நினிவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நினிவே
ܢܝ݂ܢܘܹܐ
Ancient Egypt and Mesopotamia c. 1450 BC.png
பச்சை நிறத்தில் அசிரியாவும், அதன் தலைநகரம் நினிவே நகரமும்
நினிவே is located in ஈராக்
நினிவே
Shown within Iraq
இருப்பிடம்மோசுல், நினிவே ஆளுநகரகம், ஈராக்
பகுதிமெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்36°21′34″N 43°09′10″E / 36.35944°N 43.15278°E / 36.35944; 43.15278ஆள்கூறுகள்: 36°21′34″N 43°09′10″E / 36.35944°N 43.15278°E / 36.35944; 43.15278
வகைநகரம்
பரப்பளவு7.5 சகிமீ (2.9 சதுர மைல்)
வரலாறு
பயனற்றுப்போனதுகிமு 612
நிகழ்வுகள்நினிவே போர், கிமு 612

நினிவே (Nineveh), பண்டைய அசிரியப் பேரரசுக்குட்பட்ட வடக்கு மெசொப்பொத்தேமியா நகரம் ஆகும். பண்டைய நகரமான நினிவே, தற்போது ஈராக் நாட்டின் வடக்கில் உள்ள நினிவே ஆளுநகரகத்தில், நினிவே சமவெளியில் மோசுல் நகரத்திற்கு வெளியே உள்ளது.

நினிவே நகரம் டைகிரிசு ஆற்றின் கிழக்கு கரையில் உள்ளது. நினேவா நகரம், கிமு 911 முதல் கிமு 609 முடிய புது அசிரியப் பேரரசின் தலைநகராக விளங்கியது.

நினிவே நகரத்திற்கு 60 கிமீ தொலைவிலும், நிம்ருத்திற்கு [1] தெற்கில் 65 கிமீ தொலைவிலும் பண்டைய அசூர் நகரம் உள்ளது.

புது அசிரியப் பேரரசு காலத்தில், உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக நினிவே நகரம் விளங்கியது.[2] புது அசிரியப் பேரரசில் கிமு 627ல் நடைபெற்ற அசிரியர்களுக்கு எதிரான நினிவே நகரத்தில் நடைபெற்ற போரில், [3] பாபிலோனியர்கள், மீடியர்கள், சால்டியர்கள், பாரசீகர்கள் மற்றும் சிதியர்கள் நினிவே நகரத்தை தாக்கி அழித்தனர்.

பண்டைய அசிரியப் பேரரசின் தலைநகரான நினிவே நகரத்தின் சிதிலங்கள், நினிவே ஆளுநகரத்தின் மோசுல் நகரத்தின் அருகே உள்ள ஆற்றின் கரையில் இன்றும் காணப்படுகிறது. நினிவேவின் டெல் தொல்லியல் களம்[4]மற்றும் வடக்கு அரண்மனை[5] தொல்லியல் களங்களிலிருந்து அசிரியப் பேரரசின் சிற்பங்கள் கிடைத்துள்ளது.[6]நினிவே தொல்லியல் களங்களிலிருந்து கண்டெடுத்த தொல்பொருட்கள் உலகின் பல்வேறு அருங்காட்சியகங்களில் பார்வைக்கு உள்ளது.

நினிவே நினைவுச் சின்னங்களை அழித்தல்[தொகு]

இசுலாமிய அரசுப் படைகள், 2010ம் ஆண்டின் நடுவில், பண்டைய நினிவே நகரத்தின் எஞ்சியிருந்த தொல்லியல் நினவுச் சின்னக் கட்டிடங்களை குண்டுகள் வைத்து தகர்த்தெரிந்தனர். சனவரி 2017ல் ஈராக்கிய படைகள் நினிவே நகரத்தை இசுலாமிய அரசின் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டனர்.

