பாபிலோனின் தொங்கு தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாபிலோனின் தொங்கு தோட்டம்

பாபிலோனின் தொங்கு தோட்டமும் (Hanging Gardens of Babylon) (செமிராமிஸின் தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) பாபிலோனின் சுவர்களும் பண்டைய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுகாத்நேசர் ([II|Nebuchadnezzar]) தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பாபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகம் இன்னமும் உள்ளது.[1] [2]

இரண்டாம் நெபுகாத்நேசர் என்ற மன்னனின் முயற்சியால் அவருடைய அரண்மனையில் கி.மு.600 ஆண்டுகளுக்கு முன் கற்களால் வளைவுகளும் மொட்டை மாடிகளும் கட்டப்பட்டன. அவற்றில் செடிகளும் தாவரங்களும் பயிரிடப்பட்டன. யூப்ரேட்ஸ் ஆற்றிலிருந்து கப்பி முறையில் தண்ணீரை இறைத்து குழாய்கள் வழியாகச் செடிகளுக்குப் பாய்ச்சினர். [3]

இசுட்ராபோ, டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பாபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


பண்டைய உலக அதிசயங்கள்
கிசாவின் பெரிய பிரமிட் | பாபிலோனின் தொங்கு தோட்டம் | ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை | ஆர்ட்டெமிஸ் கோயில் | மௌசோல்லொஸின் மௌசோலியம் | ரோடொஸின் கொலோசஸ் | அலெக்சாந்திரியாவின் கலங்கரை விளக்கம்