உள்ளடக்கத்துக்குச் செல்

லகாசு

ஆள்கூறுகள்: 31°24′41″N 46°24′26″E / 31.41139°N 46.40722°E / 31.41139; 46.40722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லகாசு
லகாசு நகர இராச்சிய மன்னர் ஊர் - நன்சேவின் சிற்பம், லூவர் அருங்காட்சியகம்
லகாசு is located in ஈராக்
லகாசு
Shown within Iraq
இருப்பிடம்ஆஷ் சத்ரா, திகார் மாகாணம், ஈராக்
பகுதிமெசொப்பொத்தேமியா
ஆயத்தொலைகள்31°24′41″N 46°24′26″E / 31.41139°N 46.40722°E / 31.41139; 46.40722
வகைபண்டைய நகரம்
பரப்பளவு400 - 600 ஹெக்டேர்
வரலாறு
கட்டப்பட்டதுகிமு மூவாயிரம்
அம்முராபி ஆட்சிக்காலத்தில் பாரசீக வளைகுடா கடற்கரையில் அமைந்த லகாசு நகரம்

லகாசு (Lagash) சுமேரியம்[1] or [ŠIR.BUR].LAKI, "storehouse;"[2] அக்காதியம்அ: Nakamtu;[3]

பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தற்கால ஈராக் நாட்டின் திகார் மாகாணாத்தில் உள்ள டெல் அல் ஹிபா நகரத்தில், பண்டைய லகாஸ் நகரத்தின் தொல்லியல் களம் உள்ளது. பண்டைய லகாஸ் நகரம் புறாத்து ஆறு - டைகிரிஸ் ஆறு கலக்குமிடத்திலிருந்து வடமேற்கே, பண்டைய உரூக் நகரத்திற்கு கிழக்கே 22 கிமீ தொலைவில் உள்ளது. பண்டைய லகாஸ் நகரத்தின் தற்கால பெயர் அல் ஹிபா ஆகும். கிமு 2500 ஆண்டுகள் பழையான இந்நகரம் பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும். மேலும் இந்நகரம் லகாஸ் இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது.[4]

லகாஸ் நகர இராச்சியத்தை முதலாம் லகாஸ் வம்ச மன்னர்களும், இரண்டாம் லகாஸ் வம்ச மன்னர்கள் கிமு 2500 முதல் கிமு 2110 வரை ஆண்டனர்.

தொல்லியல்

[தொகு]

லகாஸ் தொல்லியல் களம் 400 முதல் 600 ஹெக்டேர் (990 - 1,480 ஏக்கர்) பரப்பளவு கொண்டது. லகாஸ் தொல்லியல் களத்தை முதன் முதலில் 1887-இல் அகழ்வாய்வு செய்தவர் இராபர்ட் கோல்டுவே ஆவார்.[5] லகாஸ் தொல்லியல் களத்தை 1953-இல் மீண்டும் தொர்கில்டு மற்றும் ஜேக்கப்சன் ஆய்வு செய்தனர். இறுதியாக 1990-இல் லாகஸ் தொல்லியல் களத்தை 12 ஆண்டுகள் ஆய்வு செய்து ஒரு கோயிலை கண்டுபிடித்தனர்.[6]

லகாசு நகரத்தின் தொல்பொருட்கள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. "ETCSLsearch". பார்க்கப்பட்ட நாள் 21 November 2016.
  2. The Pennsylvania Sumerian Dictionary. "Lagash." Accessed 19 Dec 2010.
  3. "ePSD: lagaš[storehouse]". பார்க்கப்பட்ட நாள் 21 November 2016.
  4. Lagash, ANCIENT CITY, IRAQ
  5. Robert Koldewey, Die altbabylonischen Graber in Surghul und El-Hibba, Zeitschrift für Assyriologie, vol. 2, pp. 403–30, 1887
  6. Excavations in Iraq 1989–1990, Iraq, vol 53, pp. 169–82, 1991

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லகாசு&oldid=3842058" இலிருந்து மீள்விக்கப்பட்டது