உள்ளடக்கத்துக்குச் செல்

சைரஸ் உருளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைரஸ் உருளை
ஆப்பெழுத்து முறையில் அக்காதிய மொழியில் எழுதப்பட பீப்பாய் வடிவ களிமன் உருளையின் முன்புறம் உருளையின் பின் பக்கம்
சைரசு உருளையின் முன் மற்றும் பின்பக்கங்கள்
செய்பொருள்சுட்ட களிமன்
அளவு21.9 சென்டிமீட்டர்கள் (8.6 அங்) x 10 சென்டிமீட்டர்கள் (3.9 அங்) (maximum) x (end A) 7.8 சென்டிமீட்டர்கள் (3.1 அங்) x (end B) 7.9 சென்டிமீட்டர்கள் (3.1 அங்)
எழுத்துஅக்காதிய மொழியில் ஆப்பெழுத்த்தில் எழுதப்பட்டது.
உருவாக்கம்கிமு 539–538
காலம்/பண்பாடுஅகாமனிசியப் பேரரசு
கண்டுபிடிப்புபாபிலோன், மெசொப்பொத்தேமியா, ஹோர்மூசுத் ராஸ்சம், மார்ச் 1879
தற்போதைய இடம்அறை எண் 52, பிரித்தானிய அருங்காட்சியகம், இலண்டன்
அடையாளம்BM 90920
பதிவு1880,0617.1941

சைரஸ் உருளை (Cyrus Cylinder) (பாரசீக மொழி: استوانه کوروش‎, romanized: Ostovane-ye Kūrosh) அல்லது சைரஸ் சாசனம் (Cyrus Charter) (منشور کوروش Manshūre Kūrosh) பண்டைய பாரசீகததின் அகாமனிசியப் பேரரசர் சைரசு தனது அரசக் கட்டளைகளை நாடு அறிவிக்கும் பொருட்டு கிமு 539–538-இல் ஆப்பெழுத்து முறையில் அக்காதிய மொழியில் எழுதப்பட்ட சுட்ட களிமண் உருளை சாசனம் ஆகும். [1][2]

கிமு ஆறாம் நூற்றாண்டுக் காலத்திய இத்தொல்பொருள், தற்கால ஈராக் நாட்டின் பண்டைய பாபிலோன் நகரத்தில் 1879-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது.[1] தற்போது சைரஸ் உருளை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது. புது பாபிலோனியப் பேரரசு உள்ளிட்ட பண்டைய அண்மை கிழக்கு பகுதிகளை வென்ற பாரசீக அகாமனிசியப் பேரரசர் சைரசு, சுட்ட களிமண் உருளைகளில் எழதப்பட்ட அரச கட்டளைகளை, பாபிலோன் உள்ளிட்ட மெசொப்பொத்தேமியாவின் நகரங்களின் மக்களுக்கு அறிவிக்கவே நிறுவினார்.

இதனையும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]

நூல்கள்

[தொகு]

ஊடகக் கட்டுரைகள்

[தொகு]

பிற ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைரஸ்_உருளை&oldid=3893911" இலிருந்து மீள்விக்கப்பட்டது