வெள்ளி (கோள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளி  ♀
Venus in approximately true colour, a nearly uniform pale cream, although the image has been processed to bring out details.[1] The planet's disc is about three-quarters illuminated. Almost no variation or detail can be seen in the clouds.
A real-colour image of Venus taken by மரைனர் 10 processed from two filters. The surface is obscured by thick கந்தக டைஆக்சைடு clouds.
காலகட்டம்J2000
சூரிய சேய்மை நிலை
  • 0.728213 AU
  • 108,939,000 km
சூரிய அண்மை நிலை
  • 0.718440 AU
  • 107,477,000 km
அரைப்பேரச்சு
  • 0.723332 AU
  • 108,208,000 km
மையத்தொலைத்தகவு 0.006772 [4]
சுற்றுப்பாதை வேகம்
சூரியவழிச் சுற்றுக்காலம் 583.92 days[2]
சராசரி சுற்றுப்பாதை வேகம் 35.02 km/s
சராசரி பிறழ்வு 50.115°
சாய்வு
Longitude of ascending node 76.680° [4]
Argument of perihelion 54.884°
துணைக்கோள்கள் None
சிறப்பியல்பு
சராசரி ஆரம்
  • 6,051.8±1.0 km[6]
  • 0.9499 Earths
தட்டையாதல் 0[6]
புறப் பரப்பு
  • 4.6023×108 km2
  • 0.902 Earths
கனஅளவு
  • 9.2843×1011 km3
  • 0.866 Earths
நிறை
  • 4.8675×1024 kg[7]
  • 0.815 Earths
அடர்த்தி 5.243 g/cm3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்
  • 8.87 m/s2
  • 0.904 g
விடுபடு திசைவேகம்10.36 km/s (6.44 mi/s)[8]
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் −243.025 d (retrograde)[2]
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் 6.52 km/h (1.81 m/s)
அச்சுவழிச் சாய்வு 2.64° (for retrograde rotation)
177.36° (to orbit)[2]
வடதுருவ வலப்பக்க ஏற்றம்
  • 18h 11m 2s
  • 272.76°[9]
வடதுருவ இறக்கம் 67.16°
எதிரொளி திறன்
மேற்பரப்பு வெப்பநிலை
   கெல்வின்
   Celsius
சிறுமசராசரிபெரும
737 K[2]
462 °C
தோற்ற ஒளிர்மை
  • brightest −4.9[12] (crescent)
  • −3.8[13] (full)
கோணவிட்டம் 9.7″ to 66.0″[2]
பெயரெச்சங்கள் Venusian or (rarely) Cytherean, Venerean
வளிமண்டலம்
பரப்பு அழுத்தம் 92 bar (9.2 MPa)
வளிமண்டல இயைபு

வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும்..[14][15] சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது காலை நட்சத்திரம் , விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது கூடுதலான பைங்குடில் விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. வெள்ளி பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் ஆகும்.

வெள்ளி ஞாயிறை ஒவ்வொரு 224.7 புவி நாட்களில் சுற்றி வருகின்றது.[16] இக்கோளிற்கு இயற்கைத் துணைக்கோள் ஏதுமில்லை. ஐரோப்பிய வழக்குகளில் இதற்கு உரோமைத் தொன்மவியலில் அழகிற்கும் காதலுக்குமான பெண்கடவுள் வீனசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்தியத் தொன்மவியலில் அசுரர்களின் குருவான சுக்கிரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியில் இக்கோளின் தோற்ற ஒளிப்பொலிவெண் −4.6 ஆக உள்ளதால் இதன் ஒளியினால் நிழல்கள் உருவாகும்.[17] வெள்ளிக்கோள் புவியிலிருந்து சூரியனை நோக்கிய உட்புறக் கோளாக இருப்பதால் எப்போதுமே சூரியனுக்கு அருகாமையில் இருப்பதாகத் தோன்றுகின்றது.

