பேரண்டத்தில் புவியின் அமைவிடம்
பேரண்டத்தில் புவியின் அமைவிடம் (Earth's location in the universe) குறித்து 400 ஆண்டுகளாகவே ஆராயப்பட்டு வருகின்றது. குறிப்பாக 20ஆம் நூற்றாண்டில் இவ்வாராய்ச்சி எழுச்சி பெற்றதென கொள்ளலாம். முதலில் மானிடர்கள் புவியை மையமாக வைத்தே அண்டம் அமைந்திருந்ததெனக் கருதினர். 17ஆம் நூற்றாண்டில் சூரியனே மையமென்ற கொள்கை வலுப்பெற்ற பிறகு புவி இவ்வண்டத்தில் மிகக்குறுகிய இடத்தையே ஆக்கிரமித்திருப்பது அறியப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் நெபுலாக்கள் நன்கு ஆராயப்பட்ட பிறகு இவ்விரிவடையும் அண்டத்தில் புவி அமைந்துள்ள பால் வழி போல் 100 கோடிக்கும் மேற்பட்ட விண்மீன் பேரடைகள் உள்ளது அறியப்பட்டது. மானிடரால் காட்சிக்குட்படுகிற பேரண்டத்தின் அளவு விரிவடைய விரிவடைய விண்மீன் கொத்துகள், மீகொத்து தொகுப்புகள் என இவ்வண்டத்திலுள்ள தொகுப்புகள் வகைப்படுத்தப்பட்டன. அதன்படி ஒரு கோளையோ அல்லது விண்மீனின் அமைவிடத்தையோ கூற வானியலார் விண்மீன் பேரடைகள், விண்மீன் கொத்துகள், மீகொத்து தொகுப்புகள் போன்ற வரையறைகளை உருவாக்கினர்.
அண்டத்தில் புவியின் அமைவிடம்
[தொகு]குறிப்பு:ஒவ்வொரு கட்டமாக கீழ் செல்லும் போது "அதற்குள்" அல்லது "அதன் பகுதி" என படிக்க வேண்டும்.
- எடுத்துக்காட்டு
- புவி சூரிய மண்டலத்துள் உள்ளது.
- சூரிய மண்டலம் உள் மீனிடை மேகத்தினுள் உள்ளது.
அங்கத்தின் வகை | பெயர் | அளவு | மூலங்கள் |
---|---|---|---|
கிரகம் | புவி | 12,700 கி.மீ. விட்டம் கொண்டது. | |
விண்மீன் மண்டலம் | சூரிய மண்டலம் | 4 ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது. | |
மீனிடை மேகம் | உள் மீனிடை மேகம் | 30 ஒளியாண்டுகள் தூரம் விரிந்த மீனிடை மேகமாகும். | |
குமிழி | உட் குமிழி | 300 ஒளியாண்டு அளவு உள்ள ஒரு அண்ட துவாரமாகும். | |
பட்டை | குல்ட்சு பட்டை | 3,000 ஒளியாண்டுகள் அளவுள்ள, பேரடை தளத்திலிருந்து 18 பாகைகள் சாய்ந்திருக்கும் அரைகுறையான ஒரு வளையமாகும். | |
பால்வழியில் உள்ள பகுதி (கை) | ஓரியன் கை | இதன் நீளம் பால் வழி மையத்திலிருந்து 8,000 புடைநொடி தூரம் கொண்டது. | |
பேரடை | பால் வழி | 1,00,000 ஒளியாண்டுகள் விட்டமும் 1,000 ஒளியாண்டுகள் தடிப்பும் கொண்டது. | |
பேரடை துணைக்குழு | பால் வழி துணைக்குழு | 16.4 லட்சம் ஒளியாண்டுகள் (5 புடைநொடிகள்) விட்டம் கொண்டது. | |
பேரடை குழு | உட் குழு | இதன் விட்டம் 1 கோடி ஒளியாண்டுகள் ஆகும். | |
விண்மீன் மீகொத்து | கன்னி விண்மீன் மீகொத்து | 3 கோடியே 30 லட்சம் புடைநொடி தூரம் (11 கோடி ஒளியாண்டு) விட்டம் கொண்டது. | |
மீகொத்து தொகுப்பு | திமிங்கல-மீனம் மீகொத்து தொகுப்பு | இந்த திமிங்கல - மீனம் மீகொத்து தொகுப்பு 100 கோடி ஒளியாண்டு நீளமும் 15 கோடி ஒளியாண்டு அகலமும் கொண்டது. | |
அண்டத்தின் வகை | காட்சிக்குட்பட்ட பேரண்டம் பொருட்களால்(particles) ஆனது |
28,000 புடைநொடி தூரத்திற்கும் மேல் விட்டம் கொண்டது. |
மூலங்கள்
[தொகு]- ↑ Various (2000). David R. Lide (ed.). Handbook of Chemistry and Physics (81st ed.). CRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0849304814.
