நெப்டியூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நெப்டியூன் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும். நெப்டியூன்(Neptune) என்பதன் கருத்து கடல்களின் ரோமானியக் கடவுள் என்பதாகும். சூரியக்குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் இது நான்காவது மற்றும் நிறை அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும். நெப்டியூன் பூமியைப்போல 17 மடங்கு நிறை கொண்டது. மற்றும் பூமியைவிட 15 மடங்கு பெரிய (ஆனால் அடர்த்தி குறைந்த) யுரேனஸ்-ஐ விட சற்று பெரியது. சராசரியாக நெப்டியூன் சூரியனை 30.1 வாஅ தூரத்தில் சுற்றுகிறது. நெப்டியூன் ஒரு வாயுக்கோளாகும்.இது சூரிய குடும்பத்தில் விண்கள் பட்டைக்கு வெளியே உள்ளது.இதனை சுற்றி வாயுவினால் ஆன ஒரு வளையம் உள்ளது.

நெப்டியூன்
வாயேஜர் 2 இலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படம்
பெரிய படிமம் மற்றும் விவரம்
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர் உர்பைன் லெ வெர்ரியர்
ஜான் கூச் ஆடம்ஸ்
யோகன் காத்ரிபைட் கால்
கண்டுபிடித்த ஆண்டு 1846
சுற்று தரவுகள்
சராசரிஆரம் 4,498,252,900 km
வட்டவிலகல் 0.00858587
சுற்றுக்காலம் 164ஆ 288நா 13ம
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
367.5 நாட்கள்
சராசரி சுற்று வேகம் 5.4778 கிமீ/வி
சாய்வு 1.76917°
மதிகள் எண்ணிக்கை 13
இயற்பியல் தரவுகள்
கோள்நடுக்கோட்டில் விட்டம் 49572 கிமீ
மேற்பரப்பு 7.65×109 கிமீ2
பொருண்மை 1.024×1026 கிலோகிராம்
சராசரி அடர்த்தி 1.64 g/cm3
மேற்புரஈர்ப்பு விசை 11.0 m/s2
சுழற்சிக் காலம் 16ம 6.5நி
அச்சு சாய்வு 29.58°
வெண் எகிர்சிதறல் 0.41
விடுபடு திசைவேகம் 23.71 km/s
மேற்பரப்பு வெப்பம்
குறைந்த சராசரி கூடிய
50K 53K இல்லை K
வளிமண்டல அமைப்பு
வளிமண்டல அமுக்கம் 100-300 kPa
ஐதரசன் >84%
ஈலியம் >12%
மெதேன் 2%
அமோனியா 0.01%
எதேன் 0.00025%
அசற்றலீன் 0.00001%நெப்டியூனின் பண்புகள்[தொகு]

னெப்டியூன் திணிவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகவும் விளங்குகின்றது. நெப்டியூன் சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4 498 252 900 Km அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது. நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமும் உடையது. நீல நிறக் கோளான நெப்டியூனின் பெயர் ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயரை ஒத்தது.

இது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மங்கலான கோள் ஆகும். இதனால் வெறும் கண்களால் இதை காண முடிவதில்லை.

நெப்டியூனில் ஒரு நாள் கிட்டத்தட்ட 16 மணித்தியாலங்கள் நீடிக்கும். மேலும் நெப்டியூனில் ஒரு வருடம் என்பது அதாவது அது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 165 புவி வருடங்களாகும். நெப்டியூன் சூரியனிடமிருந்து மிக அதிக தூரத்திலுள்ள கிரகம் என்பதும் அது சூரியனைச் சுற்றி வரும் வேகம் குறைவு என்பதனாலுமே அதன் ஒரு வருடம் புவியின் ஒரு வருடத்தின் 165 மடங்காக உள்ள காரணமாகும். மேலும் நெப்டியூனின் சுற்றுப்பாதை ஏனைய கிரகங்களைப் போல் அல்லாது கிட்டத்தட்ட வட்டப் பாதையாகும்.

