செவ்வாய் (கோள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவ்வாய்  ♂
The planet Mars
காலகட்டம்J2000
சூரிய சேய்மை நிலை1.6660 AU
249.2 Gm
சூரிய அண்மை நிலை 1.3814 AU
206.7 Gm
அரைப்பேரச்சு 1.523679 AU
227.9392 Gm
மையத்தொலைத்தகவு 0.0934
சுற்றுப்பாதை வேகம் 1.8808 Julian years
686.971 d
668.5991 sols
சூரியவழிச் சுற்றுக்காலம் 779.96 days
2.135 Julian years
சராசரி சுற்றுப்பாதை வேகம் 24.077 km/s
சராசரி பிறழ்வு 19.373°
சாய்வு 1.850° to ecliptic
5.65° to ஞாயிறு (விண்மீன்)'s நிலநடுக் கோடு
1.67° to invariable plane[2]
Longitude of ascending node 49.558°
Argument of perihelion 286.502°
துணைக்கோள்கள் 2
சிறப்பியல்பு
சராசரி ஆரம் 3,389.5±0.2 km[a][3]
நிலநடுக்கோட்டு ஆரம் 3,396.2±0.1 km[a][3]
0.533 Earths
துருவ ஆரம் 3,376.2±0.1 km[a][3]
0.531 Earths
தட்டையாதல் 0.00589±0.00015
புறப் பரப்பு 144,798,500 km2
0.284 Earths
கனஅளவு 1.6318×1011 km3[4]
0.151 Earths
நிறை 6.4171×1023 kg[5]
0.107 Earths
அடர்த்தி 3.9335±0.0004 g/cm³[4]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்3.711 m/s²[4]
0.376 g
விடுபடு திசைவேகம்5.027 km/s
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் 1.025957 d
24h 37m 22s[4]
நிலநடுக்கோட்டுச் சுழற்சித் திசைவேகம் 868.22 km/h (241.17 m/s)
அச்சுவழிச் சாய்வு 25.19° to its orbital plane[6]
வடதுருவ வலப்பக்க ஏற்றம் 21h 10m 44s
317.68143°
வடதுருவ இறக்கம் 52.88650°
எதிரொளி திறன்0.170 (geometric)[7]
0.25 (Bond)[6]
மேற்பரப்பு வெப்பநிலை
   கெல்வின்
   Celsius
சிறுமசராசரிபெரும
130 K210 K[6]308 K
−143 °C[9]−63 °C35 °C[10]
தோற்ற ஒளிர்மை +1.6 to −3.0[8]
கோணவிட்டம் 3.5–25.1″[6]
பெயரெச்சங்கள் Martian
வளிமண்டலம்[6][11]
பரப்பு அழுத்தம் 0.636 (0.4–0.87) kPa
வளிமண்டல இயைபு

செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது.இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது.[12] இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு புவிசார் கோளான இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் கிண்ணக் குழிகளையும், புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன.

1965 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அண்மையாக மரினர் 4 வெற்றிகரமாகப் பறந்து செல்லும்வரை, செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நீர்ம நீர் இருக்கும் என நம்பினர். கோளின் துருவப் பகுதிகளுக்கு அருகில் குறித்த கால அடிப்படையில் மாற்றம் அடைகின்ற கறுப்பு, வெள்ளை அடையாளங்களே இவ்வாறான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன. இவை கடல்களும், கண்டங்களுமாக இருக்கலாம் என எண்ணினர். மேற்பரப்பில் காணப்பட்ட நீண்ட கருமையான கீறல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. பின்னர் இதை ஒரு ஒளியியல் மாயத்தோற்றம் என விளக்கினர். ஆனாலும், ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.[13]

இது, போபோசு, டெய்மோசு என்னும் இரண்டு நிலவுகளைக் கொண்டுள்ளது. இவை சிறிய, ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை. செவ்வாயின் டிரோசான் சிறுகோளான 5261 யுரேக்காவைப்போல் இவை செவ்வாயின் ஈர்ப்பினால் கவரப்பட்ட சிறுகோள்களாக இருக்கலாம்.

