வளமான பிறை பிரதேசம்
வளமான பிறை பிரதேசம் (Fertile Crescent) பண்டைய அண்மை கிழக்கில் சந்திர பிறை வடிவத்தில் அமைந்த தற்கால எகிப்து, இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் சிரியா, ஈராக், தெற்கு துருக்கி, மேற்கு ஈரான், உள்ளிட்ட வளமான பிரதேசங்களைக் குறிக்கும்.[1][2] சில வரலாற்று அறிஞர்கள் வளமான பிறை பிரதேசத்தில் சைப்பிரஸ் தீவுப் பகுதியையும் சேர்த்துக் கொள்கின்றனர்.
வரலாறு மற்றும் தொல்லியல் அறிஞர்கள், வளமான பிறை பிரதேசத்தை உலக நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கின்றனர். வளமான பிறை பிரதேசத்தில் நைல் ஆறு, புறாத்து ஆறு, டைகிரிசு ஆறு, ஜோர்தான் ஆறு போன்ற என்றும் வற்றாத ஆறுகள் பாய்வதால், இப்பகுதியில் மக்கள் முதன்முதலில் பெரும் அளவில் வேளாண்மைத் தொழில் செய்யத் துவங்கினர். ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கும், உழவிற்கும், உணவிற்கும், உடைக்கும் பயன்படுத்தினர். தெய்வங்களுக்கு சுட்ட செங்கற்லால் கோயில், அரண்மனை கட்டிடங்களை எழுப்பினர். இதன் விளைவாக வளமான பிறை பிரதேசத்தில், கிமு 4500-இல் முதன்முதலில் சுமேரியா நாகரீகம் தோன்றியது.[3]இப்பிரதேசத்தில் முதன் முதலாக புதிய தொழில் நுட்ப முன்னேற்றங்களாக ஆப்பெழுத்துக்கள், எழுத்துக் கலை, வேளாண் நீர் பாசானம், வண்டிச் சக்கரங்கள், கண்ணாடி மட்பாண்டங்கள், சுமேரிய மொழி, சுமேரியச் சமயம் மற்றும் சுமேரிய கடவுள்கள் தோன்றியது.
பெயர்க் காரணம்
[தொகு]ஜேம்ஸ் வென்றி என்ற தொல்லியல் அறிஞர் வளமான பிறை பிரதேசம் என்ற சொற்றொடரை 1914-இல் தான் எழுதிய ஐரோப்பிய வரலாறு (European History (1914) மற்றும் பண்டையக் காலங்கள், பண்டைய உலகின் துவக்க வரலாறு (Ancient Times, A History of the Early World) (1916) போன்ற நூல்களில் அறிமுகப்படுத்தினார். [4][5][6][7][8][9]
வளமான பிறை பிரதேசத்தின் பண்பாடு, மக்கள் & இராச்சியங்கள்
[தொகு]வளமான பிறை பிரதேசத்தில் உபைது பண்பாடு, உரூக் பண்பாடு, கிஷ் பண்பாடு, ஹுரியப் பண்பாடு, ஹலாப் பண்பாட்டுக் காலத்தில் ஹுரியத் மக்கள், அசிரிய மக்கள், இட்டைட்டு மக்கள், அமோரிட்டு மக்கள்,சால்டியர்கள், பிலிஸ்தியர்கள், காசிட்டு மக்களின் கீழ்கண்ட நகர இராச்சியங்கள் இருந்தது. அவைகள்;
- அக்காடியப் பேரரசு
- இட்டைட்டு பேரரசு
- எப்லா இராச்சியம்
- மாரி இராச்சியம்
- பழைய அசிரியப் பேரரசு
- மத்திய அசிரியப் பேரரசு
- புது அசிரியப் பேரரசு
- மூன்றாவது ஊர் வம்சம்
- முதல் பாபிலோனியப் பேரரசு
- புது பாபிலோனியப் பேரரசு
- மித்தானி இராச்சியம்
- எகிப்தின் துவக்ககால இராச்சியம்
- எகிப்தின் மத்தியகால இராச்சியம்
- பழைய எகிப்து இராச்சியம்
- புது எகிப்து இராச்சியம்
- அகாமனிசியப் பேரரசு
- செலூக்கியப் பேரரசு
- பார்த்தியப் பேரரசு
- சாசானியப் பேரரசு
துவக்ககால தானியங்கள் & வளர்ப்பு விலங்குகள்
[தொகு]வரலாற்றுக்கு முந்திய காலத்தில் 14,400 ஆண்டுகளுக்கு முன் விதைகளற்ற அத்திப் பழ மரங்க ஜோர்தான் சமவெளியில் வளர்க்கப்பட்டது. [10] 9,000 ஆண்டுகளுக்கு முன்னரே கோதுமை, சோளம் போன்ற தானியங்கள் சிரியாவில் பயிரிடப்பட்டது.[11] வளமான பிறை பிரதேசத்தில் பூனைகள் வீட்டு வளர்ப்பு விலங்காக வளர்க்கப்பட்டது. [12]மேலும் கால்நடைகள், ஆடு, மாடு, பன்றி, வாத்து போன்றவைகள் வீட்டு வளர்ப்பு விலங்குகளாக வளர்க்கப்பட்டது.[13][14] [13][13] [13][15][16][17] வேட்டைத் தொழிலிருந்து மக்கள் வேளாண்மைத் தொழிலுக்கு மாறத் தொடங்கினர்.