வெள்ளிக்கோள் ஒரு புவியொத்த கோள் ஆகும். இது புவியை ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் சிலநேரங்களில் வெள்ளி புவியின் "சகோதரிக் கோள்" எனப்படுகின்றது. இக்கோள் புவிக்கு மிக அருகிலுள்ள கோளும் ஒத்த அளவை உடைய கோளும் ஆகும். அதேநேரத்தில் இது பலவகைகளில் புவியிலிருந்து வேறுபட்டுள்ளதும் சுட்டப்படுகின்றது. தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் மிக அடர்த்தியான வளிமண்டலம் உள்ள கோள் வெள்ளியாகும். இந்த வளிமண்டலம் 96%க்கும் கூடிய காபனீரொக்சைட்டு அடங்கியது. கோளின் தரைப்பரப்பில் வளிமண்டல அழுத்தம் புவியை விட 92 மடங்காக உள்ளது. சூரியக் குடும்பத்தின் மிகவும் வெபமிகுந்த கோளாக விளங்கும் வெள்ளியின் தரைமட்ட வெப்பநிலை 737 K (464 °C; 867 °F)ஆக உள்ளது. இங்கு கார்பன் சுழற்சி நடைபெறாமையால் பாறைகளோ தரைப்பரப்பு மேடுபள்ளங்களோ உருவாகவில்லை; தவிரவும் உயிர்த்திரளில் கரிமத்தை உள்வாங்கிட எவ்வித கரிம உயிரினமும் இல்லை. வெள்ளியின் வளிமண்டலத்தில் சல்பூரிக் அமில மேகங்களின் எதிரொளிப்பால் கீழுள்ள தரைப்பரப்பை ஒளி மூலம் காணவியலாது உள்ளது. முன்னொரு காலத்தில் வெள்ளியில் பெருங்கடல்கள் இருந்திருக்கலாம்;[18][19] ஆனால் இவை பைங்குடில் விளைவின் வெப்பநிலைகளால் ஆவியாகியிருக்கலாம்.[20] ஆவியான நீர் ஒளிமின்பிரிகையால் பிரிக்கப்பட்டிருக்கலாம்; கோளில் காந்தப்புலங்கள் இல்லாமையால் கட்டற்ற ஐதரசன் சூரியக் காற்றால் கோள்களிடையேயான விண்வெளிக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்.[21] வெள்ளியின் தரைப்பகுதி வறண்ட பாலைவனமாக, அவ்வப்போதைய எரிமலை வெடிப்புகளால் புதிப்பிக்கப்பட்ட வண்ணம், உள்ளது.

2020 செப்டம்பரில் பாஸ்பீன் வளிமம் வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறியப்பட்ட இயற்கை மூலங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்று நம்பப்படுவதை விட சுமார் பத்தாயிரம் மடங்கு அதிகமான செறிவுகளில் கோளின் வளிமண்டலத்தில் இவ்வாயு உள்ளது.[22] வெள்ளியின் வளிமண்டலத்தில் பாஸ்பீன் கண்டறியப்பட்டமை, அக்கோளின் வளிமண்டலத்தில் கரிம வாழ்வின் சாத்தியக்கூறுகள் இருப்பதற்கான ஊகத்திற்கு வழிவகுத்துள்ளது.[23][24]

பௌதிகப் பண்புகள்[தொகு]

இது புவியைப் போல கற்கோளத்தைக் கொண்ட கோளாகும். இதன் திணிவும் ஆரை நீளமும் கிட்டத்தட்ட புவியினுடையதை ஒத்துப் போவதால் இக்கோளானது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் ஆரை 12092 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டது.

புவியியல்[தொகு]

வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது. அதில் 10 சதவீதம் மென்மையான லோபடே சமவெளியும் 70 சதவீதம் மென்மையான, ​​எரிமலை சமவெளியும் அடக்கம். இதில் வடதுருவத்தில் ஒரு கண்டமும் வெள்ளியின் நிலநடுக்கோட்டிற்கு சற்று தெற்கில் ஒரு கண்டமும் அமையப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா கண்டத்திற்கு இணையான பரப்பளவு கொண்ட வடக்கு கண்டம் பாபிலோனியக் காதல் தெய்வமான இசுதாரின் பெயரில் அழைக்கப்படுகிறது. மேக்ஸ்வெல் மோன்டசு, வெள்ளியின் மிக உயர்ந்த மலையாகும். அதன் சிகரம் சராசரி மேற்பரப்பு உயரமான 11 கி.மீ. தொலைவில் உள்ளது. பரப்பளவில் இரண்டு தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இணையான தெற்குக் கண்டம் அப்ரோடிட் டெர்ரா கிரேக்க காதல் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.