PIA16453-MarsCuriosityRover-RocknestPanorama-20121126.jpg

இயற்பியல் பண்புகள்[தொகு]

பூமி செவ்வாய் ஒப்பிடுகையில்.
Mars – animation (00:40) showing major features.

செவ்வாயின் விட்டம் புவியின் விட்டத்தின் அரைப்பங்கு அளவு கொண்டது. இதன் அடர்த்தி புவியினதைக் காட்டிலும் குறைவானது. செவ்வாய் புவியின் கனவளவின் 15%க்குச் சமமான கனவளவையும், புவியின் திணிவின் 11%க்குச் சமமான திணிவையும் கொண்டது. இதன் மேற்பரப்பின் பரப்பளவு, புவியின் உலர் நிலப்பகுதியின் பரப்பளவைக் காட்டிலும் சற்றே குறைவானது.[6] செவ்வாய் புதன் கோளிலும் பெரியதும் திணிவு கூடியதும் ஆகும். ஆனால், புதன், செவ்வாயிலும் கூடிய அடர்த்தி கொண்டது.

நிலவியல்[தொகு]

சூரியனிலிருந்து 230 மில்லியன் கிலோ மீற்றர்கள் தொலைவில் (143,000,000 mi) செவ்வாய் கிரகம் உள்ளது. இது சூரியனை ஒரு தடவை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இப்படத்தில் நீல நிறம் பூமியையும், சிகப்பு நிறம் செவ்வாயையும் குறிக்கிறது.

செவ்வாய், சிலிக்கன், ஆக்சிசன், உலோகங்கள், இன்னும் பிற பாறைகளை உருவாக்கும் தனிமங்களைக் கொண்ட கனிமங்களாலான ஒரு புவிசார் கோள். செவ்வாயின் மேற்பரப்பு பெரும்பாலும் தோலெயிட்டிக் பசாற்றுக் கற்களால் ஆனது.[14] எனினும் சில பகுதிகள் பொதுவான பசாற்றுக் கற்களிலும் கூடிய சிலிக்காச் செறிவு கொண்டது. இது புவியின் எரிமலைப் படிகப் பாறையைப் போலவோ, சிலிக்காக் கண்ணாடியைப் போலவோ இருக்கக்கூடும். குறைவான ஒளிதெறிதிறன் கொண்ட பகுதிகளில் சரிவுவகை களிக்கற் செறிவுகளும், குறிந்த ஒளிதெறிதிறன் கொண்ட வடபகுதியில் வழமையான செறிவில் தகட்டுச் சிலிக்கேற்றுகளும், உயர்-சிலிக்கன் கண்ணாடியும் காணப்படுகின்றன. தென்பகுதி மேட்டு நிலங்களின் சில பகுதிகளில் கண்டறியக்கூடிய அளவில் உயர்-சிலிக்கன் பைரொட்சீன்கள் காணப்படுகின்றன. ஆங்காங்கே ஏமட்டைட்டு, ஆலிவைன்கள் என்பனவும் உள்ளன.[15]

மண்[தொகு]

Sol454 Marte spirit.jpg
734781main pia16804-full full.jpg

பீனிக்சு இறங்குகலம் அனுப்பிய தகவல்கள், செவ்வாயின் மண் காரத்தன்மை கொண்டது எனவும், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற தனிமங்களைக் கொண்டது எனவும் காட்டுகின்றன. புவியிலுள்ள தோட்டங்களில் காணப்படும் இவை தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இறங்குகலச் சோதனைகளின் படி மண் பி.எச் 8.3 கொண்டதுடன், பேர்குளோரேட்டு உப்புக்களையும் கொண்டது எனத் தெரிகிறது.

