எஸ்தரின் நட்சத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இஷ்தரின் நட்சத்திரம்
துர்கை போன்று காணப்படும், பெண் கடவுளான எஸ்தரின் உருவத்துடன், எண் முனை நட்சத்திரம் மற்றும் சிங்கச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட பண்டைய அக்காடிய உருளை வடிவ முத்திரை, (ஆண்டு கிமு 2334-2154)}

எஸ்தரின் நட்சத்திரம் (Star of Ishtar or Star of Inanna) பண்டைய சுமேரியப் பெண் கடவுளான எஸ்தரின் சின்னங்களில் ஒன்றாகும். இந்நட்சத்திரம் எட்டு முனைகள் கொண்டது. [1]

சுமேரியாவின் (தற்கால ஈராக் நாடு) செமிடிக் மக்களின் பெண் கடவுளான இன்னன்னாவே, புது அசிரியப் பேரரசு மற்றும் புது பாபிலோனியப் பேரரசு காலங்களில் எஸ்தர் எனும் பெயரில் அறியப்படுகிறார்.

எஸ்தர் எனும் இஷ்தர் கடவுளின் முதன்மை சின்னமாக சிங்கத்துடன், எட்டு முனை நட்சத்திரமும் அடங்கும். [2] [3] பெண் கடவுளான இஷ்தர், வெள்ளிக் கோளுடன் தொடர்புடையவர்.

கிமு 1200ல் எட்டு முனை நட்சத்திரத்துடன் (இடது) கூடிய பெண் கடவுள் எஸ்தர் (இடது), கிமு 1200

ஈராக் நாட்டுக் கொடியில்[தொகு]

1932-1959 முடிய ஈராக் நாட்டு மரபுச் சின்னத்தில் எஸ்தரின் நட்சத்திரங்கள், (மேல்)
1959 - 1963 முடிய ஈராக் நாட்டுக் கொடியின் நடுவில் எட்டு முனை எஸ்தரின் நட்சத்திரம்

1959 முதல் 1965 முடிய ஈராக் நாட்டு தேசிய சின்னத்தில், எஸ்தர் கடவுளின் இந்த எண் முனை நட்சத்திரத்துடன், சூரியக் கடவுளான உதுவுடன் இணைத்துக் காட்டப்பட்டது.[4][5][6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதார நூற்பட்டியல்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]