நெப்டியூனைச் சுற்றி இதுவரை 13 துணைக் கோள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் விசேசமானது ட்ரைட்டன் எனும் நிலவாகும். இந்நிலவு நெப்டியூனை பின்பக்கமாக சுற்றி வருகின்றது. மேலும் ட்ரைட்டனில் வரண்ட நிலங்களும் நைட்ரஜன் திரவ நிலையிலும் வெந்நீர் ஊற்றுக்களும் நிறைந்துள்ளன. சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களை அவதானித்த வண்ணம் அதைத் தாண்டிச் செல்லும் நோக்கத்துடன் நாசாவால் செலுத்தப்பட்ட வொயேஜர் 2 செய்மதி இறுதியாகக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் அனுப்பியது நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தே ஆகும். மேலும் அது நெப்டியூனையும் அதன் துணைக் கோள் ட்ரைட்டனையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

கண்டுபிடிப்பு[தொகு]

நெப்டியூனும் அதன் நிலவு டிரிட்டானும்

பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன்.நெப்டியூன் கிரகம் கணித ரீதியான கணிப்புக்களினூடாகவே முதன் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது அதிக பார்க்கும் திறன் உள்ள தொலைக் காட்டிகள் இல்லாத காலமான 1846 ஆம் ஆண்டு யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப் பாதையில் அதன் ஈர்ப்பு நடுக்கம் காரணமாக அதன் அருகில் அதை ஒத்த கோளொன்று இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.அதேபோல் வில்லியம் ஹெர்ச்செல் என்ற விஞ்ஞானி, மார்ச் 13, 1781-ல் தற்செயலாக சனிக்கு அடுத்தபடியாக உள்ள யுரேனஸ் எனும் கோளினை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார். யுரேனஸ் பற்றி மேலும் ஆராய்ந்ததில், அதனுடைய பாதையில் மேலும் கீழுமான அசைவு தெரிந்தது. ஒரு பொருள் மீது ஈர்ப்பு சக்தியைச் செலுத்தி, அதனை ஈர்த்தால் மட்டுமே இவ்வாறு தள்ளாட்டம் இருக்கமுடியும். அப்படியானால் யுரேனஸுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் இருப்பதாலே... அதன் ஈர்ப்பு சக்தியின் காரணமாக யுரேனஸில் தள்ளாட்டம் ஏற்படுகிறது என கணித்தனர் வானவியலாளர்கள். சிறந்த வானவியலாளர் எய்ரி என்பவரிடம் தனது கணக்கை எடுத்துச் சென்றார். இளைஞரான ஆடம்ஸ் கூற்று சரியாக இருக்காது என நினைத்த எய்ரி, இதை சட்டை செய்யவில்லை. அந்த ஆய்வு முடிவுகளை லெவெரியா ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொலைநோக்கிக் கூடத்துக்கு அனுப்பினார்.அதன் இயக்குனரும் ஆர்வம் காட்டவில்லை. பிறகு, அங்கே பணியாற்றிய ஜான்கால், ஹைன்ரிடீ தஜேஸ்ட் எனும் ஆய்வாளர்களின் வேண்டுகோளுக்கு செவி மடுத்த இயக்குனர், நெப்டியூன் கோளினை லெவெரியா கணித்த இடத்தில் தேட, ஒரு சில நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள், சரியாக இரவு 12 மணிக்கு லெவெரியா கணக்கிட்டு சொன்ன இடத்தில் நெப்டியூன் தென்பட்டது. அடுத்த சில நாட்கள் அதன் இயக்கத்தைச் சரிபார்த்து, இது கோள்தான் என உறுதி செய்தனர். இவ்வாறு கணிதம் கொண்டு பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்டது நெப்டியூன். இதனைத் தொடர்ந்து கணித மற்றும் வானியல் அறிஞர்களான உர்பைன் லெ வெர்ரியர், ஜான் கூச் ஆடம்ஸ், யோகன் காத்ரிபைட் கால் ஆகியோரால் நெப்டியூனின் துணைக் கோளான ட்ரைட்டனும் கண்டு பிடிக்கப்பட்டது.

இப்படி 1846-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தினத்தில் இருந்து நெப்டியூன்,2011 ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதிதான் சூரியனை ஒரு முறை வலம் வந்துள்ளது. தன்னைத்தானே 19.1 நாளில் சுற்றும் நெப்டியூன், சூரியனை ஒரு முறை சுற்றி வர 164.8 வருடங்கள் ஆகும்.

இதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் சொவால்டர் கண்டுபிடித்தார் என்று கூறுவோறும் உளர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெப்டியூன்&oldid=1855921" இருந்து மீள்விக்கப்பட்டது