செவ்வாயில் கீறல்கள் பொதுவாகக் காணப்படுவதுடன், கிண்ணக்குழிகள், பள்ளத்தாக்குகள் என்பவற்றின் சரிவுகளில் புதிய கீறல்களும் தோன்றுகின்றன. முதலில் கடுமையான நிறத்துடன் காணப்படும் இக்கீறல்கள் காலம் செல்லச் செல்ல மங்கலான நிறத்தை அடைகின்றன. சில வேளைகளில் சிறியனவாகத் தோன்றும் இக்கீறல்கள் பின்னர் பல நூறு மீட்டர்களுக்கு விரிவடைகின்றன. இக்கீறல்கள் தமது பாதையில் காணும் பாறைகள், பிற தடைகள் போன்றவற்றின் விளிம்போடு செல்வதையும் காண முடிகிறது.

நீரியல்[தொகு]

தாழ்வான பகுதிகளில் குறைந்த நேரத்துக்கு நீர் திரவ நிலையில் இருக்கக்கூடுமாயினும், குறைந்த வளியமுக்கம் காரணமாகச் செவ்வாயின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பது சாத்தியம் இல்லை. இரண்டு துருவங்களிலும் காணப்படும் பனி மூடிகள் பெரும்பாலும் நீரினால் ஆனதாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. தென் துருவப் பனி மூடியில் உள்ள பனிக்கட்டி உருகினால் உருவாகக்கூடிய நீர் செவ்வாயின் முழு மேற்பரப்பையும் 11 மீட்டர்களுக்கு மூடுவதற்குப் போதுமானதாக இருக்கும்.

செவ்வாயில் தெரியும் நிலத்தோற்றங்கள், ஒரு காலத்தில் அதன் மேற்பரப்பில் நீர்ம நீர் இருந்திருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. வெளிப்போக்குக் கால்வாய்கள் என அறியப்பட்ட பாரிய நீள்வடிவ நீரரிப்பு நிலங்கள், சுமார் 25 இடங்களில் செவ்வாய் மேற்பரப்புக்குக் குறுக்கே வெட்டிச் செல்கின்றன. நிலத்தடி நீத்தேக்கங்களில் இருந்து வெளியேறிய, பேரழிவை ஏற்படுத்திய நீர் வழிந்தோடியபோது ஏற்பட்ட மண்ணரிப்புத் தடங்களே இவை என நம்பப்படுகின்றது. எனினும் சிலர் இவை பனியாறுகள் அல்லது எரிமலைக் குழம்புகளினால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்புகின்றனர். இவற்றுள் மிகப் பிந்திய கால்வாய்கள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றின. பிற பகுதிகளில் காணப்படும் இத்தகைய காய்வாய் வலையமைப்புக்களில் வடிவத்தில் இருந்து, செவ்வாயின் தொடக்க காலத்தில் பெய்த மழையினால் அல்லது பனிக்கட்டி மழையினால் ஏற்பட்ட வழிந்தோடிய அடையாளங்களாக இவை இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

செவ்வாயின் தட்பவெப்பம்[தொகு]

செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் -126 டிகிரி வரை உள்ளது. (பூமியில் +58 முதல் -88.3 வரை). ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்பநிலை -48 டிகிரி சென்டிகிரேடு. இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது, பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. டெலஸ்கோப்பில் பார்த்தால் மிகச் சிவப்பாகத் தெரியும். அதனால் தான் செவ்வாய் என்றும் ஆங்கிலத்தில் the red planet என்றும் அழைக்கப்படுகிறது. பூமியைப் போன்றே துருவங்கள் பனிப்பிரதேசங்களாக இருக்கின்றன. இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும் 'ட்ரை ஐஸ்' எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடாகும். மேலும் செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் மிகப்பெரிய பனிப்பள்ளம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் (டிசம்பர்-2018) இந்த பனிப்பள்ளத்தில் 5,905 அடி தடிமன் உள்ள பிரம்மாண்ட ஐஸ்பாறைகளைச் சுற்றி தண்ணீரும் உள்ளது16[தொடர்பிழந்த இணைப்பு].

