மேல் மெசொப்பொத்தேமியா
மேல் மெசொப்பொத்தேமியா (Upper Mesopotamia) வடக்கு மெசொப்பொத்தேமியாவின் தற்கால மத்திய கிழக்கின் வடக்கில் உள்ள வடமேற்கு ஈராக், வடகிழக்கு சிரியா மற்றும் தென்கிழக்கு துருக்கி நாடுகளில் அமைந்த மேட்டு நிலங்களையும், சமவெளிப் பகுதிகளையும் குறிக்கும்.[1] தற்கால ஈராக்கின் தெற்குப் பகுதிகள் கீழ் மெசொப்பொத்தேமியா ஆகும்.
கிபி எழாம் நூறாண்டின் நடுவில் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்ற இசுலாமிய படையெடுப்புகளுக்குப் பின்னர் [2] மெசொப்பொத்தேமியா பகுதிகளை, அரபு மொழியில் அல்-ஜெசிரா என அழைக்கப்படுகிறது. யூப்பிரடீஸ் ஆறு மற்றும் டைகிரிசு ஆறுகள் மெசொப்பொத்தேமியாவை தீவுப் பகுதியாக மாற்றியுள்ளது.
மேல் மெசொப்பொத்தேமியா பிரதேசத்தின் தெற்கில், அனதோலியா மலைத்தொடர்கள், கிழக்கில் பாயும் யூப்பிரடீஸ் ஆற்றின் இடது கரை வரையும், மேற்கில் டைகிரிஸ் ஆற்றின் வலது கரை வரை படர்ந்துள்ளது. மேலும் துருக்கியில் உற்பத்தியாகும் காபூர் ஆறு மேல் மெசொப்பொத்தேமியாவில் 400 கிலோ மீட்டர் தொலைவிற்கு பாய்ந்து யூப்பிரடீஸ் ஆற்றில் கலக்கிறது.
ஈராக் நாட்டின் நினிவே ஆளுநரகம் வரை மேல் மெசொப்பொத்தேமியாவின் கிழக்குப் பகுதி பரந்துள்ளது. மேல் மெசொப்பொத்தேமியாவின் வடக்கில் துருக்கி மாகாணங்களான சன்லியுர்பா, மார்டின் மற்றும் தியர்பக்கிர் மாகாணத்தின் பகுதிகள் அமைந்துள்ளது.
மேல் மெசொப்பொத்தேமியாவின் புகழ்பெற்ற நகரங்களாக சிரியாவின் தீர் எஸ்-சோர், அல்-றக்கா, அல்-அசகா, குவாமிசிலி நகரங்கள் மற்றும் ஈராக்கின் மோசுல், சாமர்ரா மற்றும் அல் நசிரியா நகரங்கள் விளங்குகிறது.
மேல் (வடக்கு) மெசொப்பொத்தேமியாவின் மேற்கில் உள்ள சிரியாவின் அல்-அசகா மாகாணத்தை சிரியாவின் தானியக் களஞ்சியம் எனப்பெயர் பெற்றது.[3] இதன் தெற்கில் கீழ் மெசொப்பொத்தேமியா அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]வரலாறு
[தொகு]முந்தைய வரலாறு
[தொகு]மேல் மெசொப்பொத்தேமியா, கிமு 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய பல தொல்லியல் களங்களைக் கொண்டது. இப்பகுதியில் துவக்க கால வேளாண்மை முறைகள், காட்டு விலங்குகளில் சிலவற்றை வீட்டு விலங்குகளாகப் பயன்படுத்தினர்.
துவக்க வரலாறு
[தொகு]கிமு 25 நூற்றாண்டுகளுக்கு முன்னர், மேல் மெசொப்பத்தோமியாவில் அசிரியர்களின்வின் தாயகம் நிறுவப்பட்டது. கிமு 24-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை அக்காடியப் பேரரசின் கீழ் இருந்தது. அக்காடியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், அசிரியர்கள் கிமு 2050 முதல் கிமு 605 வரை பண்டைய அசிரியா, பழைய அசிரியப் பேரரசு (கிமு 2050 - 1750), மத்திய அசிரியப் பேரரசு (கிமு 1365-1020) மற்றும் புது அசிரியப் பேரரசுகளை (கிமு 911-605) நிறுவி ஆண்டனர்.
புது அசிரியப் பேரரசுசின் வீழ்ச்சிக்குப் பின்னர், மேல் மெசொப்பத்தோமியாவை, கிமு 605 முதல் தெற்கு மெசொப்பத்தோமியாவின் புது பாபிலோனியப் பேரரசின் கீழும், கிமு 539 முதல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசின் கீழும் சென்றது. கிமு 323 முதல் பண்டைய கிரேக்கத்தின் செலூக்கியப் பேரரசின் கீழ் சென்றது.
பின்னர் மேல் மெசொப்பத்தோமியா பார்த்தியப் பேரரசு மற்றும் உரோமைப் பேரரசு ஆகியவற்றின் கீழ் சென்றது. கிபி ஏழாம் நூற்றாண்டில் இசுலாமிய படையெடுப்புகளுக்கு முன்வரை இப்பகுதி சசானியப் பேரரசின் கீழ் இருந்தது.
உதுமானியப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசுகளுக்கு இடையே அமைந்த மேல் மெசொப்பத்தோமியா முக்கிய வணிக மையமாக விளங்கியது.
மேல் மெசொப்பத்தோமியாவின் முக்கிய நகரங்கள்
[தொகு]இசுலாமியப் பேரரசுகள்
[தொகு]மேல் மொசொபத்தோமியாவை ராசிதீன் கலீபகம் கைப்பற்றி ஆண்ட போது, மக்கள் மீதான ஜிசியா வரியை நீக்கினர்.
