண்டு இசுரவேல் மக்களுடன் அவ்வப்போது போரிட்டனர் என்றும், இறுதியில் இஸ்ரவேலர்களின் மன்னர் தாவீது, பிலிஸ்தியத் தலைவனை வென்றதாக யூதர்களின் பழைய ஏற்பாடு நூலின் தொடக்க நூல் 10:14 மற்றும் விடுதலைப் பயணம் 13:17 ஆகியவைகளில் பேசப்படுகிறது.[சான்று தேவை]

பிலிஸ்தியர்களில் உடல் வலிமைப் படைத்த போர் வீரனான கோலியாத்தை, இஸ்ரவேலச் சிறுவன் தாவீது கவண் கல் கொண்டு தாக்கி அழித்தார் என விவிலியத்தின் சாமுவேல் நூல் கூறுகிறது.[6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gath city
  2. Ashkelon
  3. Philistine PEOPLE
  4. Who Were the Philistines?
  5. Philistine Pepole
  6. Books of Samuel

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிஸ்தியர்கள்&oldid=3825263" இலிருந்து மீள்விக்கப்பட்டது