முதலாம் சைரஸ்
Appearance
முதலாம் சைரஸ் (கிமு ஏழாம் நூற்றாண்டு), இவர் பேரரசர் இரண்டாம் சைரசின் தாத்தா ஆவார். இவர் பாரசீகத்தை மையமாகக் கொண்டு அகாமனிசியப் பேரரசை நிறுவியவர். முதலாம் சைரஸ் முதலில் ஈலாம் பகுதியை வெற்றி கொண்டார். கிமு 651-இல் புது அசிரியப் பேரரசுக்கு எதிராக கலகத்தில் பாபிலோனில் ஈடுபட்டார். பின்னர் கிமு 639-இல் மெசொப்பொத்தேமியாவின் பேரரசர் அசூர்பனிபால், ஈலாம் பகுதியை கைப்பற்றினார். எனவே அவரின் தலைமையை ஏற்று, தன் மகன் அருக்குவை நினிவே நகர அரண்மனைக்கு அனுப்பி திறை செலுத்தினார்.[1]