காந்தப் புலமும் மையக்கருவும்[தொகு]

1967இல் செலுத்தப்பட்ட வெனரா 4 என்ற விண்கலம் வெள்ளியில் உள்ள காந்தப்புலம் புவியினுடையதை விட மிக வலிவற்றதாக இருப்பதைக் கண்டறிந்தது. இந்தக் காந்தப் புலமும் அயனிமண்டலத்திற்கும் சூரியக் காற்றுக்குமிடையேயான இடைவினையால் தூண்டப்பட்டதாகும்;[25][26] பொதுவாக கோள்களின் கருவத்தில் காணப்படும் உள்ளக மின்னியற்றி போன்று வெள்ளியில் இல்லை. வெள்ளியின் சிறிய தூண்டப்பட்ட காந்த மண்டலம் அண்டக் கதிர்களிலிருந்து வளிமண்டலத்திற்கு எவ்வித பாதுகாப்பும் வழங்குவதில்லை. இந்தக் கதிர்களால் மேகங்களுக்கிடையே மின்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.[27]

புவியை ஒத்த அளவினதாக இருப்பினும் வெள்ளியில் காந்தப்புலம் இல்லாதிருப்பது வியப்பளிப்பதாக உள்ளது. உள்ளக மின்னியற்றி இயங்கிட மூன்று முன்தேவைகள் உள்ளன: கடத்துகின்ற நீர்மம், தற்சுழற்சி, மற்றும் மேற்காவுகை. வெள்ளியின் கருவம் மின்கடத்தும் தன்மையதாக கருதப்படுகின்றது; வெள்ளியின் சுழற்சி மிக மெதுவாக இருப்பினும் ஆய்வகச் சோதனைகளில் இந்த விரைவு மின்னியக்கி உருவாகப் போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[28][29] இதனால் வெள்ளியில் மின்னியக்கி இல்லாதிருப்பதற்கு மேற்காவுகை இல்லாதிருக்கலாம் என நம்பப்படுகின்றது.[30] புவியில் மையக்கருவின் வெளிப்புற அடுக்குகளில் உள்ள நீர்மத்தின் வெப்பநிலையை விட உட்புற அடுக்குகளில் மிகக் கூடுதலாக இருப்பதால் மேற்காவுகை நிகழ்கின்றது. வெள்ளியில் ஏதேனும் மேற்புற நிகழ்வினால் தட்டுநிலப் பொறைக் கட்டமைப்பை மூடி கருவத்தில் குறைந்த வெப்பச்சலனத்தை உண்டாக்கி இருக்கலாம். இதனால் மேலோட்டு வெப்பநிலை உயர்ந்து உள்ளிருந்து வெப்பப் பரவலை தடுத்திருக்கலாம். இக்காரணங்களால் புவிசார் மின்னியக்கி செயற்பாடு இல்லாதிருக்கலாம். மாற்றாக, கருவத்தின் வெப்பத்தால் மேலோடு சூடுபடுத்தப்படலாம்.[30]

மற்றொரு கருத்தாக, வெள்ளியில் திண்மநிலை உட்கருவம் இல்லாதிருக்கலாம் அல்லது அந்தக் கருவம் குளிரடையவில்லை என முன்வைக்கப்படுகின்றது.[31] இதன் காரணமாக முழுமையான நீர்மப்பகுதி அனைத்துமே ஒரே வெப்பநிலையில் இருக்க வாய்ப்புள்ளது. வெள்ளியின் கருவம் முழுமையுமே திண்மமாக மாறிவிட்டது என்ற மாற்றுக் கருத்துக்கும் வாய்ப்புள்ளது. உட்கருவத்தில் உள்ள கந்தகத்தின் அடர்வைப் பொறுத்து கருவத்தின் நிலை இருக்கும்; ஆனால் கந்தக அடர்த்தி குறித்து இதுநாள் வரை அறியப்படவில்லை.[30]

