கவண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கவண், கவணை - கருவிகள்
thunb
இக்காலத்தில் கைப்பிடி வைத்துச் செய்யப்பட்ட கவண்

கவண் விளையாட்டை ஒரு தொழில் விளையாட்டாகவும் கொள்ளலாம்.

சங்க இலக்கியத்தில்[தொகு]

மலையில் புனத்தில் விளைந்திருக்கும் தினையை இரவு வேளையில் யானைகள் மேயவருவதை அதன் ஓசையால் உணர்ந்துகொண்ட கானவன் யானைக்கூட்டத்தை ஓட்டுவதற்காகப் பரண்மீது இருந்துகொண்டு கல்லறிந்தான்.

அந்தக் கல் வானத்திலிருந்து விண்மீன் விழுவது போலப் பாய்ந்து விழுந்தது. வழியில் வேங்கை மலர்களை உதிரச்செய்தது. அடுத்துத் தேன்கூட்டைச் சிதைத்தது. இறுதியில் பலாப்பழத்துக்குள்ளே நுழைந்து தங்கிவிட்டது. [1]

இது சங்க கால ஆடவரின் கைவன்மையைக் காட்டுகிறது.

இவற்றையும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

 1.  
  இரவில் மேயல் மரூஉம் யானைக்
  கால்வல் இயக்கம் ஒற்றி நடுநாள்
  வரையிடைக் கழுதின் வன்கைக் கானவன்
  கடுவிசைக் கவணின் எறிந்த சிறுகல்
  உடுவுறு கவணின் போகிச் சாரல்
  வேங்கை விரியிணர் சிதறி, தேன் சிதையூஉ
  பலவின் பழத்தில் தங்கும் – அகநானூறு 292

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவண்&oldid=1039059" இருந்து மீள்விக்கப்பட்டது