ஹுரியத் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹுரியத் மக்கள்
𒄷𒌨𒊑
Orientmitja2300aC.png
கிமு 2300ல் நடு வெண்கலக் காலத்தில் மெசொப்பொத்தேமியாவில் ஹுரியத் இராச்சியத்தின் அமைவிடம் (ஊதா நிறத்தில்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
பண்டைய அண்மை கிழக்கு
மொழி(கள்)
ஹுரியன் மொழி
சமயங்கள்
ஹுரியன் சமயம்

ஹுரியத் மக்கள் (Hurrians) பண்டைய அண்மை கிழக்கில், நடு வெண்கலக் காலத்தில் வடக்கு மெசொப்பொத்தேமியா மற்றும் அனதோலியாவில் (தற்கால வடக்கு ஈராக் மற்றும் வடகிழக்கு சிரியா) வாழ்ந்தவர்கள். இவர்கள் ஹுரியத் மொழி பேசினர்.

பண்டைய அண்மை கிழக்கில், இந்திய - ஈரானிய மொழி பேசிய ஹுரியத் மக்களின் முக்கிய இராச்சியங்களாக இட்டைட்டு பேரரசு (கிமு 1600 – கிமு 1178) மற்றும் மித்தானி இராச்சியம் (கிமு 1475 – கிமு 1275), அரராத்து இராச்சியம் கிமு 858 - 590) விளங்கியது. துவக்க இரும்புக் காலத்தில் ஹுரியத் மக்கள் பிற இன மக்களுடன் திருமண உறவு கொண்டு கலந்தனர். ஹுரியத் கலப்பின மக்களின் வழித்தோன்றல்களான அரராத்து மக்கள் கிமு 858 முதல் கிமு 735 முடிய கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டனர்.[1][2] தற்கால ஆர்மீனியா மக்கள் ஹுரியன் மற்றும் அரராத்து மொழிகளின் கலப்பின மொழியை பேசுகின்றனர்.[3]

மொழிகள்[தொகு]

கிமு 21-ஆம் நூற்றாண்டின் ஹுரியத் மக்களின் சிங்கச் சிற்பம்

ஹுரியத் மக்கள் செமிடிக் அல்லது இந்திய-ஐரோப்பிய குடும்பத்தைச் சாராத ஒரு கலப்பு மொழியை பேசினர்.

அரராத் மக்கள் பேசிய மொழியுடன், ஹுரியத் மக்களின் மொழி ஓரளவு ஒத்துள்ளது. [4]

கிமு 21-ஆம் நூற்றாண்டிலிருந்து, கிமு 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அசிரியர்களின் கீழ் ஹுரியத் மக்கள் வாழ்ந்த அனதோலியாவை காலனியாதிக்க பகுதியாக இருந்ததால், ஹுரியத் மக்கள் ஆப்பெழுத்து வடிவில் இருந்த அக்காதிய மொழியை பயின்றனர்.

1983ல் ஹுரியத் மொழியில் எழுதப்பட்ட சுடுமண் பலகைகள் தற்கால துருக்கியின் அத்துசா தொல்லியல் களத்தின் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

நடு செப்புக் காலம்[தொகு]

நடு செப்புக் காலத்தில் ஹுரியன் பெயர்கள், மெசொப்பொத்தேமியாவின் தற்கால ஈராக்கின் கிர்குக் பகுதிகளில் காணப்படுகிறது.

ஹுரியத் மக்களின் இருப்பு நூசி மற்றும் ஊர்கேஷ் தொல்லியல் களங்கள் மூலம் அறியப்படுகிறது. ஹுரியத் மக்கள் மேற்கே யூப்ரடீஸ் ஆற்றின் கிளை ஆறான காபூர் ஆற்றின் சமவெளி முதல் கிழக்கே சக்ரோசு மலைத்தொடர் வரை ஊடுருவி வாழ்ந்தார்கள்.

