மோசுல்
மோசுல் الموصل | |
---|---|
![]() மோசுலில் உள்ள டைக்ரசு ஆறும் பாலமும் | |
நாடு | ![]() |
ஆளுகை | நினிவே மாகாணம் |
மாவட்டம் | மோசுல் |
மக்கள்தொகை (2008) | |
• நகர்ப்புறம் | 1,800,000 |
நேர வலயம் | கிரீன்விச் இடைநிலை நேரம் +3 |
மோசுல் (Mosul, அரபு மொழி: الموصل al-Mawṣil, அல்-மௌசில்; குர்தியம்: Mûsil/Nînewe; துருக்கியம்: Musul) வடக்கு ஈராக்கில் உள்ளதொரு நகரமாகும். இது நினிவே மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். நாட்டின் தலைநகர் பக்தாத்திலிருந்து வடமேற்கில் 400 km (250 mi) தொலைவில் அமைந்துள்ளது. பழமையான நகரப்பகுதி டைகிரிசு ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது; ஆற்றின் கிழக்குக் கரையில் தொன்மையான அசிரிய நகரான நினிவே அமைந்திருந்தது. தற்போதைய மாநகரப் பகுதி இரு கரைகளிலும் உள்ள நகரப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இரு கரைகளையும் ஐந்து பாலங்கள் இணைக்கின்றன. பெரும்பாலான மக்கள் அராபியர்களாவர் (அசிரியர், ஈராக்கி துருக்கியர் மற்றும் குர்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்). ஈராக்கில் பக்தாத்தை அடுத்த மிகப் பெரும் நகரம் இதுவாகும்.[1]
புகழ்பெற்ற மசுலின் துணி நெடுங்காலமாக இங்கு தயாரிக்கப்பட்டு வந்தமையாலேயே அத்துணிக்கு இந்த நகரின் பெயர் சூட்டப்பட்டது.[2] வரலாற்றுப்படி இப்பகுதியில் மற்றொரு முக்கிய தயாரிப்புப் பொருளாக மோசுல் பளிங்கு விளங்குகிறது.
1987 இல் இந்நகரத்தின் மக்கள்தொகை 664,221 ஆகும்; 2002இல் மக்கள்தொகை 1,740,000 ஆகவும் 2008இல் 1,800,000 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[3]
சூன் 2014 இல் வட ஈராக்கு தாக்குதலின்போது இந்த நகரத்தை இராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய அரசு கைப்பற்றியது.
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ {{cite web | url=http://alarab.co.uk/en/?id=406 பரணிடப்பட்டது 2014-10-06 at the வந்தவழி இயந்திரம் | title=Largest Cities in Iraq | accessdate=2013-10-17 | publisher=mongabay.com | date=October 17, 2013
- ↑ "Musin". Online encyclopedia இம் மூலத்தில் இருந்து 2009-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091201053520/http://encyclopedia.jrank.org/MOS_NAN/MUSLIN_through_Fr_mousseline_fr.html. பார்த்த நாள்: 2009-09-10.
- ↑ "Mosul, the next major test for the U.S. military in Iraq". mcclatchydc.com. -01-26-2009 இம் மூலத்தில் இருந்து 2009-03-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090307023404/http://www.mcclatchydc.com/103/story/26032.html. பார்த்த நாள்: 2008-01-31.