கன்னி விண்மீன் மீகொத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்படத்தில் மேல் இடபக்கத்தில் காணப்படுவதே கன்னி விண்மீன் மீகொத்து

கன்னி விண்மீன் மீகொத்து (Virgo Supercluster) என்பது நம் பால் வழி உள்ள உட் குழு போல் பல விண்மீன் பேரடை குழுக்களை கொண்டது. குறைந்தது 100க்கும் மேற்பட்ட விண்மீன் பேரடை குழுக்களை கொண்ட இந்த கன்னி விண்மீன் மீகொத்து, 3 கோடியே 30 லட்சம் புடைநொடி தூரம் (11 கோடி ஒளியாண்டு) விட்டம் கொண்டது. இவ்வாறு மானிடரால் காட்சிக்குட்பட்ட பேரண்டம், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்மீன் மீகொத்துகளை கொண்டது.

இந்த விண்மீன் மீகொத்து (Supercluster) என்ற கலைச்சொல்லை முதலில் ஜெரார்டு டி வாகூலியர்சு என்பவர் என்பவர் 1953ஆம் ஆண்டு உருவாக்கினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. cfa.harvard.edu, The Geometry of the Local Supercluster, John P. Huchra, 2007 (accessed 12-12-2008)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னி_விண்மீன்_மீகொத்து&oldid=2751113" இலிருந்து மீள்விக்கப்பட்டது