1990க்கும் 1994க்கும் இடையே மெகல்லன் துருவியால் பிடிக்கப்பட்ட மேகங்களால் மூடப்படாத வெள்ளியின் காட்சி

வெள்ளியில் காந்தப்புலம் வலிவற்றதாக இருப்பதால் அதன் வெளிப்புற வளிமண்டலத்துடன் சூரியக்காற்று நேரடியாகவே இடைவினையாற்றுகின்றது. இங்கு புற ஊதாக்கதிர்களால் நடுநிலை மூலக்கூறுகள் பிரிக்கப்பட்டு ஐதரசன், ஆக்சிசன் அயனிகள் உருவாகின்றன. இந்த அயனிகளுக்கு வெள்ளியின் ஈர்ப்புப் புலத்திலிருந்து விடுபட சூரியகாற்று தேவையான ஆற்றலை வழங்குகின்றது. இந்த அரித்தலால் குறைந்த நிறையிலுள்ள ஐதரசன், ஹீலியம், ஆக்சிசன் அயனிகள் இழக்கப்படுகின்றன; உயர்நிறை உள்ள மூலக்கூறுகளான கார்பன் டைஆக்சைடு போன்றவை தக்க வைத்துக்கொள்ளப்படுகின்றன. இத்தகைய சூரியக்காற்றின் செய்கையால் வெள்ளியில் அது உருவானபோது இருந்திருக்கக்கூடிய நீர் முதல் பில்லியன் ஆண்டுகளில் இழக்கப்பட்டிருக்கலாம். தவிரவும் இச்செய்கையால் உயர்ந்த வளிமண்டலத்தில் நிறை குறைந்த ஐதரசனுக்கும் நிறையான தியூட்டிரியத்திற்குமான விகிதம் உட்புற வளிமண்டலத்தில் நிலவும் விகிதத்தை விட 150 மடங்கு குறைந்துள்ளது.[32]

புறத் தோற்றம்[தொகு]

புவியில் இருந்து மானிடர் நோக்கும் போது வெள்ளிக் கோளே எந்த விண்மீனை (சூரியனைத் தவிர்த்து) விடவும் வெளிச்சமாக உள்ளது. வெள்ளி பூமியின் அருகில் இருக்கும் போது அதன் பிரகாசம் அதிகமாகவும், தோற்றப்பருமன் -4.9 ஆகவும், பிறை கட்டத்திலும் காணப்படுகிறது. சூரியன் பின்னோளி வீசும் போது இதன் பிரகாசம் -3 ஆக மங்குகிறது. இக்கோள் நடுப்பகலிலும் காணத்தக்க பிரகாசமாக இருப்பதுடன் சூரியும் கீழ் வானில் இருக்கும் போது எளிதில் காணக் கூடியதாகவும் இருக்கிறது. இதன் சுற்றுப்பாதை சூரியனுக்கும் புவியின் சுற்றுப்பாதைக்கும் நடுவில் இருப்பதால் புவியில் இருந்து பார்க்கும் போது சூரியனின் நிலநடுக்கோட்டில் இருந்து 47 டிகிரி சாய்வு வரை அதிகமாக செல்வது போல் தோற்றம் அளிக்கிறது.

மானிடக் குடியேற்றத்தின் சாத்தியம்[தொகு]

மானிடர் இதைப் போன்று பெரிய அளவில் மிதக்கும் நகரங்களை வெள்ளியின் விண்ணில் அமைக்க வாய்ப்புண்டு.