ஊர்கேஷ் நகரம்[தொகு]

காபூர் சமவெளியின் ஊர்கேஷ் நகரம், கிமு மூவாயிரத்தில் ஹுரியத் மக்களின் இராச்சியமாக விளங்கியது மெசொப்பொத்தேமியாவில் கிழக்கு செமிடிக் மொழிகள் பேசிய அக்காடியப் பேரரசர் நரம் - சின் ஆட்சிக் காலத்தில் (கிமு 2254–2218) ஹுரியத் மக்கள் மெசொப்பொத்தேமியாவில் பரவினர். ஊர்கேஷ் நகர இராச்சியத்திற்கு அருகில் டெல் பராக் போன்ற உயர்ந்த நாகரீகம் கொண்ட நகர இராச்சியங்கள் இருந்தன. ஊர்கேஷ் நகரத்தின் தெற்கில், கிமு இரண்டாயிரத்தின் துவக்கத்தில் அமோரிட்டு மக்களின் மாரி இராச்சியம் இருந்தது. அமோரிட்டு மக்களை வென்ற அசிரியர்கள் மெசொப்பொத்தேமியாவில் பழைய அசிரியப் பேரரசை நிறுவி ஹுரியத் மக்கள் வாழ்ந்த பகுதிகளைக் கைப்பற்றினர்.

யம்யத்[தொகு]

இக்காலத்தில் ஹுரியத் மக்கள் சிரியாவின் ஊர்கேஷ் நகரத்திலிருந்து மேற்காக புலம்பெயர்ந்தனர். கிமு 1725ல் வடக்கு சிரியாவில் யம்யத் நகரத்தில் அமோரிட்டு-ஹுரியத் மக்களின் கலப்பு இராச்சியத்தை நிறுவினர். கிமு 1600ல் இட்டைட்டு பேரரசரிடமிருந்து, யம்யத் நகரத்தை வீழ்த்தினார்.

பிந்தைய வெண்கலக் காலம்[தொகு]

மித்தானி[தொகு]

யமயத் நகரத்தின் வீழ்ச்சிக்குப் பின் ஹுரியத் மக்கள் வடக்கு மெசொப்பொத்தேமியாவின் காபூர் சமவெளியில் மித்தானி இராச்சியத்தை (கிமு 1475 – கிமு 1275) நிறுவினர். ஹுரியத் மக்களின் இந்த இராச்சியம், கிமு 1275ல் மத்திய அசிரியப் பேரரசால் (கிமு 1392–கிமு 934) வீழ்த்தப்பட்டது.

அர்ரபா[தொகு]

பபிலோனியா பேரரசுக்குப் பின்னர் கிமு 16-ஆம் நூற்றாண்டில் ஹுரியத் மக்கள் டைகிரிஸ் ஆற்றின் வடகிழக்கே தற்கால ஈராக் நாட்டின் கிர்குக் பகுதியில் புதிய அர்ராபா இராச்சியத்தை நிறுவினர்.

கிமு 14-ஆம் நூற்றாண்டின் நடுவில் ஹுரியத் மக்களின் அர்ராபா இராச்சியத்தை அசிரிய மக்கள் வென்றனர்.

வெண்கலக் காலத்தில் ஹுரியத் அரசுகளின் குலைவு[தொகு]

13-ஆம் நூற்றாண்டில் ஹுரியத் மக்களின் மித்தானி நகர இராச்சியம் உள்ளிட்ட பிற நகர இராச்சியங்கள் அனைத்தும் அசிரிய மக்கள் மற்றும் பிற மக்களால் வெல்லப்பட்டு மறைந்தன.

ஹுரியத் மக்களின் தாயகமான காபூர் சமவெளி மற்றும் தென்கிழக்கு அனதோலியா போன்ற பகுதிகள் மத்திய அசிரியப் பேரரசின் (கிமு 1366 - 1020) மாகாணங்களாகியது.

வடக்கு சிரியாவில் ஹுரியத் மக்கள் பேசிய மொழி, அசிரியர்களின் மொழியான அக்காதியம் மற்றும் அரமேயம் மொழிகளின் பேச்சு வழக்கில் தாக்கம் ஏற்பட்டது.

