17-ஆம் நூற்றாண்டு
(17ம் நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1600கள் 1610கள் 1620கள் 1630கள் 1640கள் 1650கள் 1660கள் 1670கள் 1680கள் 1690கள் |
17ம் நூற்றாண்டு என்பது கிரிகோரியன் நாட்காட்டிப்படி 1601 இல் ஆரம்பித்து 1700 இல் முடிவடைந்த நூற்றாண்டு காலத்தைக் குறிக்கும்.
17ம் நூற்றாண்டில் பொதுவாக அறிவியல் வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள் பல இடம்பெற்ற காலப்பகுதியாகும். குறிப்பாக கலிலியோ கலிலி, ரெனே டேக்கார்ட், பாஸ்கல், ஐசாக் நியூட்டன் போன்றவர்களின் அரிய கண்டுபிடிப்புகள் இடம்பெற்றன. ஐரோப்பாவில் இந்நூற்றாண்டு முழுவதும் நாடுகளுக்கிடையே போர்கள் பல இடம்பெற்றன. அத்துடன் அமெரிக்காவில் ஐரோப்பிய குடியேற்றம் பரவலாக இடம்பெற்றது.[1][2][3]
முக்கிய நிகழ்வுகள்[தொகு]
- 1600- பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.
- 1602 - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.
- 1602 - டச்சுக்காரர் இலங்கைக்கு வந்தனர்.
- 1612 - மொஸ்கோ நகரம் போலந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
- 1615 - முகாலயப் பேரரசு பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு முழு உரிமையையும் அளித்தது.
- 1615 - யாழ்ப்பாண அரசன் பரராசசேகர பண்டாரன் இறந்தார்.
- 1616 - வில்லியம் ஷேக்ஸ்பியர் மரணமானார்.
- 1617 - யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயக் கொடி பறக்க விடப்பட்டது. டெ ஒலிவியேரா முதலாவது ஆளுநரானான். இவன் 1627இல் மரணமானான்.
- 1621 - வல்வெட்டித்துறையில் போர்த்துக்கேயருக்கும் தமிழர்களுக்கும் இடையில் போர் இடம்பெற்றது.
- 1624 - யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயரினால் கோட்டை கட்டும் பணி தொடங்கின. 1632 இல் வேலைகள் முடிவடைந்தன.
- 1632 - தாஜ் மகால் கட்டட வேலைகள் தொடங்கின.
- 1638 - வண. ரொபேர்ட் டீ நொபிலி யாழ்ப்பாணம் வந்தார்.
- 1648-53: பிரான்சில் உள்நாட்டுப் போர்.
- 1652 - தென்னாபிரிக்காவில் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியரினால் கேப் டவுண் நகரம் உருவாக்கப்பட்டது.
- 1652 - ஆங்கில-டச்சு போர் ஆரம்பமாயிற்று.
- 1655 - யாழ்ப்பாணப் போர்த்துக்கேய ஆளுநர் அந்தோனியோ அட்மிரல் டெ மெனெசெஸ் டச்சுக்காரரினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.
- 1658 - மன்னார் டச்சுக்காரரினால் ஆக்கிரமிக்கப்பட்டது.
- 1658 - யாழ்ப்பாணம் டச்சுக்காரரிடம் வீழ்ந்தது.
- 1662 - டச்சுக் காரரிடம் இருந்து கோக்சிங்கா (Koxinga) தாய்வானைக் கைப்பற்றி 1683 வரை ஆட்சி புரிந்தான்.
- 1666 - லண்டனில் பெரும் தீ
- 1672-78: பிரெஞ்சு-டச்சுப் போர்.
- 1674 - இந்தியாவில் சிவாஜி மன்னனால் மராட்டியப் பேரரசு உருவாக்கப்பட்டது.
இறப்புகள்[தொகு]
- 1613 - டோனா கத்தரீனா, போர்த்துக்கல் அரசி.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Exchange History NL – 400 years: the story". Exchange History NL (ஆங்கிலம்). 6 October 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 6 October 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Seventeenth-Century Decline". The Library of Iberian resources online. 13 August 2008 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Seventeenth-Century Decline". The Library of Iberian resources online. 13 August 2008 அன்று பார்க்கப்பட்டது.