வெள்ளிக் கோள் பரப்பின் சூழல் தற்போது மானிடர் வாழும் சூழலை பெறவில்லை. ஆனால் வெள்ளிக் கோள் பரப்பில் இருந்து ஐம்பது கிலோமீட்டர்களுக்கு மேல் உள்ள வளி மண்டலம் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வாயுக்களான நைட்ரசனையும் ஆக்சிசனையும் பெற்றுள்ளது. அதனால் வெள்ளியின் வானில் மானிடர் மிதக்கும் நகரங்களை உருவாக்க வாய்புள்ளது. காற்றினும் எடை குறைந்த மிதக்கும் நகரங்களை (வலது பக்கத்தில் உள்ள மிதக்கும் விண்கலன் போல்) உருவாக்கி அதில் நிரந்தரக் குடியேற்றங்களை அமைக்க முடியும். ஆனால் இதில் மிகப்பெரிய அளவுக்கு பொறியியல் தொழில்நுட்பச் சவால்களும், இந்த உயரத்தில் உள்ள கந்தக அமிலத்தின் அடர்த்தியும் இதற்கு தடைகள் ஆகும்.

சூரியனைக் கடக்கும் போது[தொகு]

முதன்மைக் கட்டுரை - வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு

வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு அல்லது வெள்ளியின் இடைநகர்வு என்பது சூரியக் குடும்பத்தில் உள்ள வெள்ளி கோளானது சுற்றுப்பாதையில் வரும்போது சூரிய வட்டத்தைக் கடப்பதைக் குறிப்பதாகும். அதாவது, வெள்ளிக்கோள் சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் செல்வதைக் இது குறிக்கும். இந்த இடைநகர்வின் போது வெள்ளி சூரிய வட்டத்தில் ஒரு சிறு கரும் புள்ளியாகக் கண்ணுக்குத் தெரியும். இந்த இடைநகர்வு இடம்பெறும் காலம் பொதுவாக மணித்தியாலங்களில் கூறப்படுகிறது. இந்த இடைநகர்வு நிலவினால் ஏற்படும் சூரிய கிரகணத்தை ஒத்தது. வெள்ளி பூமியில் இருந்து அதிக தூரத்தில் இருப்பதனால் (நிலவுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரத்தை விடவும், வெள்ளிக்கும் பூமிக்குமிடையிலுள்ள தூரம் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகம்), வெள்ளியின் விட்டம் நிலவை விட 3 மடங்கு அதிகமானதாக இருந்தாலும்கூட, வெள்ளி இடைநகர்வின்போது, வெள்ளி மிகச் சிறியதாகத் தெரிவதுடன், மிக மெதுவாக நகர்வதையும் காணலாம்.

அவதானிப்பு[தொகு]