அரராத்து இராச்சியம்[தொகு]

மத்திய அசிரியப் பேரரசு ஹுரியத் மக்களின் மித்தானி இராச்சியம் போன்ற பகுதிகளை கைப்பற்றிய பின்னர் மீண்டும் ஹுரியத் மக்கள் அரராத்து இராச்சியத்தை நிறுவி தற்கால ஆர்மீனியா, அசர்பைஜான், ஜார்ஜியா, ஈரான், ஈராக் மற்றும் துருக்கி நாடுகளின் பகுதிகளை கிமு 858 முதல் கிமு 590 முடிய 268 ஆண்டுகள் ஆண்டனர்.[5]

புது அசிரியப் பேரரசினர் (கிமு 911 – 609) கிமு 9-ஆம் நூற்றாண்டு முதல் கிமு 7-ஆம் நூற்றாண்டு வரை படிப்படியாக ஹுரியத் மக்களின் அரராத்து இராச்சியப் பகுதிகளை கைபற்றினர்.

புது அசிரியப் பேரரசு கிமு 620 - 605 கால கட்டத்தில் வீழ்ச்சியடைந்த போது ஏற்பட்ட உள்நாட்டுப் போரை பயன்படுத்திக் கொண்டு, அதன் சிற்றரசுகளாக இருந்த மீடியா, சிதியர்கள், சால்டியர்கள், பாபிலோனியர்கள் தன்னாட்சியுடன் தங்கள் பகுதிகளை ஆண்டனர். அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் கிமு 6-ஆம் நூற்றாண்டில் அரராத்து இராச்சியம், மீடியாப் பேரரசின் கீழ் சென்றது.

கிமு 6-ஆம் நூற்றாண்டிற்குப் பின் அரராத்து இராச்சியத்தின் ஹுரியத் மக்கள் வரலாற்றிலிருந்து முற்றிலும் மறைந்தனர். இம்மக்கள் இந்தோ ஐரோப்பிய மக்களான ஆர்மீனியர்களுடன் கலந்து விட்டதாக அறியப்படுகிறது.

பண்பாடு மற்றும் சமூகம்[தொகு]

சிரியாவின் நூசி மற்றும் அத்துசா, அலாலக்கா தொல்லியல் களங்களில் கண்டெடுத்த ஆப்பெழுத்தில் எழுதப்பட்ட அக்காதிய மொழி சுடுமண் பலகைகள் போன்ற தொல்பொருட்கள் மூலம் ஹுரியத் மக்களின் பண்பாடு, சமயம் மற்றும் சமூகம் வெளிப்படுகிறது. இட்டைட்டு பேரரசில் வாழ்ந்த ஹுரியத் மக்களின் பண்பாடு, சமயம் இட்டைட்டு மக்களிடையே பரவியது.

ஹுரியத் மக்களின் உருளை வடிவ முத்திரையில் கவனமாக செதுக்கப்பட்ட புராணக் கதைகள் மூலம் ஹுரியத் மக்களின் சமூகம், வரலாறு, பண்பாடு விளக்குகிறது.

பீங்கான் பாண்டங்கள்[தொகு]

பீங்கான் பாண்டங்கள் உற்பத்தியில் ஹுரியத் மக்கள் தலைசிறந்தவர்களாக இருந்தனர். இம்மக்களின் பீங்கான் பாண்டங்கள், மெசொப்பொத்தேமியா மற்றும் யூப்பிரடீஸ் ஆற்றின் மேற்கு கரை நிலப்பகுதிகளின் தொல்லியல் களங்களில் பரவலாக கிடைக்கப்பெறுகிறது. ஹுரியத் மக்களின் பீங்கான் பாண்டங்கள் புது எகிப்திய இராச்சியத்தில் உயர்வாக மதிக்கப்பட்டது. தொல்லியல் அறிஞர்கள் ஹுரியத் மக்கள் பயன்படுத்தியஅ பீங்கான் பாண்டங்களை காபூர் மற்றும் நூசி பாண்டங்கள் என இரண்டாக வகைப்படுத்தினார்.

