அசிரிய மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசிரியர்கள்
Assyrians
Āṯūrāyē / Āshūrāyē /Sūrāyē
மொத்த மக்கள்தொகை
அண். 3.3 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 ஈராக் 1,300,000[1]
 சிரியா 75,000[2]
 ஈரான் 80,000[3]
 துருக்கி 5,000[4]
 அமெரிக்கா 83,000[5]
 சுவீடன் 80,000[6]
 யோர்தான் 77,000[7][8]
 ஆத்திரேலியா 24,000[9]
 செருமனி 23,000[மேற்கோள் தேவை]
 பிரான்ஸ் 15,000[10]
 உருசியா 14,000[11]
 கனடா 7,000[12]
 ஆர்மீனியா 3,409[13]
மொழி(கள்)
Neo-Aramaic
(various Neo-Aramaic dialects)
சமயங்கள்
சிரியக் கிறிஸ்தவம்
(various Eastern denominations)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
வேறு செமிட்டிக் மக்கள்

அசிரியர்கள் (Assyrians) எனப்படுவோர் தற்போதைய ஈராக், ஈரான், துருக்கி, மற்றும் சிரியா ஆகிய நாடுகளைத் தாய்நாடாகக் கொண்ட ஒரு இனக்குழு ஆகும்[14]. கடந்த 20ம் நூற்றாண்டில் இவர்களில் பலர் கோக்கசஸ், வட அமெரிக்கா, மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளுக்கு குடி பெயர்ந்தனர்.

பல்லாயிரக்கணக்கான அசிரியர்கள் ஈராக்கிய அகதிகளாக ஐரோப்பா, முன்னாள் சோவியத் நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிரியா, ஜோர்தான் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். முதலாம் உலகப் போர் காலத்திலும், ஒட்டோமான் பேரரசு உடைந்த காலத்திலும் இவர்கள் தங்கள் நாடுகளை விட்டுத் தப்பி ஓடினர். இதனை விட ஈரானில் இஸ்லாமியப் புரட்சி[15], ஈராக்கில் ஆகஸ்ட் 7, 1933 இல் இடம்பெற்ற படுகொலைகள், ஈராக்கில் 1914-1920 காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் போன்ற நிகழ்வுகளும் அசிரியர்களின் இடப்பெயர்வுக்குக் காரணங்களாக அமைந்தன.

மிக அண்மையில் 2003 இல் ஆரம்பித்த ஈராக்கியப் போரை அடுத்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஈராக்கியர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இவர்களில் 40 விழுக்காட்டினர் அசிரியர்கள் ஆவர்[16].அ

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. [1]
 2. [2]
 3. Assyrian Neo-Aramaic ethnologue.com has "Ethnic population: 4,250,000 (1994)."
 4. Encyclopedia of the Orient: Assyrians
 5. 2000 United States census
 6. SvD
 7. Immigration of Iraqi Chaldeans Abroad Passes through Jordan
 8. Jordan: Religions & Peoples
 9. 2001 Australian census
 10. US Citizenship and Immigration Services
 11. 2002 Russian census
 12. Canada statistics
 13. http://docs.armstat.am/census/pdfs/51.pdf
 14. Socialization for Ingroup Identity among Assyrians in the US
 15. Documenting The Crisis In The Assyrian Iranian Community
 16. Assyrian Christians 'Most Vulnerable Population' in Iraq

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிரிய_மக்கள்&oldid=2544561" இருந்து மீள்விக்கப்பட்டது