A photograph of the night sky taken from the seashore. A glimmer of sunlight is on the horizon. There are many stars visible. Venus is at the center, much brighter than any of the stars, and its light can be seen reflected in the ocean.
வெள்ளிக் கிரகமானது அனைத்து விண்மீன்களிலும் பிரகாசம் கூடியது
வெள்ளிக் கோள் / சுக்கிரன் வெள்ளிக் கோள் / சுக்கிரன் வெள்ளிக் கோள் / சுக்கிரன்
பூமியிலிருந்து சுக்கிரனின் சுற்றுப்பாதையைப் பார்த்தால், அது ஒரு ஐங்கோண வடிவமாக அமையும்.
மாலை வேளையில் சந்திரனும் சுக்கிரனும்.
சுக்கிரனின் சுற்றுப்பாதை ( சுக்கிரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சூரியனைச் சுற்றிவருகிறது )
சுக்கிரனின் அடையாளச்சின்னம்.
ஒப்பீட்டுக்காக சுக்கிரனும் பூமியும்
வானக்கோளான சுக்கிரன் கதிரவனைக்கடந்து செல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lakdawalla, Emily (21 செப்டம்பர் 2009). "Venus Looks More Boring Than You Think It Does". The Planetary Society. Archived from the original on 2012-01-06. பார்க்கப்பட்ட நாள் 4 திசம்பர் 2011. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Williams, David R. (15 ஏப்பிரல் 2005). "Venus Fact Sheet". NASA. Archived from the original on 4 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 12 அக்டோபர் 2007.
  3. Yeomans, Donald K. "HORIZONS Web-Interface for Venus (Major Body=2)". JPL Horizons On-Line Ephemeris System.—Select "Ephemeris Type: Orbital Elements", "Time Span: 2000-01-01 12:00 to 2000-01-02". ("Target Body: Venus" and "Center: Sun" should be defaulted to.) Results are instantaneous osculating values at the precise J2000 epoch.
  4. 4.0 4.1 Simon, J.L.; Bretagnon, P.; Chapront, J.; Chapront-Touzé, M.; Francou, G.; Laskar, J. (February 1994). "Numerical expressions for precession formulae and mean elements for the Moon and planets". Astronomy and Astrophysics 282 (2): 663–683. Bibcode: 1994A&A...282..663S. 
  5. "The MeanPlane (Invariable plane) of the Solar System passing through the barycenter". 3 April 2009. Archived from the original on 17 April 2012. பார்க்கப்பட்ட நாள் 10 April 2009. (produced with Solex 10 (பரணிடப்பட்டது 20 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்) written by Aldo Vitagliano; see also Invariable plane)
  6. 6.0 6.1 Seidelmann, P. Kenneth; Archinal, Brent A.; A'Hearn, Michael F. et al. (2007). "Report of the IAU/IAG Working Group on cartographic coordinates and rotational elements: 2006". Celestial Mechanics and Dynamical Astronomy 98 (3): 155–180. doi:10.1007/s10569-007-9072-y. Bibcode: 2007CeMDA..98..155S. http://www.dtic.mil/docs/citations/ADA471037. பார்த்த நாள்: 2020-09-16. 
  7. Konopliv, A. S.; Banerdt, W. B.; Sjogren, W. L. (May 1999). "Venus Gravity: 180th Degree and Order Model". Icarus 139 (1): 3–18. doi:10.1006/icar.1999.6086. Bibcode: 1999Icar..139....3K இம் மூலத்தில் இருந்து 26 May 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100526121353/http://trs-new.jpl.nasa.gov/dspace/bitstream/2014/20227/1/98-1117.pdf. 
  8. "Planets and Pluto: Physical Characteristics". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா). 5 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 26 ஆகத்து 2015.
  9. "Report on the IAU/IAG Working Group on cartographic coordinates and rotational elements of the planets and satellites". International Astronomical Union. 2000. Archived from the original on 12 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 12 April 2007.
  10. Mallama, Anthony; Krobusek, Bruce; Pavlov, Hristo (2017). "Comprehensive wide-band magnitudes and albedos for the planets, with applications to exo-planets and Planet Nine". Icarus 282: 19–33. doi:10.1016/j.icarus.2016.09.023. Bibcode: 2017Icar..282...19M. 
  11. Haus, R. (July 2016). "Radiative energy balance of Venus based on improved models of the middle and lower atmosphere". Icarus 272: 178–205. doi:10.1016/j.icarus.2016.02.048. Bibcode: 2016Icar..272..178H. https://elib.dlr.de/109285/1/Haus%20et%20al%202017_ICARUS.pdf. 
  12. Mallama, A. (2011). "Planetary magnitudes". Sky & Telescope 121 (1): 51–56. 
  13. Espenak, Fred (1996). "Venus: Twelve year planetary ephemeris, 1995–2006". NASA Reference Publication 1349. NASA/Goddard Space Flight Center. Archived from the original on 17 August 2000. பார்க்கப்பட்ட நாள் 20 June 2006.
