உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்தானிய அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானிய அருங்காட்சியகம்
பிரித்தானிய அருங்காட்சியகத்தின் வான்வழிப் படம்
பிரித்தானிய அருங்காட்சியகம் is located in Central London
பிரித்தானிய அருங்காட்சியகம்
மத்திய இலண்டனில் அமைவிடம்
நிறுவப்பட்டது7 சூன் 1753; 271 ஆண்டுகள் முன்னர் (1753-06-07)
அமைவிடம்கிரேட் ரசல் வீதி, இலண்டன் WC1B 3DG, இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
சேகரிப்பு அளவுதோராயமாக 8 மில்லியன் பொருள்கள்[1]
வருனர்களின் எண்ணிக்கை1,327,120 (2021)[2] (up 42 percent from 2020)
  • தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்தது
தலைவர்ஜார்ஜ் ஆஸ்போர்ன்
இயக்குனர்ஹார்ட்விக் பிஷ்ஷர்
பொது போக்குவரத்து அணுகல்London Underground வார்ப்புரு:Lus; வார்ப்புரு:Lus; வார்ப்புரு:Lus; வார்ப்புரு:Lus;
வலைத்தளம்britishmuseum.org இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
பரப்பளவு807,000 sq ft (75,000 m2) 94 காட்சியகங்களில்
Map
பிரித்தானிய அருங்காட்சியகக் கூடத்தின் கூரை

பிரித்தானிய அருங்காட்சியகம் என்பது இலண்டனில் அமைந்துள்ள, மனித வரலாறு, பண்பாடு என்பன தொடர்பான அருங்காட்சியகம் ஆகும். 7 மில்லியன்களுக்கு மேற்பட்ட காட்சிப் பொருட்களைக் கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம் உலகின் மிகவும் பெரியதும், முழுமையானதும் ஆகும். உலகின் எல்லாக் கண்டங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட இங்குள்ள காட்சிப் பொருட்கள் மனிதப் பண்பாட்டின் கதையை அதன் தொடக்க காலத்திலிருந்து தற்காலம் வரை விளக்கி ஆவணப்படுத்துகின்றன.

இந்த அருங்காட்சியகம், மருத்துவரும் அறிவியலாளருமான சர் ஆன்சு சுலோன் (Sir Hans Sloane) என்பவரின் சேகரிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு 1700 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. புளூம்சுபரியில், இன்றைய அருங்காட்சியகம் இருக்கும் இடத்தில் அமைந்திருந்த மான்டேகு இல்லத்தில் இருந்த இந்த அருங்காட்சியகம் 1759 ஆம் ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதற்குப் பிற்பட்ட இரண்டரை நூற்றாண்டுக் காலத்தில் இது பல கிளை நிறுவனங்களைக் கொண்டதாக விரிவாக்கம் பெற்றது. இவற்றுள் தென் கென்சிங்டனில் 1887 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பிரித்தானிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் முதலாவது ஆகும். 1997 ஆம் ஆண்டில் பிரித்தானிய நூலகக் கட்டடம் திறந்து வைக்கப்படும் வரை, அருங்காட்சியகமும், தேசிய நூலகமும் ஒரே கட்டடத்திலேயே இயங்கிவந்தன.

குறிப்புகள்

[தொகு]
  1. "Collection size". British Museum.
  2. Association of Leading Visitor Attractions (ALVA), 22 March 2022

வெளியிணைப்புக்கள்

[தொகு]