இட்டைட்டு மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இட்டைட்டுப் பேரரசு
கிமு 1600–கிமு 1178
கிமு 1400ல் இட்டைட்டுப் பேரரசு (நீல நிறத்தில்).
தலைநகரம் அத்துசா
மொழி(கள்) இட்டைட்டு மொழி, லூவியம், மேலும் பல
அரசாங்கம் முழு முடியாட்சி
இட்டைட்டு அரசர்களின் பட்டியல் லபார்னா I (first)
சுப்பிலூலியுமா II (last)
வரலாற்றுக் காலம் வெண்கலக்காலம்
 -  உருவாக்கம் கிமு 1600
 -  குலைவு கிமு 1178
தற்போதைய பகுதிகள்  துருக்கி
 சிரியா
 லெபனான்

இட்டைட்டு மக்கள் அனத்தோலிய மக்கள் ஆவர். கிமு 1600 அளவில் வடமத்திய அனத்தோலியாவில் இருந்த அத்துசாவில் இட்டைட்டு பேரரசு ஒன்றை நிறுவினர். இப்பேரரசு கிமு 14 ஆம் நூற்றாண்டில் முதலாம் சுப்பிலுலியுமா என்பவனின் கீழ் அதன் உச்ச நிலையில் இருந்தது. அக்காலத்தில் ஆசியா மைனரின் பெரும்பகுதியுடன் லேவன்ட், மேல் மெசொப்பொத்தேமியா ஆகியவற்றின் பகுதிகள் என்பவை இப்பேரரசின் எல்லைக்குள் அடங்கியிருந்தன. கிமு 1180க்குப் பின்னர் வெண்கலக்கால வீழ்ச்சியின்போது இப்பேரரசு ஒரு முடிவுக்கு வந்தது. இப்பகுதி பல துண்டுகளாகப் பிளவுபட்டுப் பல சுதந்திரமான புதிய-இட்டைட்டு நகர அரசுகளாக உருவாயின. இவற்றுட்சில கிமு 8 ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தன.[1]

இட்டைட்டு மக்களின் மொழியான இட்டைட்டு மொழி, இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் அனத்தோலியக் கிளையின் சிறப்பியல்பான உறுப்பு மொழியாகும். இம்மக்கள் தங்களுடைய நாட்டை ஆத்தி என அழைத்தனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Hittites
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டைட்டு_மக்கள்&oldid=2561764" இருந்து மீள்விக்கப்பட்டது