காபூர் சமவெளி தொல்லியல் களத்தில் கிடைத்த பீங்கான் பாண்டங்கள் வண்ணமயமான, முக்கோண வடிவமும், புள்ளிகளும், சிவப்பு வர்ணக் கோடுகள் கொண்டதாக வகைப்படுத்தப்படுகிறது.

நூசி தொல்லியல் களத்தில் கிடைத்த ஹுரியத் மக்களின் பீங்கான் பாண்டங்கள் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

உலோகவியல்[தொகு]

ஹுரியத் மக்கள் உலோகவியல் அறிவியலில் குறிப்பாக செப்பு உலோக பாண்டங்களை செய்வதில் சிறப்புடன் திகழ்ந்தனர். ஹுரியத் மக்களின் செப்பு உலோகத்தை சுமேரியா மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.

ஹுரியத் மக்களின் செப்புப் பாத்திரங்கள், தெற்கு மெசொப்பொத்தேமியா முதல் அனதோலியா வரை வணிகம் செய்யப்பட்டது.

அனதோலியாவின் மேட்டு நிலங்களில் வாழ்ந்த ஹுரியத் மக்களின் செப்பு உலோகப் பாத்திரங்களின் வணிக மையமாக, வடக்கு மெசொப்பொத்தேமியாவின் காபூர் சமவெளி விளங்கியது. ஹுரியத் மக்களின் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட செப்புப் பாத்திரங்கள் ஊர்கேஷ் தொல்லியல் களங்களில் கிடைத்துள்ளது.

சமயம்[தொகு]

கிமு 1600 – கிமு 1178ல் வாழ்ந்த இட்டைட்டு மக்களின் சமயம் மீது, ஹுரியத் பண்பாடு அதிக தாக்கம் செலுத்தியது. மேலும் ஹுரியத் மக்களின் பண்பாடு இட்டைட்டு மக்களிடையே பரவியது. ஹுரியத் சமயம பண்டைய அசிரியா மற்றும் அரராத்து இராச்சியத்திலும் பரவியது. ஹுரியத் சமயக் கடவுளர்கள் பல்வேறு வடிவங்களில் பண்டைய எகிப்து தவிர மெசொப்பொத்தேமியா உள்ளிட்ட பண்டைய அண்மை கிழக்கு பகுதி முழுவதும் பரவியது.

ஹுரியத் மக்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்களை வைக்கும் பெட்டி

ஹுரியத் மக்களின் முதன்மைக் கடவுள்கள்:

 • தெஷ்யூப் (Teshub), தட்பவெப்ப கடவுள்
 • ஹெபாத் அல்லது ஹெப்பா (Hebat - Hepa) தாய்க் கடவுள், கடவுள் தெஷ்யூப்பின் மனைவி, இத்தாய் கடவுளை இட்டைட்டு மக்கள் சூரியக் கடவுள் என்றனர்.
 • சர்ருமா (Sarruma), தெஷ்யூப் - ஹெபாத் கடவுளர்களின் மகன்
 • குமார்பி (Kumarbi); கடவுள் தெஷ்யூப்பின் தந்தை, இவரது இருப்பிடம் ஊர்கேஷ் நகரம் ஆகும்.
 • சௌஷ்கா (Shaushka), அசிரியர்களின் கடவுளான இஷ்தருக்கு நிகரான பெண் கடவுள். இவர் வளம், போர் மற்றும் மருத்துவத்திற்கான கடவுள் ஆவார்.
 • சிமேகி; சூரியக் கடவுள்
 • குஷா (Kushuh); சந்திரக் கடவுள்
 • என்கி (Enki); கடல் மற்றும் ஆறுகளின் கடவுள்

ஹுரியத் மக்களின் உருளை வடிவ முத்திரையில், புராண கால சிறகுகள் கொண்ட மனிதர்கள், பறக்கும் நாகம், அரக்கர்களின் உருவங்கள் பொறித்துள்ளனர். இம்முத்திரையின் உருவங்கள் ஹுரியர்களை காக்கும் புனித ஆவிகளாக இருந்திருக்க வேண்டும். ஹுரியத் மக்கள் வீடுகளில் தங்கள் கடவுள்களுக்கு தனி அறை அமைத்து வழிபட்டதாக தெரியவில்லை.