பனிப்பாறை[தொகு]

ஐரோப்பாவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியின்போது இந்த பனிப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வடதுருவத்தில் தனது ஆய்வினை மேற்கொள்ளும் போது இந்த பனிப்பாறையானது இதன் கேமராவில் சிக்கியிருக்கிறது.16[தொடர்பிழந்த இணைப்பு].

வட துருவத்தில் சுமார் 50.1 மைல் நீளமும் 1.2 மைல் அகலமும் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கு ஒன்று அமைந்திருக்கிறது. இதற்கு கொரோலோவ் (Korolev crater) பள்ளத்தாக்கு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற விண்வெளித்துறை பொறியாளரான Sergei Korolev வின் நினைவாக இந்தப்பெயர் சூட்டப்பட்டது. ஸ்புட்னிக், வோஸ்டாக் போன்ற விண்வெளி ஆராய்ச்சித்துறையில் மைல்கல் பதித்த திட்டங்களில் தலைமை ராக்கெட் ஏவுதளப் பொறியாளராகப் பணியாற்றியவர் கொரோலோவ்.

பீகிள்2 - பிரிட்டனின் செவ்வாய் பயணம்[தொகு]

ஏற்கனவே 1997ம் ஆண்டு அமெரிக்காவின் பாத்ஃபைண்டர் வாகனம் செவ்வாயில் இறக்கிவிடப்பட்டுள்ளது. பிரிட்டனின் பீகிள்2 வாகனம், செவ்வாயில் பழமையான குன்றுகளுக்கும், வடக்கு சமவெளிக்கும் இடைப்பட்ட 'இசிடிஸ் ப்ளானிட்டியா' என்ற சமதளப் பிரதேசத்தில் இறக்கிவிட ஐரோப்பிய வான்வெளி ஏஜன்சி (ESA) டிசம்பர் 2000ல் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பீகிள்2வை ESAவின் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்கிற ராக்கெட் ஜூன் 2003ல் கஜகஸ்தானில் உள்ள (ரஷ்ய) பைக்கானூர் காஸ்மோடிரோம் தளத்தில் இருந்து ஏவப்படும்.

பீகிள்2-வின் குறிக்கோள் செவ்வாயில் உயிர்கள் இருக்கின்றதா அல்லது எப்போதாவது இருந்ததா? என்ற கேள்விக்கு முடிவான விடை காண்பதே. அதற்கு 'இசிடிஸ் ப்ளாண்டியா' தான் மிகச் சிறந்த இடம், முன்பு எப்போதாவது செவ்வாயில் உயிர்கள் இருந்தால் அதன் பாஸில்கள் கிடைக்க இங்கு அருமையான வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

பீகிள்2 செவ்வாயில் பாதுகாப்பாக தரையிறங்க 'ஏர் பேக்குகள்' உபயோகிக்கப்படும். செவ்வாயில் தரையில் படும் போது இந்த ஏர் பேக்குகள் பந்து போல் எம்பி விழுந்து நிலைத்து நின்ற பின் அதனுள் இருக்கும் வாயு வெளியேற்றப்பட்டு வாகனம் சேதமின்றி வெளிவரும்.

ரோவர் - அமெரிக்காவின் மற்றொரு செவ்வாய் ஆய்வுத் திட்டம்[தொகு]

பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து ஹப்பிள் மூலம் செவ்வாயைப் பார்த்தல்.

பீகிள்2 திட்டம் ஒரு புறமிருக்க, அமெரிக்கா இரண்டு ரோபோட்களை 2004ம் ஆண்டு செவ்வாயில் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு 'ரோவர்'களுமே முக்காலத்தில் அங்கு நீர், அதாவது திரவ வடிவில் நீர் ஆதாரங்களைத் தேடும் உபகரணங்களைப் பெற்றிருக்கும்.

திரவ வடிவில் நீரென்றால் அது நிச்சயம் 0 – 100 டிகிரிக்குள் தான் இருக்க முடியும். மேலும் நீரில் ஆக்ஸிஜனும் இருக்குமென்பதால் அதில் உயிர்கள் (ஒரு செல் உயிர்கள், பாக்டீரியாக்கள் முதல் பல வித உயிரினங்கள்) உண்டாகி வாழந்திருக்ககூடிய சாத்தியங்கள் அதிகமாக உண்டு. பூமியில் உயிரினம் முதன்முதலில் தோன்றியதே நீரில் தான் என்று நம்பப்படுகிறது.