தற்கால நினிவே மாஷ்கி நுழைவாயில்

பழைய ஏற்பாட்டில்[தொகு]

யூதர்களின் இறைவாக்கினோர் யோனா, நினிவே சுவரின் கீழ், ஓவியம் கிபி 1655

விவிலியத்தின் யோனா புத்தகத்தில் நினிவே நகரத்தின் தீர்க்கதரிசி யோனா குறித்தும், நினிவே மக்கள் குறித்தும் பேசியுள்ளது.

யூதர்களின் எபிரேய வேதாகத்தில் பண்டைய அசிரியா நாட்டின் அசூர், ஊர், நிம்ருத் நகரங்களுடன் நினிவே நகரமும் குறிப்பிட்டுள்ளது. [7] [8] [9][10][11][12]

யூத சமயத்தினர் வாழ்ந்த பண்டைய அசிரியாவின் தலைநகரமாக நினிவே நகரம் திகழ்ந்தது.[13]யூத தீர்க்கதரிசி ஜெக்காரியா [14] வாழ்ந்த காலத்தில் அசிரியப் பேரரசராக ஹெசிக்கியா இருந்தார்.

புவியியல்[தொகு]

மத்தியதரைக் கடலுக்கும், இந்தியப் பெருங்கடலுக்கு இடையே, வடக்கேமெசொப்பொத்தேமியாவில், டைகிரீஸ் ஆற்றின் கரையில் அமைந்த புது அசிரியப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய நினிவே நகரம். மேற்காசியா மற்றும் பண்டைய அண்மை கிழக்கையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கும் முதன்மையான வணிகப் பாதையாக நினிவே இருந்தது. [15]

பண்டைய வரலாறு[தொகு]

பண்டைய தொல்பொருட்கள் கொண்ட உலகின் பழைமையான, பெரிய நகரமான நினிவே, கிமு 6,000 ஆண்டின் புதிய கற்காலத்தின் பிந்தைய காலத்தைச் சேர்ந்தது.[16]

கிமு 3,000ல் நினிவே நகரத்தில், மெசொப்பொத்தேமியா பெண் கடவுளான இஸ்தரை வழிபட்டனர். நிலநடுக்க்த்தால் அழிந்து போன நினிவே நகரத்தை, கிமு 2,260ல் அக்காடியப் பேரரசு காலத்தில் மீண்டும் சீரமைத்து நிறுவப்பட்டது.

அசிரியப் பேரரசில்[தொகு]

கிமு 1800ல் பழைய அசிரியப் பேரரசு ஆட்சியில், நினிவே நகரம் இஸ்தர் எனும் பெண் கடவுளை வழிபடும் மையமாக விளங்கியது.

அசிரிய நகரமான நினிவே நகர இராச்சியம், கிமு 1,400 முதல் 50 ஆண்டுகள் வரை மித்தானி இராச்சியத்தின் கீழ் சிற்றரசாக இருந்தது. கிமு 1,365ல் அசிரியப் பேரரசர் அசூர்-உபாலித், நினிவே நகரத்தை கைப்பற்றி மத்திய அசிரியப் பேரரசை (கிமு 1365 – 1050) நிறுவினார்.[17][18]

பண்டைய அண்மை கிழக்கின் முக்கியமான அசூர் நகரம், பழைய அசிரியப் பேரரசு (கிமு 2025–1750), மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1365–1050), மற்றும் புது அசிரியப் பேரரசுகளின் (கிமு 911–608) தலைநகரமாக விளங்கியது.

புது அசிரியப் பேரரசர் இரண்டாம் அசூர்னசிர்பால் ஆட்சியில் (கிமு 883–859), நினிவே நகரத்தில் புதிய வழிபாட்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டது.

காளை மாட்டை வேட்டையாடும் குதிரைவீரர்கள் சிற்பம், கிமு 695, பெர்லின் அருங்காட்சியகம்
தேர் வீரர்கள் சிங்கத்தை வேட்டையாடும் சிற்பம், நினிவே அரண்மனை, பிரித்தானிய அருங்காட்சியகம்

நினிவே அரண்மனை[தொகு]

கிமு 700ல் பெரிய அரண்மனைகளுடன் கூடியிருந்த நினிவே நகரத்தின் அரண்மனை 530 x 242 மீட்டர் நீள அகலத்துடன், சிற்பங்களுடன் கூடிய 80 அறைகளுடன் இருந்தது. மேலும் இவ்வரண்மனையில் ஆப்பெழுத்துகள் கொண்ட பலகைகள் கொண்டிருந்தது. அரண்மனையின் 22 மீட்டர் ஆழமுள்ள அடிக்கல் செங்கல், சுண்ணாம்பு மற்றும் களிமண்னால் கட்டப்பட்டது.