ராசிதீன் கலிபகத்தின் சிரியாவின் ஆளுநரான மூஆவியா நிர்வாகத்திலும், பின் வந்த உமையா கலிபாவின் ஆட்சிக் காலத்தில் ஆர்மீனியா, அசர்பைஜான் கைப்பற்றி கலீபகத்தில் இணைத்தனர்.
நீர் வளம், நில வளம் மிக்க வடக்கு மெசொப்பத்தோமியாவில் வேளாண் உற்பத்தி பெருகியதால், இப்பகுதியை அரேபியர்களும், பாரசீகர்களும், பைசாண்டியப் பேரரசினரும் கைப்பற்ற போரிட்டனர்.
சசானியப் பேரரசு மற்றும் உதுமானியப் பேரரசின் பல நகரங்கள் மேல் மெசொப்பத்தோமியாவில் இருந்தன.
பாக்தாத் நகரம் அப்பாசித்து கலிபகத்தின் அரசியல் மையமாக விளங்கியது. இறுதியில் முதல் உலகப் போர் முடிவு வரை மேல் மெசொப்பத்தோமியா, உதுமானியப் பேரரசில் இருந்தது. பின்னர் மேல் மெசொபத்தோமியாவின் பகுதிகள் சிரியா, ஈராக், துருக்கியின் பகுதிகளானது.
நவீன வரலாறு
[தொகு]மேல் மெசொப்பொத்தேமியா என்றும் அசிரியர்களின் தாயகமாகவே இருந்துள்ளது. முதல் உலகப் போரின் போது, துருக்கியின் உதுமானியப் பேரரசிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான அரமேய மொழி பேசிய கிறித்துவர்கள் மேல் மெசொபத்தோமியாவில் அடைக்கலம் தேடி வந்தனர். 9 ஆகஸ்டு 1937ல் ஈராக்கின் மோசுல் நகரத்தில் ஏற்பட்ட சிரியாக் கிறித்தவ இன அழிப்பின் போது, 24,000 அசிரியக் கிறித்தவர்கள் மேல் மெசொபத்தோமியாவில் அடைக்கலம் தேடிச் சென்றனர்.[4] இதனால் மேல் மெசொபத்தோமியாவில் அசிரிய மற்றும் ஆர்மீனியக் கிறித்துவர்களின் மக்கள்தொகை பெருகியது.
இதனால் பாரசீகப் பேரரசும், உதுமானியப் பேரரசுகள் மற்றும் குர்து இன மக்களும் ஒன்றிணைந்து, மேல் மெசொபத்தோமியாவில் வாழ்ந்த எண்ணற்ற அசிரிய, ஆர்மீனிய கிறித்தவ மக்களை கொன்று குவித்து இன அழிப்பு மேற்கொண்டனர்.[5] மேல் மெசொப்பத்தோமியாவில் ஆர்மீனிய-அசிரியக் கிறித்தவர்கள் வாழ்ந்த நகரங்களை இசுலாமிய குர்திஸ்தான் இன மக்கள் தங்கள் வாழ்விடங்களாகக் கொண்டனர்.
தற்கால நிலை
[தொகு]மேல் மெசொப்பத்தோமியாவில் சிரியாக் கிறித்தவர்களின் நான்கு மறை மண்டலங்கள் உள்ளது. அவைகள் சிரியாவின் அலெப்போ, ஹோம்ஸ், ஹமா மற்றும் டமாஸ்கஸ் நகரங்களில் உள்ளது.[4]
தற்போது கடந்த நாற்பது ஆண்டுகளாக, மேல் மெசொப்பத்தோமியாவில் வாழும் மக்கள், அடிப்படை இசுலாமிய தீவிரவாதம் தலைதூக்கியதாலும், இசுலாமிய குர்து மக்களுடனான சர்ச்சைகளாலும், குறிப்பாக அசிரிய கிறித்தவர்கள் வேற்று நாடுகளில் புலம்பெயர்ந்து செல்கின்றனர்.
இதனையும் காண்க
[தொகு]அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ Georges Roux - Ancient Iraq
- ↑ Early Muslim conquests
- ↑ The next battlefield
- ↑ 4.0 4.1 Mouawad, Ray J. (2001) "Syria and Iraq – Repression: Disappearing Christians of the Middle East" Middle East Quarterly 8(1):
- ↑ Hovannisian, Richard G. (2011). The Armenian Genocide: Cultural and Ethical Legacies. Transaction Publishers. p. 271. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4128-3592-3.
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Moore, Andrew M. T.; Hillman, Gordon C.; Legge, Anthony J. (2000). Village on the Euphrates: From Foraging to Farming at Abu Hureyra. Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-510806-X.
- Peter M. M. G. Akkermans; Glenn M. Schwartz (2003). The archaeology of Syria: from complex hunter-gatherers to early urban societies (c. 16,000–300 BC). Cambridge University Press. pp. 72–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-79666-8. Retrieved 27 June 2011.
- Istakhri, Ibrahim. Al-Masālik wa-al-mamālik, Dār al-Qalam, Cairo, 1961
- Brauer, Ralph W., Boundaries and Frontiers in Medieval Muslim Geography, Philadelphia, 1995
- Ibn Khurradādhbih. Almasalik wal Mamalik, E. J. Brill, Leiden, 1967
- Lestrange, G. The lands of the eastern caliphate. Cambridge: Cambridge University Press, 1930
- Mohammadi Malayeri, Mohammad. Tārikh o Farhang-i Irān dar Asr-e Enteghaal, Tus, Tehran, 1996
- Morony, Michael G. Iraq after the Muslim Conquest, Princeton, 1984