பண்டைய உலக அதிசயங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பண்டைய உலக அதிசயங்கள் (வலமிருந்து இடமாக, மேலிருந்து கீழ்) கிசாவின் பெரிய பிரமிட், பாபிலோனின் தொங்கு தோட்டம், ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை,எபிசஸ்லில் உள்ள ஆர்ட்டிமிஸ் கோயில், மௌசோல்லொஸின் மௌசோலியம், ரோடொஸின் கொலோசஸ் மற்றும் அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம் ஆகியவை 16-ம் நூற்றாண்டை சேர்ந்த டச்சு ஓவியர் மார்த்தன் வான் யீம்சூகெர்க் என்பவரால் சித்தரிக்கப்பட்டது.

பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கி.மு 140 அளவில் எழுதப்பட்ட கவிதையொன்றில், இவ்வமைப்புக்களைப் பெருஞ் சாதனைகளாக இவர் குறித்துள்ளார். இதற்கு முன்னரும், ஹீரோடோத்தஸ் என்பவரும், சைரீனின் கல்லிமாச்சுஸ் என்பவரும் இதுபோன்ற பட்டியல்களை உருவாக்கியிருந்ததாகக் கருதப்படுகின்றது எனினும், இவை பற்றிய குறிப்புக்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பண்டைய உலக ஏழு அதிசயங்கள்[தொகு]

தற்போது வழக்கிலுள்ள, அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தை உள்ளடக்கிய, பண்டைய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல் மத்திய காலத்தில் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. அண்டிப்பேற்றரின் பட்டியலில், இக்கலங்கரை விளக்கத்துக்குப் பதிலாக, பபிலோனின் சுவர்களே காணப்பட்டது. காலவரிசையில் அமைந்த பட்டியல் இது.

பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றான கிசாவின் பெரிய பிரமிட் தோற்றம்

இவற்றில் தலா இரண்டு அதிசயங்கள், இன்றைய எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய நாட்டின் எல்லைகளுக்குள்ளும், ஒன்று ஈராக்கிலும் அமைந்திருந்தன. இன்றுவரை தப்பியிருப்பது கிசாவின் பெரிய பிரமிட் மட்டுமே. இவற்றுள் மிகக் குறைந்த காலம் நிலைத்திருந்தது, ரோட்ஸின் கொலோசஸ் ஆகும். நின்றநிலையில் 56 ஆண்டுகள் மட்டுமேயிருந்த இது, பூமியதிர்ச்சியொன்றினால் விழுந்துவிட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]


பண்டைய உலக அதிசயங்கள்
கிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்