பெருவயிறு மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெருவயிறு மலை
Göbekli Tepe
Göbekli Tepe, Urfa.jpg
பெருவயிறு மலையில் அகழ்வாய்வுகள்
பெருவயிறு மலை is located in துருக்கி
பெருவயிறு மலை
Shown within Turkey#Near East
பெருவயிறு மலை is located in Near East
பெருவயிறு மலை
பெருவயிறு மலை (Near East)
இருப்பிடம்ஓரென்சிக், சான்லியூர்பா மாகாணம், துருக்கி
பகுதிதென்கிழக்கு அனதோலியா
ஆயத்தொலைகள்37°13′23″N 38°55′21″E / 37.22306°N 38.92250°E / 37.22306; 38.92250ஆள்கூறுகள்: 37°13′23″N 38°55′21″E / 37.22306°N 38.92250°E / 37.22306; 38.92250
வகைதொல்லியல் மேடு
வரலாறு
கட்டப்பட்டதுகிமு 10,000
பயனற்றுப்போனதுகிமு 8,000
காலம்மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) முதல் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) வரை
பகுதிக் குறிப்புகள்
நிலைநன்கு பராமரிக்கப்படுகிறது.
Invalid designation
அதிகாரபூர்வ பெயர்: Göbekli Tepe
வகைபண்பாட்டுக் களம்
அளவுகோல்(i), (ii), (iv)
வரையறுப்பு2018 (42-வது அமர்வு)
சுட்டெண்1572
அரசாங்கம்துருக்கி
பிரதேசம்மேற்காசியா

பெருவயிறு மலை (Göbekli Tepe (Turkish: [ɟœbecˈli teˈpe],[1]இம்மலையை துருக்கி மொழியில் பானைவயிறு மலை ("Potbelly Hill") என்று அழைப்பர். [2] இது தென்கிழக்கு அனதோலியா பிரதேசத்தில், துருக்கி நாட்டின், சான்லியூர்பா மாகாணத்தில் உள்ள ஓரென்சிக் நகரத்திற்கு வடகிழக்கே 12 கிமீ மீட்டர் தொலைவில், 15 மீட்டர் உயரம், 300 மீட்டர் சுற்றவளவுடன் கூடிய தொல்லியல் மேடு ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 760 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2008-இல் பெருவயிறு மலைப் பண்பாட்டு களத்தை யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பராம்பரியக் களமாக அறிவித்துள்ளது. [3]

மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) முதல் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) வரை[4] (கிமு 10,000 - கிமு 8,000) மக்கள் இத்தொல்லியல் மேட்டில், தங்களின் சமூக மற்றும் சமயச் சடங்குகள் செய்யும் இடமாகக் கொண்டிருந்தனர்.[5]

பெருவயிறு மலைத் தொல்லியல் மேட்டின் முதல் கட்டத்தில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ) காலத்தில், உலகின் முதல் பெருங்கற்காலத்திய வட்ட வடிவக் கற்தூண்கள் T வடிவத்தில் நிறுவிப்பட்டதை அகழ்வாய்வுவில் கண்டுபிடிக்கப்பட்டது. [6]

பெருவயிறு மலை தொல்லியல் களத்தில் கிடைத்த 200 கற்தூண்களில், 20 கற்தூண்கள் ஒவ்வொன்றும் 6 மீட்டர் உயரமும், 10 டன் எடையும் கொண்டுள்ளது. இக்கற்தூண்கள் ஒவ்வொன்றும் படுகைப்பாறைகளில் பொருத்தப்பட்டுள்ளது.[7]

பெருவயிறு மலையில் இரண்டாம் காலக் கட்டமானது மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ) காலத்தியதாகும். இக்காலத்திய இங்கு நிறுவப்பட்டிருந்த மெருகூட்டப்பட்ட சிறு சுண்ணாம்புக்கல் தூண்களால் நிறுவப்பட்ட அறைகளும், தரை தளங்களும் பின்னர் சிதிலமடைந்தது. பெருவயிறு மலையின் தொல்லிய மேட்டை முதலில் 1996-இல் ஜெர்மானிய தொல்லியல் அறிஞர்கள் அகழ்வாய்வு செய்தனர்.

உர்பா நகருக்கு அருகிலுள்ள சுண்ணாம்பு பீடபூமியின் மேல் "கோபெக்லி டெபே" என்று துருக்கியில் அழைக்கப்படும் மலை உச்சியில் 20 க்கும் மேற்பட்ட வட்டக் கல் அடைப்புகளைக் கண்டுபிடித்தார். அவற்றில் மிகப்பெரியது 20 மீ விட்டம் கொண்டதாக இருந்தது. அதன் மையத்தில் 5.5 மீ உயரமுள்ள இரண்டு செதுக்கப்பட்ட தூண்கள் நின்று கொண்டிருந்தன. கோபெக்லி டெபே என்றால் பெருவயிறு மலை என்று துருக்கிய மொழியில் பொருள். செதுக்கப்பட்ட கல் தூண்கள் கைகள் கட்டப்பட்ட மனித உருவத்தைக் கொண்டிருந்தன. அவை 10 டன்வரை எடை கொண்டவை. அது விலங்குகள் பழக்கப்படுத்தப்படாத காலம். பாண்டங்கள் கண்டுபிடிக்கப்படாத, உலோகக் கருவிகள் இல்லாத காலம். அப்படியொரு காலத்தில் இத்தகைய பிரமாண்டமான கட்டுமானத்தை உருவாக்குவது மக்களுக்கு மிகப்பெரிய, தொழில்நுட்ப ரீதியில் சவாலாக இருந்திருக்க வேண்டும்.