  14. Lawrence, Pete (2005). "In Search of the Venusian Shadow". Digitalsky.org.uk. Archived from the original on 11 June 2012. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  15. Walker, John. "Viewing Venus in Broad Daylight". Fourmilab Switzerland. பார்க்கப்பட்ட நாள் 19 April 2017.
  16. "Venus: Facts & Figures". NASA. Archived from the original on 29 September 2006. பார்க்கப்பட்ட நாள் 12 April 2007.
  17. Lawrence, Pete (2005). "The Shadow of Venus". Archived from the original on 2012-06-11. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  18. Hashimoto, G. L.; Roos-Serote, M.; Sugita, S.; Gilmore, M. S.; Kamp, L. W.; Carlson, R. W.; Baines, K. H. (2008). "Felsic highland crust on Venus suggested by Galileo Near-Infrared Mapping Spectrometer data". Journal of Geophysical Research, Planets 113: E00B24. doi:10.1029/2008JE003134. Bibcode: 2008JGRE..11300B24H. 
  19. David Shiga Did Venus's ancient oceans incubate life?, New Scientist, 10 ஒக்டோபர் 2007
  20. B.M. Jakosky, "Atmospheres of the Terrestrial Planets", in Beatty, Petersen and Chaikin (eds,), The New Solar System, 4th edition 1999, Sky Publishing Company (Boston) and Cambridge University Press (Cambridge), pp. 175–200
  21. "Caught in the wind from the Sun". ESA (Venus Express). 28 நவம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-07-12.
  22. "Hints of life on Venus". The Royal Astronomical Society (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-15.
  23. Drake, Nadia (14 September 2020). "Possible sign of life on Venus stirs up heated debate". National Geographic. https://www.nationalgeographic.com/science/2020/09/possible-sign-of-life-found-on-venus-phosphine-gas/. பார்த்த நாள்: 14 September 2020. 
  24. Greaves, J.S.Expression error: Unrecognized word "etal". (2020). "Phosphine gas in the cloud decks of Venus". Nature Astronomy. doi:10.1038/s41550-020-1174-4. https://www.nature.com/articles/s41550-020-1174-4. பார்த்த நாள்: 14 September 2020. 
  25. Dolginov, Nature of the Magnetic Field in the Neighborhood of Venus, COsmic Research, 1969
  26. Kivelson G. M., Russell, C. T. (1995). Introduction to Space Physics. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-521-45714-9. https://archive.org/details/introductiontosp0000unse_w5p3. 
  27. Upadhyay, H. O.; Singh, R. N. (ஏப்ரல் 1995). "Cosmic ray Ionization of Lower Venus Atmosphere". Advances in Space Research 15 (4): 99–108. doi:10.1016/0273-1177(94)00070-H. Bibcode: 1995AdSpR..15...99U. 
  28. Luhmann J. G., Russell C. T. (1997). J. H. Shirley and R. W. Fainbridge. ed. Venus: Magnetic Field and Magnetosphere. Chapman and Hall, New York. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4020-4520-2 இம் மூலத்தில் இருந்து 2010-07-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100714051425/http://www-spc.igpp.ucla.edu/personnel/russell/papers/venus_mag/. பார்த்த நாள்: 2009-06-28. 
  29. Stevenson, D. J. (15 மார்ச்சு 2003). "Planetary magnetic fields". Earth and Planetary Science Letters 208 (1–2): 1–11. doi:10.1016/S0012-821X(02)01126-3. Bibcode: 2003E&PSL.208....1S. 
  30. 30.0 30.1 30.2 Nimmo, Francis (நவம்பர் 2002). "Why does Venus lack a magnetic field?" (PDF). Geology 30 (11): 987–990. doi:10.1130/0091-7613(2002)030<0987:WDVLAM>2.0.CO;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-7613. Bibcode: 2002Geo....30..987N. http://www2.ess.ucla.edu/~nimmo/website/paper25.pdf. பார்த்த நாள்: 2009-06-28. 
  31. Konopliv, A. S.; Yoder, C. F. (1996). "Venusian k2 tidal Love number from Magellan and PVO tracking data". Geophysical Research Letters 23 (14): 1857–1860. doi:10.1029/96GL01589. Bibcode: 1996GeoRL..23.1857K. http://www.agu.org/pubs/crossref/1996/96GL01589.shtml. பார்த்த நாள்: 2009-07-12. 
  32. Svedhem, Håkan; Titov, Dmitry V.; Taylor, Fredric W.; Witasse, Olivier (நவம்பர் 2007). "Venus as a more Earth-like planet". Nature 450 (7170): 629–632. doi:10.1038/nature06432. பப்மெட்:18046393. Bibcode: 2007Natur.450..629S. 

[1]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
வெள்ளி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


  1. trunglevan, trunglevan (2020-06-06). "Xem vận mệnh cuộc đời". வீனஸ் அளவு 6,051.8 கி.மீ.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_(கோள்)&oldid=3723213" இலிருந்து மீள்விக்கப்பட்டது