உள்ளடக்கத்துக்குச் செல்

முதல் பாபிலோனியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதல் பாபிலோனியப் பேரரசு
கிமு c. 1830 – c. 1531
பாபிலோனை ஆண்ட அம்முராபி (கிமு c. 1792 – கிமு c. 1750) ஆட்சிக் காலத்திய முதல் பாபிலோனியப் பேரரசின் ஆட்சிப் பரப்புகள்
பாபிலோனை ஆண்ட அம்முராபி (கிமு c. 1792 – கிமு c. 1750) ஆட்சிக் காலத்திய முதல் பாபிலோனியப் பேரரசின் ஆட்சிப் பரப்புகள்
தலைநகரம்பாபிலோன்
பேசப்படும் மொழிகள்பாபிலோனிய மொழி
சமயம்
பாபிலோனிய சமயம்
அரசாங்கம்முடியாட்சி
மன்னர் 
• கிமு c. 1830–1817
சுமு-அபூம் (முதல்)
• கிமு c. 1562–1531
சம்சு-திதானா (இறுதி)
வரலாற்று சகாப்தம்செப்புக் காலம்
• தொடக்கம்
கிமு c. 1830
• பாபிலோனின் வீழ்ச்சி
கிமு c. 1531
• முடிவு
கிமு c. 1531
முந்தையது
பின்னையது
மூன்றாம் ஊர் வம்சம்
இசின் வம்சம்
காசிட்டுகளின் பாபிலோனியா
தற்போதைய பகுதிகள் ஈராக்
Map of ஈராக் showing important sites that were occupied by the First Babylonian Dynasty (clickable map)
முதல் பாபிலோனியப் பேரரசின் மன்னர் அம்முராபியின் மகன் சாம்சு-இலுனா ஆட்சிக் காலத்திய (கிமு c. 1750 – கிமு c. 1712) முதல் பாபிலோனியப் பேரரசு பாபிலோனுக்கு மேற்கில் துத்துல் நகரம் வரை விரிவாக்கம் (இளம் பச்சை நிறத்தில்

முதல் பாபிலோனியாப் பேரரசு (First Babylonian Empire) அல்லது பாபிலோனியாவை ஆண்ட முதல் வம்ச மன்னர்கள் என்றும் அழைப்பர்.பழைய பாபிலோனியப் பேரரசு, பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் தெற்குப் பகுதிகளை, பாபிலோன் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அமோரிட்டு மன்னர்கள் கிமு 2000 முதல் கிமு 1600 முடிய 400 ஆண்டுகள் ஆண்டனர். அமோரிட்டு மன்னர்களில் புகழ்பெற்றவரான மன்னர் அம்முராபி (கிமு 1792 – 1750) ஆட்சிக்காலத்தில், மெசொப்பொத்தேமியாவின் பிற இராச்சியங்களை வென்று பழைய பாபிலோனியப் பேரரசை விரிவாக்கினார். பேரரசர் அம்முராபியின் மறைவிற்குப் பின் 150 ஆண்டுகளில் பழைய பாபிலோனியப் பேரரசு மெல்ல மெல்ல வீழ்ச்சியடைத்துவங்கியது. கிமு 1595ல் இட்டைட்டுகளின் மன்னர் முர்சிலி என்பவர் பழைய பாபிலோனியப் பேரரசை கைப்பற்றினார்.[1]

முதல் பாபிலோனிய பேரரசின் ஆட்சியாளர்கள்

[தொகு]

பாபிலோனின் முதல் வம்சத்தின் தோற்றம்

[தொகு]

பாபிலோன் தொல்லியல் களங்கள் யூப்பிரடீஸ் அறு மற்றும் டைகிரிசு ஆறுகளின் வடிநிலப்பரப்பில் அமைந்திருந்ததால், அதன் தொல்லியல் களங்களில் முதல் பாபிலோனியப் பேரரசின் முதல் வம்ச மன்னர்களைப் பற்றிய செய்திகள் முழுவதும் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும் பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவில் கிடைத்த தொல்லியல் பொருட்கள் மூலமும், யூதர்களின் பழைய ஏற்பாடு நூல்களிலிருந்தும் ஓரளவு முதல் பாபிலோனிய வம்ச மன்னர்களைக் குறித்த தகவல்கள் பெற முடிகிறது.[2]

முதல் பாபிலோனிய வம்ச மன்னர்கள்

[தொகு]

அமோரிட்டுகளின் தலைவர் அம்முராபி பாபிலோனியாவைக் கைப்பற்றி முதல் பாபிலோனிய வம்சத்தின் ஆட்சியை விரிவாக்கினார்.