கிமு 612ல் நடைபெற்ற நினிவே போரின் போது, பாபிலோனியர்கள், சால்டியர்கள், பாரசீகர்கள், மீடியர்களின் தொடர் தாக்குதல்களால், புது அசிரியப் பேரரசின் தலைநகரான நினிவே நகரத்தின் செழிப்பு குறையத் துவங்கியது.

கிமு 612 முதல் மனிதர்கள் வாழ இயலாத பகுதியாக இருந்த நினிவே நகரம், பின்னர் பாரசீகர்களின் அகாமனிசியப் பேரரசின் (கிமு 550 – 330) கீழ் வந்ததது. பின்னர் நினிவே நகரம் கிமு 320ல் பேரரசர் அலெக்சாந்தர் ஆட்சியின் கீழ் சென்றது. பின்னர் சசானியப் பேரரசு (கிபி 224 – 651) ஆட்சியிலும்; கிபி 637 முதல் இசுலாமிய கலீபாக்களின் ஆட்சியின் கீழ் நினிவே நகரம் இருந்தது.

நினிவே அகழாய்வு[தொகு]

1842ல் பிரான்சு நாட்டின் பவுல் எமிலி பொட்டா என்பவர், தற்கால ஈராக் நாட்டின் மோசுல் நகரத்தின் அருகே டைகிரீஸ் ஆற்றின் கரையில் அகழாய்வு மேற்கொண்டதில், நினிவே நகரத்தின் முற்றிலும் சிதிலமடைந்த அரண்மனை போன்ற கட்டிடங்களையும், மண் மேடுகளையும் கண்டறிந்தார்.

நினிவே தொல்லியல் அகழாய்வில் கண்டெடுத்த வெண்கல சிங்கச் சிலை

1847ல் பிரித்தானிய அரசியல் வல்லுனர் ஆஸ்டின் ஹென்றி லேயர்டு என்பவர் நினிவே நகரத்தின் சிதிலமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார்.[19][20] 1853ல் ஆஸ்டின் ஹென்றி லேயர்டு, நினிவே நகரக் கோட்டைச் சுவர்களில் 22,000 [[ஆப்பெழுத்து|ஆப்பெழுததுக்களுடன்] கூடிய, 71 அறைகள் கொண்ட சிதிலமடைந்த ஒரு அரண்மனையை அகழாய்வில் கண்டறிந்தார்.[21] நினிவே அகழாய்வுகள், கிமு 911 முதல் 609 முடிய ஆட்சி செய்த புது அசிரியப் பேரரசின் அரசியல், பண்பாடு மற்றும் நாகரீகத்தை படம் பிடித்து காட்டுகிறது. நினிவே தொல்லியல் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

நினிவே நகர தொல்லியல் எச்சங்கள்[தொகு]

புது அசிரியப் பேரரசின் நினிவே நகரத்தில் வாழ்ந்த யூத சமய தீர்க்கதரிசி யோனா வாழ்ந்த மண்மேடுகள் மற்றும் நினிவே நகரத்தின் 12 கிமீ சுற்றளவு கொண்ட நகரக் கோட்டைச் சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளது.

