உள்ளடக்கத்துக்குச் செல்

மர்துக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மர்துக்
பாபிலோனியர்கள் வழிபட்ட, கிமு 9-ஆம் நூற்றாண்டின் மர்துக் கடவுளும், அவரது டிராகன் வாகனமும்
இடம்பாபிலோன்
கிரகம்வியாழக் கோள்
துணைசர்பனித்
பெற்றோர்கள்என்கி மற்றும் தம்கல்லுனா
சகோதரன்/சகோதரிஉது, நின்சர், நின்குர்ரா, நின்தி
குழந்தைகள்நாபூ
பாபிலோனிய மன்னர் அம்முராபி (நிற்பவர்) மர்துக் அல்லது உது கடவுளிடம் அரச பட்டத்தை பெறும் சிற்பம்[1]சிற்பத்தின் மேற்பகுதியில் அம்முராபியின் சட்டங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. [2]
புது அசிரியப் பேரரசின் முத்திரையில் கடவுள் நாபூ மற்றும் டிராகன் வாகனத்தில் நிற்கும் கடவுள் மர்துக் இடையே நின்று வழிபடுபவர் சிற்பம், காலம் கிமு எட்டாம் நூற்றான்டு

மர்துக் (Marduk) (ஆப்பெழுத்து: 𒀭𒀫𒌓 dAMAR.UTU; சுமேரியம்: amar utu.k சூரியனின் குழந்தை; சூரியக் குட்டி;பாராம்பரிய சிரியாக் மொழி: ܡܪܘܿܕ݂ܵܟܼ (Mrōḏāḵ),[3]பண்டைய கிரேக்கம் Μαρδοχαῖος,[4]பண்டைய மெசொப்பொத்தேமியாவின் சுமேரியக் கடவுள் ஆவார்.[5] கிமு 1800-இல் அம்முராபி ஆட்சிக் காலத்தில் மர்துக் கடவுள் பாபிலோன் நகரத்தின் காவல் தெய்வமாக மக்கள் வழிபட்டனர். படைப்புக் கடவுளான என்கியின் மகனான மர்துக் நீர், நியாயத் தீர்ப்பு மற்றும் மாயாஜாலத்திற்கு அதிபதி ஆவார். இவரது உடன்பிறந்தவர்களில் ஒருவரான உது சூரியக் கடவுள் ஆவார்[6]. இவரது மகன் நாபூ எழுத்தறிவு, நுண்கலைகள், சாத்திரங்கள் மற்றும் ஞானத்திற்கு அதிபதியான கடவுள் ஆவார். இவரது மர்துக்கின் வாகனமாகவும், பணியாளராகவும் டிராகன் எனும் விலங்கு உள்ளது[7]. மர்துக் கடவுள் வியாழக் கோளுடனும், பண்டைய கிரேக்கர்களின் சியுசு கடவுள் மற்றும் உரோமானியர்களின் ஜுபிடர் கடவுளுடனும் ஒப்பிடப்படுகிறார்[8]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோளகள்

[தொகு]
  1. Roux, Georges (27 August 1992), "The Time of Confusion", Ancient Iraq, Penguin Books, p. 266, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780141938257
  2. Code of Hammurabi
  3. Syriac Peshitta- Isaiah 39, 2 Kings 20:12, Jeremiah 50:2
  4. identified with Marduk by Heinrich Zimmeren (1862-1931), Stade's Zeitschrift 11, p. 161.
  5. Frymer-Kensky, Tikva (2005). Jones, Lindsay (ed.). Marduk. Encyclopedia of religion. Vol. 8 (2 ed.). New York. pp. 5702–5703. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-865741-1.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  6. The Encyclopedia of Religion - Macmillan Library Reference USA - Vol. 9 - Page 201
  7. Wiggermann, F. A. M. (1992). Mesopotamian Protective Spirits: The Ritual Texts (in ஆங்கிலம்). BRILL. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-72371-52-2.
  8. Jastrow, Jr., Morris (1911). Aspects of Religious Belief and Practice in Babylonia and Assyria, G.P. Putnam's Sons: New York and London. pp. 217-219.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்துக்&oldid=3851123" இலிருந்து மீள்விக்கப்பட்டது