உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்மீனிய இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்மீனியா இராச்சியம்
கிமு 331–கிபி 428
கொடி of
Left: standard of the Artaxiad dynasty
Right: standard of the Arsacid dynasty
கிபி 69-இல் ஆர்மீனியப் பேரரசின் வரைபடம் (ஆர்மீனியாவின் சிற்றரசுகள் உட்பட)
கிபி 69-இல் ஆர்மீனியப் பேரரசின் வரைபடம் (ஆர்மீனியாவின் சிற்றரசுகள் உட்பட)
நிலைஉரோமைப் பேரரசு
தலைநகரம்ஆர்மவீர் (கிமு 331–210)
யேர்வந்தசத் (கிமு 210–176 )
அர்தசத்(கிமு 176 – கிபி 77; கிபி 69–120)
டைகிரனொசெர்தா (கிபி 77–69)
வகார்சாபாத் (120–330)
துவின் (336–428)
பேசப்படும் மொழிகள்ஆர்மீனியம் (native language)
கிரேக்கம்
அரமேயம்
ஈரானிய மொழிகள்
சமயம்
பல கடவுட் கொள்கை, சொராட்டிரிய நெறி:[1][2]கிமு 3-ஆம் நூற்றாண்டு – கிபி 301 வரை
கிறித்துவம் (ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை:கிபி 301 முதல்
அரசாங்கம்முடியாட்சி
மன்னர் 
• கிமு 321–317
மூன்றாம் ஒரோண்டீஸ்
• கிமு 422–428
நான்காம் அர்தசியாஸ்
வரலாற்று சகாப்தம்பாரம்பரியக் காலம், நடுக் காலம்
• Satrapy of Armenia is formed
கிமு 533
• மூன்றாம் ஒரோண்டீஸ்
கிமு 331
• ராகாண்டியப் போர்
கிபி 61
• கிறித்தவ சமயம்
கிபி 301
• பைசாந்தியப் பேரரசு மேற்கு ஆர்மீனியா இராச்சியத்தை கைப்பற்றுதல்
கிபி 387
• பாரசீக சாசானியப் பேரரசு ஆர்மீனியா இராச்சியத்தைக் கைப்பற்றுதல்
கிபி 428
பரப்பு
400,000 km2 (150,000 sq mi)
(in period of Tigranes The Great)1,000,000 km2 (390,000 sq mi)
நாணயம்தக்கண்டு
முந்தையது
பின்னையது
ஆர்மீனிய இராச்சியத்தின் மாகாணம்
பைசாந்திய ஆர்மீனியா
பாரசீக ஆர்மீனியா
Redgate, Anne Elizabeth (2000). The Armenians. Wiley-Blackwell. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-22037-2.
கிமு 80-இல் பேரரசர் அர்தசியாத் காலத்திய ஆர்மீனிய இராச்சியம்
கிமு 50-இல் ஆர்மீனிய இராச்சியம்


ஆர்மீனிய இராச்சியம் (Kingdom of Armenia or Kingdom of Greater Armenia),[3]இதனை பெரிய ஆர்மீனியா என்றும் ஆர்மீனியப் பேரரசு என்றும் அழைப்பர். [4] பண்டைய அண்மை கிழக்கில் ஆர்மீனிய இராச்சியத்தில் தற்கால சிரியா, தெற்கு மற்றும் கிழக்கு துருக்கி, வடக்கு ஈராக், வடக்கு மற்றும் மேற்கு ஈரான், நடு ஆசியாவின் ஆர்மீனியா மற்றும் ஜார்ஜியா, அசர்பைஜான் பகுதிகள் இருந்தன.

ஆர்மீனிய இராச்சியம் பண்டைய அண்மை கிழக்கில் கிமு 321 முதல் கிபி 428 முடிய விளங்கியது. இதனை மூன்று அரச வம்சத்தினர் ஆண்டனர். [5][6] யேர்வந்தசத் வம்சத்தினர் கிமு 331–210 வரையும், அர்தசியாத் வம்சத்தினர் கிமு 189 முதல் கிபி 12 வரையும், அர்சசித் வம்சத்தினர் கிபி 52 முதல் 428 முடியவும் ஆண்டனர்.