- ↑ Littmann, Mark (2004). Planets Beyond: Discovering the Outer Solar System. Courier Dover Publications. pp. 162–163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486436029.
- ↑ Mark Anderson, "Don't stop till you get to the Fluff", New Scientist no. 2585, 6 January 2007, pp. 26-30
- ↑ DM Seifr et al (1999). "Mapping the Countours of the Local Bubble". Astronomy and Astrophysics 346: 785–797. Bibcode: 1999A&A...346..785S.
- ↑ Local Chimney and Superbubbles, Solstation.com
- ↑ S. B. Popov, M. Colpi, M. E. Prokhorov, A. Treves and R. Turolla (2003). "Young isolated neutron stars from the Gould Belt". Astronomy and Astrophysics 406 (1): 111–117. doi:10.1051/0004-6361:20030680. Bibcode: 2003A&A...406..111P. http://www.aanda.org/index.php?option=article&access=standard&Itemid=129&url=/articles/aa/abs/2003/28/aah4133/aah4133.html. பார்த்த நாள்: 2009-10-02.
- ↑ Harold Spencer Jones, T. H. Huxley, Proceedings of the Royal Institution of Great Britain, Royal Institution of Great Britain, v. 38-39
- ↑ Christian, Eric; Samar, Safi-Harb. "How large is the Milky Way?". பார்க்கப்பட்ட நாள் 2007-11-28.
- ↑ Frommert, H.; Kronberg, C. (August 25, 2005). "The Milky Way Galaxy". SEDS. Archived from the original on 2011-09-03. பார்க்கப்பட்ட நாள் 2007-05-09.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ I. D. Karachentsev, V. E. Karachentseva, W. K. Hutchmeier, D. I. Makarov (2004). "A Catalog of Neighboring Galaxies". Astronomical Journal 127 (4): 2031–2068. doi:10.1086/382905. Bibcode: 2004AJ....127.2031K. https://archive.org/details/sim_astronomical-journal_2004-04_127_4/page/2031.
- ↑ Andreas Brunthaler, Mark J. Reid, et. al. (4 March 2005). "The Geometric Distance and Proper Motion of the Triangulum Galaxy (M33)". Science 307 (5714): 1440–1443. doi:10.1126/science.1108342. பப்மெட்:15746420. Bibcode: 2005Sci...307.1440B. https://archive.org/details/sim_science_2005-03-04_307_5714/page/1440.
- ↑ "The Local Group of Galaxies". University of Arizona. Students for the Exploration and Development of Space. Archived from the original on 1996-12-25. பார்க்கப்பட்ட நாள் 2009-10-02.
- ↑ cfa.harvard.edu, The Geometry of the Local Supercluster, John P. Huchra, 2007 (accessed 12-12-2008)
- ↑ "Stars, Galaxies and Cosmology" (PDF). Department of Mathematics, University of Auckland. Archived from the original (PDF) on 2013-10-22. பார்க்கப்பட்ட நாள் 2009-10-03.
- ↑ John noble Wilford (1987-11-10). "Massive Clusters of Galaxies Defy Concepts of the Universe". New York Times. http://www.nytimes.com/1987/11/10/science/massive-clusters-of-galaxies-defy-concepts-of-the-universe.html?pagewanted=all. பார்த்த நாள்: 2009-11-01.
- ↑ Mackie, Glen (2002-02-01). "To see the Universe in a Grain of Taranaki Sand". Swinburne University. பார்க்கப்பட்ட நாள் 2006-12-20.
- ↑ Lineweaver, Charles (2005). "Misconceptions about the Big Bang". Scientific American. பார்க்கப்பட்ட நாள் 2008-11-06.
{{cite web}}
: Unknown parameter|coauthors=
ignored (help)