தொல்லியல்[தொகு]

மெசொப்பொத்தேமியாவில் தற்கால ஈராக், சிரியா மற்றும் துருக்கி நாடுகளில் பரவியிருந்த ஹுரியத் மக்கள் வாழ்ந்த குடியிருப்புகள் அகழ்வாய்வுகளில் கண்டறியப்பட்டது. துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதியான யூப்பிரடீஸ் ஆற்றின் காபூர் சமவெளியே ஹுரியத் மக்களின் மையப் பகுதியாக விளங்கியது. தற்போது இப்பகுதிகளில் அணைகள் கட்டியதால், காபூர் சமவெளி நீரில் மூழ்கியது. எனவே இப்பகுதிகளில் தொல்லியல் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ள இயலவில்லை.

இருப்பினும் ஹுரியத் மக்கள் வாழ்ந்த தற்கால ஈராக் மற்றும் சிரியாப் பகுதிகளில் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பா நாட்டுத் தொல்லியல் ஆய்வாளர்களால் 1920களிலும் மற்றும் 1930களிலும் டெல் பராக், நூசி மற்றும் சாகர் பஜார் போன்ற தொல்லியல் களங்களில் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

டெல் எனப்படும் நகரப்புறங்களில் காணப்படும் மண்மேடுகளை அகழ்வாய்வு செய்த போது, புதிய கற்காலம் முதல் உரோமானியர் காலத்திற்கு பிந்தைய காலம் வரையிலான தொல்பொருட்களை வெளிக்கொணர்ந்தனர்.

இத்தொல்லியல் மேடுகளை அகழாய்வு செய்ததில் பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த ஹுரியத் மக்கள் பயன்படுத்திய மட்பாண்டங்கள் மற்றும் தொல்பொருட்கள் கண்டறியப்பட்டது.

இத்தொல்லியல் ஆய்வில், மத்திய செப்புக் காலம் முதல் பிந்தைய செப்புக் காலம் இறுதி வரையில் வாழ்ந்த ஹுரியத் மக்களின் குடியிருப்புகள் கண்டறிப்பட்டது.

குறிப்பிடத்தக்க தொல்லியல் களங்கள்[தொகு]

மெசொப்பொத்தேமியாவில் ஹுரியத் மக்களின் வரலாறு, பண்பாடு, நாகரீகம் கொண்ட பண்டையத் தொல்லியல் களங்களில் குறிப்பிடத்தக்கது:

 • டெல் பராக் எனும் (பண்டைய நகர் இராச்சியம்)[6]
 • டெல் மோசன் Tell Mozan (பண்டைய ஊர்கேஷ்)[7]
 • யோர்கான் தேப் (பண்டைய நூசி)[8]
 • டெல் லைலான் (பண்டைய சிகேனா மற்றும் சுபாத் என்லில்) (ancient Shehna and Shubat-Enlil)[9]
 • டெல் பர்ரி (ancient Kahat)[10]
 • டெல் பைதர் (ancient Nabada)[11]
 • கேனான் தேபே (Kenan Tepe)[12]
 • டெல் துனேய்னிர் (Tell Tuneinir)[13]
 • டெல் சபி அபியாத் (Tell Sabi Abyad)[14]
 • அமௌகர் (Hamoukar) [15]
 • தாய்டு (Taite)

[16]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதாரநூற்பட்டி[தொகு]

