மீடியாப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மீடியன் பேரரசு
Mādai

 

கிமு 678–கிமு 549
எரோடோட்டசு குறிப்பின் படி மீடியாப் பேரரசு
தலைநகரம் இகபடானா
மொழி(கள்) மீடியன் மொழி
சமயம் பழைய ஈரானிய சமயமான சொராட்டிரிய நெறி
அரசாங்கம் முடியாட்சி
பேரரசர்
 -  கிமு 678–666 கஷ்தரிதி
 -  கிமு 665–633 பாரோர்தி
 -  கிமு 625–585 சையக்சர்ஸ்
 -  கிமு 589–549 ஆஸ்டியேஜஸ்
வரலாற்றுக் காலம் இரும்புக் காலம்
 -  உருவாக்கம் கிமு 678
 -  பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் சைரசு, மீடியாவை கைப்பற்றும் வரை. கிமு 549
பரப்பளவு
 -  கிமு 585 [1][2] 28,00,000 km² (10,81,086 sq mi)
Warning: Value not specified for "common_name"|- style="font-size: 85%;" Warning: Value specified for "continent" does not comply
பாரசீக அகாமனிசியப் பேரரசின் பெர்சப்பொலிஸ்] நகரத்தின் அபாதானா அரண்மனை சுவரில் கிமு 5ம் நூற்றாண்டின் மீடியப் பேரரசின் போர்வீரர்களின் சிற்பம்

மீடியாப் பேரரசு, கிமு 5ம் நூற்றாண்டில் பாரசீகம் எனும் தற்கால ஈரான் நாட்டின் வடமேற்கு பகுதிகளை முதலில் ஆண்டவர்கள். இவர்களின் சமயம் சொராட்டிரிய நெறி ஆகும். [3] கிமு 678ல் நிறுவப்பட்ட மீடியாப் பேரரசு, பேரரசர் சைரசு கிமு 549ல் மீடியாவை கைப்பற்றும் வரை ஆட்சி செலுத்தியது.

மீடியர்கள் கிமு 1100 - 1000 வரை இரானின் வடமேற்கு மலைப்பகுதிகளிலும், மெசொப்பொத்தேமியாவின் வடகிழக்கு மற்றும் கிழக்கில் உள்ள எகபடனா பகுதிகளில் வாழ்ந்தவர்கள்.[4] [5]

கிமு 800 - 700க்கு இடைப்பட்ட காலத்தில் மீடியர்கள் இரானின் மேற்குப் பகுதிகளை மீடியப் பேரரசில் கொண்டு வந்தனர.[6]

பண்டைய பாரசீகத்தின் மீடியப் பேரரசு, தற்கால ஈரானின் வடகிழக்கு, ஈராக்கின் தெற்கு மற்றும் அனதோலியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை ஆட்சி செய்தனர். மீடியர்கள் பழைய பாரசீக மொழியின் உட்பிரிவான மீடியன் மொழியை பேசினர். மீடியர்கள் சொராஷ்டிரிய சமயத்தை பின்பற்றினர். மீடியப் பேரரசின் தலைநகராக இகபடானா (தற்கால ஹமதான்) விளங்கியது.

மேற்கு ஈரானில் நடந்த அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் மற்றும் சாத்திரக் குறிப்புகளின் அடிப்படையில், மீடியர்கள், அசிரிய மக்கள் மற்றும் பண்டைய கிரேக்கர்களின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவார்.

மேற்கு ஈரானின் அகழாய்வின் கிடைத்த மீடியாப் பேரரசின் வெள்ளி ஆட்டுத்தலை, கிமு 7 - 6ம் நூற்றாண்டு

பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் சைரசு மீடியாப் பேரரசை கிமு 549ல் கைப்பற்றினார்.

எகபடானா நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட பேரரசர் முதலாம் டேரியஸ் காலத்திய "கடிதப் புதையல்கள்"
பெர்சப்பொலிஸ் நகர அபாடனா மண்டபத்தின், கிமு 5ம் நூற்றாண்டின் பாரசீக மற்றும் மீடியப் பேரரசின் வீரர்கள், அபாடனா மண்டபம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Turchin, Peter; Adams, Jonathan M.; Hall, Thomas D (December 2006). "East-West Orientation of Historical Empires". Journal of world-systems research 12 (2): 223. பன்னாட்டுத் தர தொடர் எண்:1076-156X. http://jwsr.pitt.edu/ojs/index.php/jwsr/article/view/369/381. பார்த்த நாள்: 16 September 2016. 
  2. Taagepera, Rein (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D.". Social Science History 3 (3/4): 121. doi:10.2307/1170959. https://www.jstor.org/stable/1170959. பார்த்த நாள்: 16 September 2016. 
  3. Media ANCIENT REGION, IRAN
  4. "Medes and Media".
  5. Median Empire
  6. electricpulp.com. "MEDIA – Encyclopaedia Iranica" (en).

ஆதாரங்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீடியாப்_பேரரசு&oldid=2816791" இருந்து மீள்விக்கப்பட்டது