இருப்பினும் பாபிலோனை அசிரியப் பேரரசர் முதலாம் சாம்சி-அதாத் மற்றும் லார்சா நாட்டின் முதலாம் ரிம் சின் போன்றவர்கள் ஆண்டனர்.

இவ்வம்சத்தின் முதல் மன்னர் சுமு-அபூம், தில்பத் மற்றும் கிஷ் போன்ற நகரங்களைக் கைப்பற்றி பாபிலோனியாவை விரிவாக்கினர்.[3] இவரது வழித்தோன்றல் சுமு-லா-எல், பாபிலோன் நகரைச் சுற்றிலும் கோட்டைச் சுவர் கட்டத்துவங்கினார். இப்பணியை மன்னர் சுமுவாலிஅலும் ஆட்சியில் முடிக்கப்பட்டது.

முதல் பாபிலோனிய வம்ச மன்னர் சுமுவாலிஅலும், கிஷ் நகர புரட்சியாளர்களை வென்று, கசல்லு நகரத்தை அழித்து, நிப்பூர் நகர இராச்சியப் பகுதிகளைக் கைப்பற்றினார்.[3]

மன்னர் அம்முராபி

[தொகு]

யூதர்களின் பழைய ஏற்பாடு நூல்களில் அமோரிட்டு மக்களின் மன்னரான அம்முராபி குறித்த செய்திகள் உள்ளது. அமோரிட்டு மக்களால் அம்முராபி திபிலிரபி ("Dipilirabi") என அழைக்கப்பட்டார்.[4]

பண்டைய அண்மைக் கிழக்கின் நூல்களில் அம்முராபி சட்டத் தொகுப்புகள் உள்ளது. இச்சட்ட நூல்கள் ஆப்பெழுத்தில் ஏழு அடி உயர சுட்ட களிமண் பலகைகயில் எழுதப்பட்டுள்ளது.

அம்முராபியின் சட்டத் தொகுப்பில் அம்முராபி எவ்வாறு பாபிலோனியாவின் மன்னரானார் என்பதையும், தன் ஆட்சியில் நீதியை நிலைநாட்ட கடவுள் அருளால் எவ்வாறு சட்டத்தை வடித்தார் என்பதையும் விளக்குகிறது.[5] கிமு 1792 முதல் கிமு 1750 வரை ஆண்ட அம்முராபியின் எழுதப்பட்ட சட்டத் தொகுப்பே வரலாற்றில் மிகவும் பழையானது என்பர்.[6]

அம்முராபி ஆட்சிக்கு வருகையில் பாபிலோனிய இராச்சியத்தில் தில்பத், சிப்பர், கிஷ் மற்றும் போர்சிப்பா நகரங்களே இருந்தன. கிமு 1761ல் அம்முராபி இசுன்னா நகரத்தைக் கைப்பற்றினார். கிமு 1760ல் மூன்றாவது ஊர் வம்சத்தினர் ஆண்ட மாரி நகரத்தைக் கைப்பற்றினார்.

அம்முராபி ஆட்சியின் 13வது ஆண்டில் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் உள்ள லார்சா, நிப்பூர், ஊர், உரூக், இசின் நகரங்களைக் கைப்பற்றி, பாபிலோன் நகரத்தைத் தலைநகராகக் கொண்ட முதல் பாபிலோனிய வம்சத்தின் புகழ் பெற்ற மன்னராக விளங்கினார். மெசொப்பொத்தேமியாவில் பாபிலோன் நகரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தியது.[7]

ஜிம்ரி-லிம் தொல்லியல் களத்தில் கிடைத்த தொல்பொருட்கள் வாயிலாக அம்முராபியின் வரலாறு, இராஜதந்திர உறவுகள் அறிய முடிறது. யூப்பிரடீஸ் ஆற்றின் கரையில் பாபிலோன் நகரம் அமைந்திருந்தது. ஆற்று வெள்ளத்தாலும், மண் அரிப்பாலும் பண்டைய பாபிலோன் நகரம் தாக்கப்பட்டதால், அதன் தொல்லியல் களங்களில் தொல்பொருட்கள் கண்டறிய இயலவில்லை.[8]

எப்லா இராச்சியத்தின் தலைநகரான மாரி தொல்லியல் களத்தில் கண்டெடுத்த அரண்மனையில் இருந்த சுடுமண் பலகைக் குறிப்புகள் மூலம், பாபிலோனிய மன்னர் அம்முராபி, மாரி, எப்லா போன்ற இராச்சியத்தினருடன் கொண்டிருந்த இராஜதந்திர உறவுகள் புலப்படுத்துகிறது.[9]

அனதோலியாவின் சிரியாவில் இருந்த இராச்சியங்களுக்கும், மெசொப்பொத்தேமியாவில் இருந்த இராச்சியங்களுக்கும் அடிக்கடி போர்கள் நடைபெற்றதால், போர்கள் தொடர்பான களிமண் பலகைகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது.

