உள்ளடக்கத்துக்குச் செல்

பளிங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பளிங்கு

பளிங்கு (Marble) என்பது பலபடிகமாக்கப்பட்ட கார்பனேட்டு கனிமங்களை (பெரும்பாலும் கால்சைட்டு அல்லது டோலோமைட்டு ) உள்ளடக்கிய உருமாறிய பாறை ஆகும்.

புவியியலாளர்கள் உருமாறிய சுண்ணக்கற்களைக் குறிக்க "பளிங்கு" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், கற்கலைஞர்கள் உருமாறாத சுண்ணக்கற்களையும் பளிங்கு என்று அழைக்கின்றனர்.

பளிங்கு பொதுவாக சிற்ப வேலைக்கும் கட்டடப் பொருளாகவும் பயன்படுகிறது.

பயன்பாடுகள்[தொகு]

சிற்ப வேலை[தொகு]

சிற்ப வேலையில் பளிங்கு.

வெள்ளை பளிங்குகள் மரபார்ந்த காலங்களிலிருந்து சிற்பங்கள் உருவாக்கத்தில் பயன்படுகிறது. அதன் மென்மைத் தன்மை, தொடர்புடைய திசையொருமை மற்றும் ஓரினத்தன்மை ஆகிய பண்புகளின் காரணமாக சிற்பங்கள் உருவாக்க ஏற்ற பொருளாக கருதப்படுகிறது.

முற்றிலும் பளிங்கால் கட்டிய தாஜ் மகால்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பளிங்கு&oldid=2601576" இலிருந்து மீள்விக்கப்பட்டது