படுகைப்பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசுகாட்லாந்தில் உள்ள கேய்த்நெசில் சாண்ட்சைடு குடாவில் காணப்படும் படுகைப்பாறை
R என்று பெயரிடப்பட்ட படுகைப்பாறையுடன் கூடிய மண் விவரம்

நிலவியலில், படுகைப்பாறை அல்லது அடிப்பாறை (Bedrock) என்பது புவி அல்லது புவியொத்த கோள் ஒன்றின் மேற்பரப்பில் தளர்வான மென்மையான பொருளாகக் காணப்படும் ரிகோலித் என்ற மண்ணெடுப்பு அடுக்குப் பகுதிக்குக் கீழே அமைந்திருக்கும் பாறையாக உருப்பெறவிருக்கும் படிமமாகும். உடைந்த மற்றும் பழுதடைந்த இப்படிமத்தில் மண் மற்றும் மண்ணின் கீழ்ப்பகுதியும் அடங்கும். இப்படிமத்தின் மேற்பரப்பில் உள்ள பகுதியை பாறையின் மெல் தளம் என்று புவி பொறியியலில் அழைக்கப்படுகிறது. சிவில் பொறியியலில் இப்படுகைப்பாறைகளை தோண்டி, துளையிட்டு அடையாளம் காண்பதே ஒரு முக்கியமான பணியாகும். மேற்பரப்பு படுகைப்பாறைகள் (சறுக்கல் எனவும் அழைக்கப்படும்) மிகவும் தடிமனாக இருக்கும், இது புவியின் மேற்பரப்பிலிருந்து நூற்றுக்கணக்கான மீட்டர்களுக்கு கீழே உள்ளது.

வரைவிலக்கணம்[தொகு]

அடிப்பாறை என்பது தளர்வான மேற்பரப்புப் பொருளுக்கு அடியில் இருக்கும் திடமான பாறையாகும்.[1] பாறையின் ஒரு வெளிப்படும் பகுதி பொதுவாக ஒரு வெளிப்படுபாறை என்று அழைக்கப்படுகிறது.[2] அடிப்பாறைக்கு மேலுள்ள பல்வேறு வகையான உடைந்த மற்றும் காலநிலைக்கு உட்பட்ட பாறைப் பொருட்கள், அதாவது மண், அடி மண் போன்றவை, மண்ணெடுப்பு அடுக்கு (regolith) என்று அழைக்கப்படுகின்றன.[3]

வானிலையாலழிதல்[தொகு]

வெளிப்படும் பாறைகள் வானிலையாலழிதலை எதிர்நோக்குகின்றன. இது பாறையின் கட்டமைப்பை மாற்றியமைத்து மண்ணரிப்புக்கு ஆளாகிறது. அடிப்பாறைகள் அதன் மேலெல்லையில் நிலத்தடி வானிலையாலழியக்கூடும், இது வேதிச்சிதைவுற்ற பாறையை உருவாக்குகிறது.[4]

புவியுரு வரைபடம்[தொகு]

ஒரு பகுதியின் புவியுரு வரைபடம் பொதுவாக வெவ்வேறு பாறை வகைகளின் பரவலைக் காண்பிக்கும், அனைத்து மண் அல்லது மற்ற மேலோட்டமான படிவுகளும் அகற்றப்பட்டால் மேற்பரப்பில் அவை வெளிப்படும். மேலோட்டமான படிவுகள் மிகவும் தடிப்பாக இருந்தால், அடித்தளத்தில் உள்ள பாறையை நம்பத்தகுந்த வகையில் வரைபடமாக்க முடியாது, அதற்குப் பதிலாக மேலோட்டமான படிவுகள் வரைபடமாக்கப்படும் (உதாரணமாக, வண்டல் போன்றவை).[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jackson, Julia A., தொகுப்பாசிரியர் (1997). "Bedrock". Glossary of geology. (Fourth ). Alexandria, Virginia: American Geological Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0922152349. https://archive.org/details/glossaryofgeolog0000unse_k9a5. 
  2. Jackson 1997, "Outcrop".
  3. Allaby, Michael (2013). "Regolith". A dictionary of geology and earth sciences (Fourth ). Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780199653065. https://archive.org/details/dictionaryofgeol00unse. 
  4. Lidmar-Bergström, Karna; Olsson, Siv; Olvmo, Mats (January 1997). "Palaeosurfaces and associated saprolites in southern Sweden". Geological Society, London, Special Publications 120 (1): 95–124. doi:10.1144/GSL.SP.1997.120.01.07. Bibcode: 1997GSLSP.120...95L. http://sp.lyellcollection.org/cgi/content/abstract/120/1/95. பார்த்த நாள்: April 21, 2010. 
  5. "Digital Geology – Bedrock geology theme". British Geological Survey. Archived from the original on 13 December 2009. பார்க்கப்பட்ட நாள் 12 November 2009.

மேலதிக வாசிப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=படுகைப்பாறை&oldid=3739584" இலிருந்து மீள்விக்கப்பட்டது