 • Asimov, Isaac. The Near East: 10,000 Years of History. Boston: Houghton Mifflin, 1968.
 • Chahin, M. The Kingdom of Armenia. London and New York: Croom Helm, 1987. Reprint, New York: Dorset Press, 1991. Second, revised edition, as The Kingdom of Armenia: A History. Richmond, Surrey: Curzon, 2001. ISBN 0-7007-1452-9
 • Diakonov, Igor M., and Sergei Starostin. Hurro-Urartian as an Eastern Caucasian Language. Münchener Studien zur Sprachwissenschaft. Munich: R. Kitzinger, 1986. ISBN 3-920645-39-1
 • Duchesne-Guillemin, Marcelle. A Hurrian Musical Score from Ugarit: The Discovery of Mesopotamian Music. Sources from the ancient near east, vol. 2, fasc. 2. Malibu, CA: Undena Publications, 1984. ISBN 0-89003-158-4
 • Gelb, Ignace J. Hurrians and Subarians, Studies in Ancient Oriental Civilization No. 22. Chicago: University of Chicago Press, 1944.
 • Gurney, O. R., The Hittites, Hardmonsworth 1952.
 • Güterbock, Hans Gustav, Musical Notation in Ugarit in Revue d'Assyriologie 64 (1970): 45–52.
 • Hawkes, Jacquetta, The First Great Civilizations: Life in Mesopotamia, the Indus Valley, and Egypt, Knopf, 1973.
 • Ivanov, Vyacheslav V., and Thomas Gamkrelidze. "The Early History of Indo-European Languages". Scientific American 262, no. 3, (March 1990): 110-116.
 • Kilmer, Anne Draffkorn. "The Discovery of an Ancient Mesopotamian Theory of Music". Proceedings of the American Philosophical Association 115, no. 2 (April 1971): 131–49.
 • Kilmer, Anne Draffkorn. "The Cult Song with Music from Ancient Ugarit: Another Interpretation". Revue d'Assyriologie 68 (1974): 69–82.
 • Kilmer, Anne Draffkorn, Richard L. Crocker, and Robert R. Brown. Sounds from Silence: Recent Discoveries in Ancient Near Eastern Music. Berkeley: Bit Enki Publications, 1976. (booklet and LP record, Bit Enki Records BTNK 101, reissued [s.d.] with CD).
 • Kurkjian, Vahan M. A History of Armenia. New York: Armenian General Benevolent Union, 1958.
 • Mayrhofer, Manfred. Die Arier im Vorderen Orient—ein Mythos?. Vienna: Verlag der Österreichischer Akademie der Wissenschaften, 1974.
 • Movsisyan, Artak Erjaniki. The Sacred Highlands: Armenia in the Spiritual Geography of the Ancient Near East. Yerevan: Yerevan University Publishers, 2004. ISBN 5-8084-0586-6
 • Nersessian, Hovick. Highlands of Armenia. Los Angeles, 2000.
 • Speiser, E. A., Introduction to Hurrian, New Haven, ASOR 1941.
 • Vitale, Raoul. "La Musique suméro-accadienne: gamme et notation musicale". Ugarit-Forschungen 14 (1982): 241–63.
 • Wilhelm, Gernot. The Hurrians. Aris & Philips Warminster, 1989.
 • Wilhelm, Gernot (ed.). Nuzi at Seventy-five (Studies in the Civilization and Culture of Nuzi and the Hurrians). Bethesda: Capital Decisions, Ltd., 1999.
 • Wegner, Ilse. Einführung in die hurritische Sprache, 2. überarbeitete Aufl. Wiesbaden: Harrassowitz, 2007. ISBN 3-447-05394-1
 • West, M[artin] L[itchfield]. "The Babylonian Musical Notation and the Hurrian Melodic Texts". Music and Letters 75, no. 2 (May 1994): 161–79.
 • Wulstan, David. "The Tuning of the Babylonian Harp", Iraq 30 (1968): 215–28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுரியத்_மக்கள்&oldid=3034533" இருந்து மீள்விக்கப்பட்டது