செவ்வாயில் தரையிறங்க வாய்ப்பான 185 இடங்கள் பட்டியலில் தொடங்கி தற்போது 30 மிக முக்கியமான இடங்கள் பட்டியலாகக் குறுக்கப்பட்டுள்ளது. இதில் சேதமின்றித் தரையிறங்க வாய்ப்பான இடம் என்பதை விட விஞ்ஞான ரீதியாக சான்றுகள் கிடைக்க வாய்ப்பான இடம் என்பதற்குத்தான் முக்கியத்துவம் அளிப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஏவுவதற்கு ஒரு வருடம் முன்பாக இறங்கும் இடம் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்.

தற்போது செவ்வாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் 'மார்ஸ் க்ளோபல் சர்வேயர்' எனும் விண்கலம் அனுப்பும் தகவல்கள் இதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகள் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ரோவர் பயணத் திட்டங்கள்[தொகு]

செவ்வாயின் குசேவ் கிரேட்டர் எனுமிடத்திலிருந்து எடுக்கப்பட்ட சூரிய மறைவுத் தோற்றம். மே 19, 2005.

அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் கேப் காணவெரல் தளத்திலிருந்து முதல் ரோவர் ரோபோட் மே 30, 2003 லும், இரண்டாவது அதே வருடம் ஜூன் 27லிலும் ஏவப்படும். செவ்வாயில் முறையே 2004ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியிலும், பெப்ரவரி 8ம் தேதியிலும் தரையிறங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரோவர்கள் தற்போது MER-A மற்றும் MER-B என்றும் அழைக்கப்படுகிறது. (MER – Mars Exploration Rover).

இரண்டு ரோவர்களும் ஒரு செவ்வாய் தினத்திற்கு (24.62 மணிகள்) 100 மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். ஆரோக்கியம் நல்லபடியாக இருந்தால் இவை 2004 ஏப்ரல் மாதத்தைத் தாண்டிக் கூட வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

பிழை காட்டு: <ref> tag with name "serpentinization" defined in <references> is not used in prior text.

உசாத்துணை[தொகு]

 1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; VSOP87 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; meanplane என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. 3.0 3.1 3.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Seidelmann2007 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 4. 4.0 4.1 4.2 4.3 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; lodders1998 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; konopliv2011 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 Williams, David R. (செப்டம்பர் 1, 2004). "Mars Fact Sheet". National Space Science Data Center. NASA. 2006-06-24 அன்று பார்க்கப்பட்டது.
 7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; MallamaMars என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; MallamaSky என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 9. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; cold என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 10. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; hot என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 11. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; barlow08 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 12. "The Lure of Hematite". Science@NASA. NASA. மார்ச்சு 28, 2001. 2012-09-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-12-24 அன்று பார்க்கப்பட்டது.
 13. "NASA Images Suggest Water Still Flows in Brief Spurts on Mars". NASA/JPL. திசம்பர் 6, 2006. 2007-01-04 அன்று பார்க்கப்பட்டது.
 14. McSween, Harry Y.; Taylor, G. Jeffrey; Wyatt, Michael B. (2009), "Elemental Composition of the Martian Crust", Science, 324 (5928): 736, Bibcode:2009Sci...324..736M, doi:10.1126/science.1165871 Unknown parameter |month= ignored (|date= suggested) (உதவி)
 15. Bandfield, Joshua L. (2002), "Global mineral distributions on Mars", Journal of Geophysical Research (Planets), 107 (E6): 9–1, Bibcode:2002JGRE..107.5042B, doi:10.1029/2001JE001510 Unknown parameter |month= ignored (|date= suggested) (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வாய்_(கோள்)&oldid=3601163" இருந்து மீள்விக்கப்பட்டது