இந்த ஆவணங்களில் இராச்சியங்களிடையே இருந்த பிணக்குகள் விவாதிக்கப்பட்டதையும், தெய்வீக உறுதிமொழிகளும், இராச்சியங்களுக்கிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும்; உடன்படிக்கைகளும் அறிந்து கொள்ள முடிகிறது.[10]

அம்முராபி ஆட்சிக் காலத்தில் சுமேரியம் மற்றும் அக்காதிய மொழிகளின் ஆப்பெழுத்துகளில் சமயம், கவிதை, அறிவியல் குறிப்புகள் தொகுக்கப்பட்டது. மேலும் யூப்பிரடீஸ் மற்று டைகிரிஸ் ஆறுகளிலிருந்து கால்வாய்கள் வெட்டி வேளாண்மைக்கு நீர் ஆதாரங்களை பெருக்கினார். பாபிலோனில் பெரிய அரண்மனைகளை கட்டி, இரட்டை அடுக்குச் சுவர்களால் பாபிலோன் நகரத்தைச் சுற்றிலும் மதில் சுவர்களை எழுப்பினார்.

அம்முராபிக்கு முன்னர்

[தொகு]

அம்முராபியின் ஆட்சிக்கு முன்னர், மூன்றாவது ஊர் வம்ச பேரரசர் சர்கோன் மிகவும் செல்வாக்குடன் விளங்கினார்.

பாபிலோனில் சூரிய வழிபாடு

[தொகு]

பழைய பாபிலோன் நகர அரச சக்தியாக சூரியக் கடவுள் கருதப்பட்டது. பாபிலோனிய மக்களின் சூரியக் கடவுளான சமஸ், நீதிக்கான கடவுள் என்பதையும், அவரே வானத்திற்கும், பூமிக்கும், அனைத்து உயிரினங்களின் கடவுள் எனப்தை அம்முராபியின் சட்டத் தொகுப்பில் குறிக்கப்பட்டுள்ளது.[11][12]

பாபிலோனினின் அழிவு குறித்த குறிப்புகள், இட்டைட்டுப் பேரரசர் முதலாம் முர்சில்லிஸ் ஆட்சிக் காலத்தில் கிடைத்துள்ளது. அக்குறிப்பின் படி, பாபிலோனியப் பேரரசில் சிம்மு (சிவன்) மாதத்தில் தோன்றிய இரண்டு சூரிய, சந்திர கிரகணங்களே பாபிலோனிய நகரத்தின் அழிவிற்கு காரணம் எனக்கூறுகிறது. கிமு 9 பிப்ரவரி 1659 அன்று நிகழ்ந்த சந்திர கிரகணம், 4:43 முதல் 6:47 வரை நீடித்தது. அதே மாதத்தில், கிமு 23 பிப்ரவரி 1659ல் நிகழ்ந்த சூரிய கிரகணம் காலை 10:26 முதல் 11.45 மணி வரை நீடித்தது.[13][14]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Old Babylonian Empire ANCIENT EMPIRE, MIDDLE EAST
  2. Seri, Andrea (2012). Local Power of Old Babylonian Mesopotamia. pp. 12–13.
  3. 3.0 3.1 King, Leonard William (1969). A History of Babylon.
  4. Luckenbill, D.D (1984). The Name Hammurabi. p. 253.
  5. Coogan, Micheal D. Ancient Near Eastern Texts. Oxford University Press. pp. 87–90.
  6. Code of Hammurabi
  7. Podany, Amanda H. (2010). Brotherhood of Kings. p. 65.
  8. Klengel-brandt, Evelyn (1992). Bbaylon.
  9. Podany, Amanda H. Brotherhood of Kings. p. 70.
  10. Podany, Amanda H. (2010). Brotherhood of kings. p. 72.
  11. The Code of Hammurapi.
  12. Charpin, Dominique. "I am the Sun of Babylon"; Solar Aspects of Royal Power in Old Babylonian Mesopotamia. 
  13. Huber, Peter (1982). "Astronomical dating of Babylon I and Ur III". Monographic Journals of the Near East: 41. 
  14. Kelley, David H.; E. F. Milone; Anthony F. Aveni (2004). Exploring Ancient Skies: An Encyclopedic Survey of Archaeoastronomy. New York: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-387-95310-8.