மொழிகள்
[தொகு]வளமான பிறை பிரதேசத்தில் பல்வேறுபட்ட மொழிகள் பேசப்பட்டது. மொசப்பத்தேமியாவின் கீழ்ப்பகுதிகளில் பேசப்பட்ட செமிடிக் மொழிகளுக்கும், மேட்டு நிலங்களில் பேசப்பட்ட ஈலமைட்டு மொழி, காசிட்டு மொழி, ஹுர்ரோ-உராத்தியன் மொழிகளுக்கும் தொடர்பில்லாமல் இருந்ததது. வள பிறை பிரதேசத்தில் பேசப்பட்ட பிற மொழிகள்:
- வடகிழக்கு காகேசியன் மொழிகள், வளமான பிறை பிரதேசத்தின் வடக்கில் பேசப்பட்டது.[18].
- செமிடிக் அல்லாத ஆதி-யூப்ரேட்டியன் மொழி தற்கால தெற்கு ஈராக்கில் உபைதுகள் காலத்தில் (கிமு 5300–4700) பேசப்பட்டது.
- ஆப்பெழுத்து வடிவம் கொண்ட சுமேரிய மொழி தொடர்புடைய அக்காதிய மொழியை, அக்காதியப் பேரரசில் பேசப்பட்டது.
- செமிடிக் மொழிகள் – அக்காதியம், அமோரிட்டு மொழி, அரமேயம், கானானிய மொழிகள் பேசப்பட்டது.
- மத்திய அனதோலியாவில் அட்டிக் மொழி பேசப்பட்டது.
- இந்தோ-ஆரிய மொழிகளான இட்டைட்டு மொழி மித்தானி இராச்சியத்தில் பேசப்பட்டது.
வளமான பிறை பிரதேசத்தின் பண்டைய நகரங்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Haviland, William A.; Prins, Harald E. L.; Walrath, Dana; McBride, Bunny (13 January 2013). The Essence of Anthropology (3rd ed.). Belmont, California: Cengage Learning. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1111833442.
- ↑ Ancient Mesopotamia/India. Culver City, California: Social Studies School Service. 2003. p. 4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1560041665.
- ↑ The Editors of Encyclopaedia Britannica "Fertile Crescent". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
- ↑ Abt, Jeffrey (2011). American Egyptologist: the life of James Henry Breasted and the creation of his Oriental Institute. Chicago: University of Chicago Press. pp. 193–194, 436. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-0011-04.
- ↑ Goodspeed, George Stephen (1904). A History of the ancient world: for high schools and academies. New York: Charles Scribner's Sons. pp. 5–6.
- ↑ Breasted, James Henry (1914). "Earliest man, the Orient, Greece, and Rome" (PDF). In Robinson, James Harvey; Breasted, James Henry; Beard, Charles A. (eds.). Outlines of European history, Vol. 1. Boston: Ginn. pp. 56–57. "The Ancient Orient" map is inserted between pages 56 and 57.
- ↑ Breasted, James Henry (1916). Ancient times, a history of the early world: an introduction to the study of ancient history and the career of early man (PDF). Boston: Ginn. pp. 100–101. "The Ancient Oriental World" map is inserted between pages 100 and 101.
- ↑ Clay, Albert T. (1924). "The so-called Fertile Crescent and desert bay". Journal of the American Oriental Society 44: 186–201. doi:10.2307/593554. https://archive.org/details/sim_journal-of-the-american-oriental-society_1924-09_44/page/186.
- ↑ Kuklick, Bruce (1996). "Essay on methods and sources". Puritans in Babylon: the ancient Near East and American intellectual life, 1880–1930. Princeton: Princeton University Press. p. 241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-02582-7.
