தேசிய நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தேசிய நூலகம் என்பது, ஒரு நாடு தொடர்பான தகவல்களைச் சேகரித்து வைப்பதற்காக அந் நாட்டு அரசினால் சிறப்பாக நிறுவப்பட்டுப் பேணப்படும் நூலகம் ஆகும். பெரும்பாலும் இத்தகைய நூலகங்களில் பல அரிய, பெறுமதி வாய்ந்த ஆக்கங்கள் இடம்பெற்றிருக்கும். பொது நூலகங்களைப் போல், தேசிய நூலகங்கள் நூல்களைக் கடனாகப் பெற்றுச்செல்ல அனுமதிப்பது இல்லை. தேசிய நூலகங்களில் "சேகரித்து வைத்தல்" என்னும் செயற்பாட்டுக்குக் குறைவான அழுத்தம் கொடுக்கும் வரைவிலக்கணங்களும் உள்ளன. ஒரு நாட்டிலுள்ள பிற நூலகங்களுடன் ஒப்பிடும்போது தேசிய நூலகங்கள் மிகப் பெரியவையாக இருக்கும். ஒரு நாட்டின் பகுதியாக அமையும் மாநிலங்கள் போன்ற விடுதலை பெற்ற நாடுகள் அல்லாத ஆட்சிப் பிரிவுகளும் சில வேளைகளில் தமக்கெனத் தனியான தேசிய நூலகங்களை அமைப்பது உண்டு.

ஐக்கிய அமெரிக்காவில் காங்கிரசு நூலகம், தேசிய நூலகங்களின் செயற்பாடுகள் பலவற்றை நிறைவேற்றுகிறது. நடைமுறையில் இது ஒரு தேசிய நூலகமாகவே செயற்படுகிறது எனலாம். மருத்துவத்துக்கான தேசிய நூலகம், தேசிய வேளாண்மை நூலகம் என்பன அத்துறைகளுக்காக அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள தேசிய நூலகங்கள் ஆகும்.

பொதுச் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடல், தரங்களை வரையறுத்து அவற்றின் பயன்பாட்டை ஊக்குவித்தல், அவற்றின் கடமைகளைச் செவ்வனே செய்வதற்கு உதவுவதற்காகத் திட்டங்களைச் செயல்படுத்துதல் போன்றவற்றில், பல தேசிய நூலகங்கள், அனைத்துலக நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பின் தேசிய நூலகப் பிரிவோடு ஒத்துழைத்து வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_நூலகம்&oldid=1992694" இருந்து மீள்விக்கப்பட்டது