மூன்றாம் ராமேசஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூன்றாம் ராமேசஸ்
கர்னாக் நகரத்தின் கோன்சு கோயிலில் மூன்றாம் ராமேசசின் நினவு ஓவியங்கள்
பார்வோன்
ஆட்சிக்காலம்கிமு 1186–1155, எகிப்தின் இருபதாம் வம்சம்
முன்னவர்செத்னக்தே
பின்னவர்நான்காம் ராமேசஸ்
துணைவி(யர்)லிசெத் தா-ஹெத்ஜெர்த், தியுதி, தியு
பிள்ளைகள்நான்காம் ராமேசஸ், ஆறாம் ராமேசஸ், எட்டாம் ராமேசஸ்
தந்தைசெத்னக்தே
தாய்தியு
பிறப்புகிமு 1217
இறப்புகிமு 1155
அடக்கம்KV 11
நினைவுச் சின்னங்கள்மெடிநெத் அபு கோயில்

மூன்றாம் ராமசேஸ் (Ramesses III) புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 1186 முதல் கிமு 1155 முடிய 31 ஆண்டுகள் ஆண்டார். இவரது நீண்ட ஆட்சிக் காலத்தின் முடிவில் எகிப்து இராச்சியம் பொருளாதாரம் மற்றும் இராணுவம் வலு இழந்து காணப்பட்டது. [1][2] மெடிநெத் அபு பகுதியில் மெடிநெத் அபு கோயில் கட்டி, புது இராச்சியத்தின் 9 மன்னர்கள் பெயர்கள் கொண்ட மெடிநெத் மன்னர்கள் பட்டியலை கல்வெட்டில் வடித்தார்.

18-ஆம் வம்சம், 19-வது வம்சம் மற்றும் இருபதாம் வம்சத்தினர் எகிப்தின் புது இராச்சியத்தை ஆண்ட காலத்தை இராமசேசியம் காலம் என்பர்.

மூன்றாம் ராமேசசின் சிலை, ராக்பெல்லர் அருகாட்சியகம், ஜெருசலம்
கர்னாக் கோயிலில் அமூன் கடவுள் நடுவில் மூன்றாம் ராமேசசின் சிலை
மூன்றாம் ராமேசசின் உருளணிகள்

பார்வோன்களின் அணிவகுப்பு[தொகு]

3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் மூன்றாம் ராமேசஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [3][3]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Eric H. Cline and David O'Connor, eds. Ramesses III: The Life and Times of Egypt's Last Hero (University of Michigan Press; 2012) 560 pages; essays by scholars.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ramses III
என்பதில் ஊடகங்கள் உள்ளன."https://ta.wikipedia.org/w/index.php?title=மூன்றாம்_ராமேசஸ்&oldid=3825270" இலிருந்து மீள்விக்கப்பட்டது