Textbooks...The true texts brought all of these strands together, the most important being James Henry Breasted, Ancient Times: A History of the Early World (Boston, 1916), but a predecessor, George Stephen Goodspeed, A History of the Ancient World (New York, 1904), is outstanding. Goodspeed, who taught at Chicago with Breasted, antedated him in the conception of a 'crescent' of civilization.
- ↑ Norris, Scott (1 June 2006). "Ancient Fig Find May Push Back Birth of Agriculture". National Geographic Society (National Geographic News). http://news.nationalgeographic.com/news/2006/06/060601-agriculture.html.
- ↑ "Genographic Project: The Development of Agriculture". National Geographic. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.
- ↑ Driscoll, Carlos A.; Menotti-Raymond, Marilyn; Roca, Alfred L.; Hupe, Karsten; Johnson, Warren E.; Geffen, Eli; Harley, Eric H.; Miguel Delibes et al. (27 July 2007). "The near eastern origin of cat domestication". Science 317 (5837): 519–523. doi:10.1126/science.1139518. பப்மெட்:17600185.
- ↑ 13.0 13.1 13.2 13.3 Brace, C. Loring; Seguchi, Noriko; Quintyn, Conrad B.; Fox, Sherry C.; Nelson, A. Russell; Manolis, Sotiris K.; Qifeng, Pan (2006). "The questionable contribution of the Neolithic and the Bronze Age to European craniofacial form". Proceedings of the National Academy of Sciences of the USA 103 (1): 242–247. doi:10.1073/pnas.0509801102. பப்மெட்:16371462.
- ↑ Ricaut, F. X.; Waelkens, M. (Aug 2008). "Cranial Discrete Traits in a Byzantine Population and Eastern Mediterranean Population Movements". Human Biology 80 (5): 535–564. doi:10.3378/1534-6617-80.5.535. பப்மெட்:19341322.
- ↑ Barker G (2002) Transitions to farming and pastoralism in North Africa, in Bellwood P, Renfrew C (2002), Examining the Farming/Language Dispersal Hypothesis, pp 151–161.
- ↑ Bar-Yosef O (1987), "Pleistocene connections between Africa and SouthWest Asia: an archaeological perspective", The African Archaeological Review; Chapter 5, pp 29–38
- ↑ Kislev, ME; Hartmann, A; Bar-Yosef, O (2006). "Early domesticated fig in the Jordan Valley". Science 312 (5778): 1372–1374. doi:10.1126/science.1125910. பப்மெட்:16741119.
- ↑ Bernice Wuethrich (19 May 2000). "Peering Into the Past, With Words". Science 288 (5469): 1158. doi:10.1126/science.288.5469.1158.
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Jared Diamond, Guns, Germs and Steel: A Short History of Everybody for the Last 13,000 Years, 1997.
- Anderson, Clifford Norman. The Fertile Crescent: Travels In the Footsteps of Ancient Science. 2d ed., rev. Fort Lauderdale: Sylvester Press, 1972.
- Deckers, Katleen. Holocene Landscapes Through Time In the Fertile Crescent. Turnhout: Brepols, 2011.
- Ephʻal, Israel. The Ancient Arabs: Nomads On the Borders of the Fertile Crescent 9th–5th Centuries B.C. Jerusalem: Magnes Press, 1982.
- Kajzer, Małgorzata, Łukasz Miszk, and Maciej Wacławik. The Land of Fertility I: South-East Mediterranean Since the Bronze Age to the Muslim Conquest. Newcastle upon Tyne, UK: Cambridge Scholars Publishing, 2016.
- Kozłowski, Stefan Karol. The Eastern Wing of the Fertile Crescent: Late Prehistory of Greater Mesopotamian Lithic Industries. Oxford: Archaeopress, 1999.
- Potts, Daniel T. (21 May 2012). A Companion to the Archaeology of the Ancient Near East. Vol. 1. John Wiley & Sons. p. 1445. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9781444360790. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781405189880.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Steadman, Sharon R.; McMahon, Gregory (15 September 2011). The Oxford Handbook of Ancient Anatolia: (10,000-323 BCE). OUP. p. 1174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195376142.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Thomas, Alexander R. The Evolution of the Ancient City: Urban Theory and the Archaeology of the Fertile Crescent. Lanham: Lexington Books/Rowman & Littlefield Publishers, 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]Fertile Crescent பற்றிய நூலக ஆதாரங்கள் |
- Ancient Fertile Crescent Almost Gone, Satellite Images Show – from National Geographic News, May 18, 2001.