2018 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பதிவேட்டில் கோபெக்லி டெபே சேர்க்கப்பட்டது. மேலும் துருக்கிய சுற்றுலாத்துறை 2019 ஆம் ஆண்டை "கோபெக்லி டெபே ஆண்டு" என்று அறிவித்தது.[8]

பெருவயிறு மலையின் தொல்லியல் களம் (1)
தொல்லியல் களம் மற்றும் அகழ்வாய்வுக் காட்சிகள்
பெருவயிறு மலையில் கிடைத்த தொல்பொருள்களின் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு அறிக்கை, ஆண்டு 2013[9]
பெருவயிறு மலையின் சுற்றுப்புறப் பகுதிகள்
பெருவயிறு மலையின் தொல்லியல் வளாகம் E
விலங்கின் சிற்பம், காலம் (கிமு 9,000)
Pillar 27 from Enclosure C (Layer III) with the sculpture of a predatory animal in high relief catching a prey in low relief.[10]

பெருவயிறு மலையின் தொல்பொருட்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. "Göbekli Tepe". Forvo Pronunciation Dictionary.
 2. "History in the Remaking". Newsweek. 18 Feb 2010. 
 3. Centre, UNESCO World Heritage. "Göbekli Tepe" (en).
 4. "The CANEW Project" (13 March 2009).
 5. Curry, Andrew (November 2008). "Göbekli Tepe: The World's First Temple?". Smithsonian Institution. பார்த்த நாள் 2019-03-31.
 6. Sagona, Claudia (in en). The Archaeology of Malta. Cambridge University Press. பக். 47. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781107006690. https://books.google.com/books?id=qR5TCgAAQBAJ&pg=PA47. பார்த்த நாள்: 25 November 2016. 
 7. Curry, Andrew (November 2008). Gobekli Tepe: The World’s First Temple?. Smithsonian.com. http://www.smithsonianmag.com/history-archaeology/gobekli-tepe.html. பார்த்த நாள்: August 2, 2013. 
 8. 'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்
 9. Shukurov, Anvar; Sarson, Graeme R.; Gangal, Kavita (7 May 2014). "The Near-Eastern Roots of the Neolithic in South Asia" (in en). PLOS ONE 9 (5): Appendix S1. doi:10.1371/journal.pone.0095714. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட் சென்ட்ரல்:4012948. https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0095714. 
 10. Steadman, Sharon R.; McMahon, Gregory (2011) (in en). The Oxford Handbook of Ancient Anatolia: (10,000-323 BCE). Oxford University Press USA. பக். 923. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195376142. https://books.google.com/books?id=TY3t4y_L5SQC&pg=PA923. 

மேற்கோள்கள்[தொகு]

பன்னாட்டுத் தர தொடர் எண் 0342-118X

பன்னாட்டுத் தர தொடர் எண் 0153-9345:

 • K. Schmidt: Sie bauten die ersten Tempel. Das rätselhafte Heiligtum der Steinzeitjäger. Verlag C.H. Beck, München 2006, ISBN 3-406-53500-3.
 • K. Schmidt, "Göbekli Tepe. Eine Beschreibung der wichtigsten Befunde erstellt nach den Arbeiten der Grabungsteams der Jahre 1995–2007", in K. Schmidt (ed.), Erste Tempel—Frühe Siedlungen. 12000 Jahre Kunst und Kultur, Ausgrabungen und Forschungen zwischen Donau und Euphrat, (Oldenburg 2009): 187–233.
 • K. Schmidt, "Göbekli Tepe—the Stone Age Sanctuaries: New results of ongoing excavations with a special focus on sculptures and high reliefs," Documenta Praehistorica XXXVII (2010), 239–256: https://web.archive.org/web/20120131114925/http://arheologija.ff.uni-lj.si/documenta/authors37/37_21.pdf
 • Metin Yeşilyurt, "Die wissenschaftliche Interpretation von Göbeklitepe: Die Theorie und das Forschungsprogramm". (Neolithikum und ältere Metallzeiten. Studien und Materialien, Band 2.) Lit Verlag, Berlin 2014, ISBN 978-3-643-12528-6.
 • வார்ப்புரு:Megalithic Portal

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Göbekli Tepe
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

நூல்கள்[தொகு]

 • Andreit, Mihai (Sep 4, 2013). "World’s oldest temple probably built to worship the dog star, Sirius". ZME Science.
 • Batuman, Elif (Dec 19, 2011). "The Sanctuary". The New Yorker.
 • Birch, Nicholas (23 April 2008). "7,000 years older than Stonehenge: the site that stunned archaeologists". The Guardian. https://www.theguardian.com/science/2008/apr/23/archaeology.turkey. 
 • Curry, Andrew (Nov 2008). "Gobekli Tepe: The World’s First Temple?". Smithsonian Mag.
 • Dietrich, Laura (2019). "Cereal Processing at Early Neolithic Göbekli Tepe, Southeastern Turkey". PLoSONE 14(5):e0215214.
 • Mann, Charles C. (June 2011). "The Birth of Religion". National Geographic.
 • Scham, Sandra (Nov 2008). "The World's First Temple". Archaeology.
 • Symmes, Patrick (Feb 18, 2010). "Turkey: Archeological Dig Reshaping Human History". Newsweek.

புகைப்படங்கள்[தொகு]

 • "The Birth of Religion". National Geographic. June 2011. 2012-03-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-10-15 அன்று பார்க்கப்பட்டது.

காணொளிகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருவயிறு_மலை&oldid=3360678" இருந்து மீள்விக்கப்பட்டது