அத்துசா
அத்துசா | |
---|---|
![]() தென்மேற்கில் உள்ள சிங்க வாயில் | |
இருப்பிடம் | போகாசுக்காலே, துருக்கி |
பகுதி | அனத்தோலியா |
ஆயத்தொலைகள் | 40°01′11″N 34°36′55″E / 40.01972°N 34.61528°Eஆள்கூறுகள்: 40°01′11″N 34°36′55″E / 40.01972°N 34.61528°E |
வகை | குடியிருப்பு |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு 6வது ஆயிரவாண்டு |
பயனற்றுப்போனது | கிமு 1200 |
காலம் | வெண்கலக் காலம் |
கலாச்சாரம் | இட்டைட்டு |
பகுதிக் குறிப்புகள் | |
நிலை | அழிபாடு |
அதிகாரபூர்வ பெயர்: அத்துசா: பாரம்பரியத் தலைநகர் | |
வகை | பண்பாடு |
அளவுகோல் | i, ii, iii, iv |
வரையறுப்பு | 1986 (10வது [தூலக பாரம்பரியக் குழு |
சுட்டெண் | 377 |
அரச தரப்பு | துருக்கி |
பிரதேசம் | ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் |
அத்துசா (Hattusa) பிந்திய வெண்கலக் காலத்தில் இட்டைட்டுப் பேரரசின் தலைநகரமாக இருந்தது. கிசிலிர்மார்க் ஆற்றின் பெரு வளைவுக்குள் அடங்கிய துருக்கியின் தற்கால போகசுக்காலேக்கு அருகில் இப்பழைய நகரின் அழிபாடுகள் காணப்படுகின்றன. 1986ல் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் அத்துசா சேர்க்கப்பட்டது.
வரலாறு[தொகு]
கிமு 2000க்கு முன்னர், தாயக மக்களாகத் தெரியும் ஆத்தி மக்கள் அத்துசு என அழைக்கப்படும் பகுதியில் ஒரு குடியிருப்பை அமைத்திருந்தனர். இப்பகுதியில் இதற்கு முன்னரும் குடியிருப்புக்கள் இருந்ததாகத் தெரிகிறது. ஆத்தியர்கள் தமது முதல் குடியிருப்பை பியூயூக்கலேயின் உயரமான முகடுகளில் அமைத்திருந்தனர்.[1] இப்பகுதியில் குடியிருப்புக்கள் இருந்ததற்கான தடயங்கள் கிமு ஆறாவது ஆயிரவாண்டில் இருந்து கிடைக்கின்றன. கிமு 19ம், 18ம் நூற்றாண்டுகளில், அசிரியாவில் இருந்த அசுரில் இருந்து வந்த வணிகர்கள் தமது வணிக நிலை ஒன்றை இங்கே அமைத்திருந்தனர். இது நகரத்தில், அவர்களுக்குரிய தனியான பகுதியில் அமைந்திருந்தது.