24 சூலை 2014ல் இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் பண்டைய நினிவே நகரத்தின் 12 கிமீ சுற்றளவு கொண்ட சுவர் குண்டுகள் வைத்து தகர்த்தனர்.[22]

பண்டைய நினிவே நகரத்தின் நெபி யுனுஸ் எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட காளை மாட்டின் கொம்புடன் கூடிய அரசரின் சிற்பம்
கோட்டைச் சுவர்கள் மற்றும் நுழைவு வாயில்களுடன் கூடிய பண்டைய நினிவே நகரத்தின் வரைபடம்
நினிவே நகரத்தின் வீழ்ச்சி, ஓவியம் ஜான் மார்டின்

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. Nimrud
 2. Matt T. Rosenberg. "Largest Cities Through History". geography.about.com. 6 May 2013 அன்று பார்க்கப்பட்டது.
 3. Battle of Nineveh
 4. Tell (archaeology)
 5. and_shrines_of_Mosul Mosques and shrines of Mosul|Yonah`s Shrine
 6. Assyrian sculpture
 7. Samuel Shuckford; James Talboys Wheeler (1858), The sacred and profane history of the world connected, Vol.1, pp. 106–107
 8. "Jubilees 9". www.pseudepigrapha.com. 17 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
 9. Greek Septuagint. 
 10. Geneva Bible. 
 11. 1611 King James Bible. 
 12. New King James Version. 
 13. 2 Kings 19:36
 14. Zechariah (Hebrew prophet)
 15. "Proud Nineveh" is an emblem of earthly pride in the Old Testament prophecies: "And He will stretch out His hand against the north And destroy Assyria, And He will make Nineveh a desolation, Parched like the wilderness." (Zephaniah 2:13).
 16. Kouyounjik / Nebi Yunis (ancient: Nineveh) பரணிடப்பட்டது 2020-11-05 at the வந்தவழி இயந்திரம் colostate.edu
 17. Middle Assyrian Empire
 18. Genesis 10:11 attributes the founding of Nineveh to an Asshur: "Out of that land went forth Asshur, and builded Nineveh".
 19. A. H. Layard, Nineveh and Its Remains, John Murray, 1849
 20. A. H. Layard, The Monuments of Nineveh; From Drawings Made on the Spot, John Murray, 1849
 21. John Malcolm Russell, From Nineveh to New York: The Strange Story of the Assyrian Reliefs in the Metropolitan Museum & the Hidden Masterpiece at Canford School, Yale University Press, 1997, ISBN 0-300-06459-4
 22. "Officials: ISIS blows up Jonah's tomb in Iraq". CNN.com. 2014-07-24. 2014-07-24 அன்று பார்க்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்புEaston, Matthew George (1897). "Nineveh". Easton's Bible Dictionary (New and revised). T. Nelson and Sons. 
 • Russell, John Malcolm (1992), Sennacherib's "Palace without Rival" at Nineveh, University Of Chicago Press, ISBN 0-226-73175-8
 • Barnett, Richard David (1976), Sculptures from the north palace of Ashurbanipal at Nineveh (668-627 B.C.), British Museum Publications Ltd, ISBN 0-7141-1046-9
 • Campbell Thompson, R.; Hutchinson, R. W. (1929), A century of exploration at Nineveh, Luzac
 • Bezold, Carl, Catalogue of the Cuneiform Tablets in the Kouyunjik Collection of the British Museum
 • Catalogue of the Cuneiform Tablets in the Kouyunjik Collection of the British Museum, British Museum
 • Liverani, Mario (2016) [2013], Immaginare Babele [Imagining Babylon: The Modern Story of an Ancient City], Campbell, Alisa ஆல் மொழிபெயர்க்கப்பட்டது, De Gruyter, ISBN 978-1-61451-602-6
 • Scott, M. Louise; MacGinnis, John (1990), Notes on Nineveh, Iraq, 52, pp. 63–73
 • Trümpler, C., ed. (2001), Agatha Christie and Archaeology, The British Museum Press, ISBN 978-0714111483 - Nineveh 5, Vessel Pottery 2900 BC
 • Leick, Gwendolyn (2010), The A to Z of Mesopotamia, Scarecrow Press - Early worship of Ishtar, Early / Prehistoric Nineveh
 • Durant, Will (1954), Our oriental heritage, Simon & Schuster – Early / Prehistoric Nineveh

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nineveh
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நினிவே&oldid=3409518" இருந்து மீள்விக்கப்பட்டது