வரலாறு

[தொகு]

ஆர்மீனியாவை அரார்த்து இராச்சியத்தினர் (கிமு 860 –590) கைப்பற்றினர். பின்னர் கிமு 590-இல் மீடியர்கள் கைப்பற்றி ஆண்டனர். கிமு 331-இல் அகாமனிசியப் பேரரசின் ஒரு மாகாணமாக ஆர்மீனியா இருந்தது. ஹெலனியக் காலத்தில் கிமு 321-இல் கிரேக்க செலுகிக்கியப் பேரரசில் (கிமு 312–63) ஆர்மீனியா ஒரு மாகாணமாக விளங்கியது.

கிமு 69-இல் உரோமைப் பேரரசு செலுக்கியப் பேரரசை வீழ்த்தி ஆர்மீனியாவைக் கைப்பற்றியது. கிபி 12 வரை ஆர்மீனியா உரோமைப் பேரரசின் கிழக்கு மாகாணங்களில் ஒன்றாக விளங்கியது.

உரோமை-பார்த்தியப் போர்களின் (கிமு 54 – கிபி 217) போது, கிபி 52-இல் ஆர்மீனியா இராச்சியத்தின் அர்சசித் வம்சத்தினர் தங்களது முடியாட்சியை நிறுவினர்.

உரோம-பார்த்தியப் போர்களின் போது ஆர்மீனிய இராச்சியத்தினர் கடுந்துயரம் அடைந்தனர். கிபி 114 - 118 வரை ஆர்மீனியா உரோமைப் பேரரசர் திராயான் கீழ் சிற்றரசாக விளங்கியது. பின்னர் பைசாந்தியப் பேரரசு மற்றும் சாசானியப் பேரரசு கீழ் ஆர்மீனியா சென்றது. கிபி 301-இல் ஆர்மீனியா இராச்சிய மக்கள் ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபையின் கிறித்துவத்தை பின்பற்றினர். ஆர்மீனியா இராச்சியத்தில் ஆர்மீனியம், கிரேக்கம், அரமேயம் மற்றும் ஈரானிய மொழிகள் பேசப்பட்டது.

பைசாந்தியப் பேரரசு-சாசானியப் பேரரசுகளிடயே கிபி 387-இல் நடைபெற்றப் போரின் முடிவில், பைசாந்திய ஆர்மீனியா என்றும், கிபி 428-இல் சாசானிய ஆர்மீனியா என்றும் பிரிக்கப்பட்டது.

ஆர்மீனிய இனப்படுகொலை 1915

[தொகு]

1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் துருக்கிய ஒட்டோமன் பேரரசினர் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர்[7]. அதன் பின்னர் இராணுவத்தினர் மத்திய கிழக்கில் வாழ்ந்த ஆர்மீனியப் பொதுமக்களை வெளியேற்றி படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து தற்கால ஆர்மீனியா போன்ற நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mary Boyce. Zoroastrians: Their Religious Beliefs and Practices Psychology Press, 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415239028 p 84
  2. Russel, James R. (1987). Zoroastrianism in Armenia (Harvard Iranian series). Harvard University, Department of Near Eastern Languages and Civilizations. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0674968509. The Parthian Arsacids who came to the throne of Armenia in the first century A.D. were pious Zoroastrians who invoked Mithra as the lord of covenants, as is proper. An episode which illustrates their observance of the cult is the famous journey of Tiridates to Rome in A.D. 65-66. (...)
  3. "Kingdom of Greater Armenia". ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 20 November 2013.
  4. Adontz, Nicolas (1970). The Reform of Justinian Armenia. Lisbon: Calouste Gulbenkian Foundation. p. 310.
  5. Mach Chahin (2001). Kingdom of Armenia. Surrey: Routledge. p185–190.
  6. "Armenia - Geography & History". britannica.com. பார்க்கப்பட்ட நாள் 27 March 2018.
  7. Britannica, Istanbul பரணிடப்பட்டது 2007-12-18 at the வந்தவழி இயந்திரம்:When the Republic of Turkey was founded in 1923, the capital was moved to Ankara, and Constantinople was officially renamed Istanbul in 1930.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்மீனிய_இராச்சியம்&oldid=3601418" இலிருந்து மீள்விக்கப்பட்டது