கிரிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கிரிட் (Grid) அல்லது வரிச் சட்டம் என்பது கோட்பாட்டளவில் எளிமையானதும் வடிவமைப்பதில் கடினமானதுமான ஒரு கதிரியல் கருவியாகும். நோயாளியிடம் தோன்றும் சிதறிய கதிர்களை சிறப்பாக அகற்றப் பயன்படுகிறது. இக் கருவி 1913 -ல் டாக்டர் குசுடவ் பக்கி (Dr. Gustave Bucky) என்பவரால் கண்டறிந்து பயன்படுத்தப்பட்டது. பெரிய புலத்தினைப் பயன்படுத்தும் போது அதிக சிதறிய கதிர்கள் தோன்றுகின்றன. அவைகளை அகற்ற இக்கருவியே சிறந்தது.

அமைப்பும் செயற்பாடும்[தொகு]

கிரிடில் பல மெல்லிய காரீய நாடாக்கள் செங்குத்தாக அமைந்துள்ளன. அடுத்தடுத்த நாடாக்களுக்கிடையேயுள்ள பகுதி எக்சு-கதிர்களை எளிதில் கடத்தும் தன்மையுடையன. இந்த நாடாக்கள் ஒரே கனமும் உயரமும் கொண்டுள்ளன. இலக்கில் தோன்றி வெளிப்படும் முதன்மைக் கதிர்கள் நேராகக் கடத்தும் பகுதிவழிச் சென்று படத்தாளினை அடையும். அதேநேரம் சிதறிய கதிர்கள் காரீயநாடாவால் தடுத்து நிறுத்தப்படுகின்றன. காரீய நாடாக்களுக்கு இடைப்பட்ட பகுதி அலுமினியத்தால் நிரப்பப்பட்டுள்ளது.

வகைகள்[தொகு]

கிரிட் நிலையான கிரிட் (stationary grid), அசையும் கிரிட் (Moving grid), அங்குமிங்கும் அதிரும் கிரிட் (Osillating grid), குறுக்குவரி கிரிட் (crossed grid) என பல வகையுள்ளன. மேலும் குவி கிரிட் (Focused grid) போலி குவி கிரிட் (psuedo focused grid) களும் உள்ளன. பொதுவான பயன்பாட்டிலுள்ளது நேரியல்கிரிட் (Linear grid) ஆகும். இதில் காரீயப்பட்டைகள் ஒருபோகாக உள்ளன.

ஆதாரம்[தொகு]

  • Radio Physics and Dark room Procedures Jaypee Bros. Medical publishers.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிட்&oldid=1629406" இருந்து மீள்விக்கப்பட்டது