அமோனியம் ஐதரோசல்பைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் ஐதரோசல்பைடு
| |||
வேறு பெயர்கள்
அமோனியம் பைசல்பைடு
அமோனியம் ஐதரசன் சல்பைடு | |||
இனங்காட்டிகள் | |||
12124-99-1 | |||
ChemSpider | 23805 | ||
EC number | 235-184-3 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 25515 | ||
வே.ந.வி.ப எண் | BS4900000 | ||
| |||
UNII | A824D6LXMB | ||
UN number | 2683 | ||
பண்புகள் | |||
H5NS | |||
வாய்ப்பாட்டு எடை | 51.111 கிராம்/மோல் | ||
தோற்றம் | மஞ்சள் ஆரஞ்சு நிறத்தில் புகையும் நீர்மம். | ||
அடர்த்தி | 1.17 கிராம்/செ.மீ3[1] | ||
கொதிநிலை | 56.6 °C (133.9 °F; 329.8 K) | ||
கலக்கும் | |||
கரைதிறன் | ஆல்ககால்l, நீர்ம அமோனியா, திரவ ஐதரசன் சல்பைடு ஆகியனவற்றில் கரையும்; பென்சீன், எக்சேன் ஈதர் போ்ன்றவற்றில் கரையாது. | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.74 | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு | ||
GHS pictograms | |||
GHS signal word | அபாயம் | ||
H314, H400. | |||
P260, P264, P273, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P391, P405, P501 | |||
Lethal dose or concentration (LD, LC): | |||
LD50 (Median dose)
|
168 mg/kg (rat, oral)[2] | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | அமோனியா கரைசல் | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் ஐதரோசல்பைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
அமோனியம் ஐதரோசல்பைடு (Ammonium hydrosulfide) என்பது (NH4)SH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
ஆக்கக்கூறுகள்
[தொகு]அமோனியம் நேர்மின் அயனியும் ஐதரோசல்பைடு எதிர்மின் அயனியும் சேர்ந்து அமோனியம் ஐதரோசல்பைடு உப்பு உருவாகிறது. நிறமற்றதாகவும் நீரில் கரையக்கூடியதாகவும், மைக்காவை ஒத்த படிகங்களாகவும் இவ்வுப்பு காணப்படுகிறது. புவியில் திண்மமாகக் கிடைக்காமல் பிரதானமாகக் கரைசலாகவே கிடைக்கிறது. ஆனால் NH4SH பனிக்கட்டியாக வாயு நிரம்பிய மாபெரும் கிரகங்களான வியாழன் மற்றும் சனி கோள்களின் மேகத் தளங்களில் கணிசமான பகுதியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. சில கிரகங்களின் மேகங்களுக்கு உள்ள வண்ணம் ஒளிப்பகுப்பால் உருவாக்கப்படும் கந்தகம் காரணமாக இருக்கலாம். அங்கெலாம் ஐதரசன் சல்பைடு மற்றும் அம்மோனியா கலப்பதால் அமோனியம் ஐதரோசல்பைடு உருவாகிறது.
தயாரிப்பு முறை
[தொகு]அடர்த்தியான அமோனியா கரைசலில் ஐதரசன் சல்பைடு வாயுவை செலுத்துவதனால் அமோனியம் ஐதரோசல்பைடு கரைசல் கிடைக்கிறது [3]. ஐதரசன் சல்பைடு அடர்த்தியான அமோனியா நீர்க்கரைசலுடன் அறைவெப்பநிலையில் வினைபுரிந்து (NH4)2S•2NH4HS சேர்மத்தைக் கொடுப்பதாக 1895 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விரிவான அறிக்கை கூறுகிறது. இவ்வுப்பை 0 °செல்சியசு வெப்பநிலைக்கு குளிரவைத்து கூடுதலாக ஐதரசன் சல்பைடுடன் சேர்த்து சூடுபடுத்தினால் (NH4)2S•12NH4HS கிடைக்கிறது.[4] பனிக்குளிர் நிலையிலுள்ள இக்கரைசல் 0 °செல்சியசு வெப்பநிலையில் வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்தினால் ஐதரோசல்பைடு கிடைக்கிறது. முடைநாற்றமுடைய இச்சேர்மத்தில் அமோனியம் சல்பைடு கரைசல் கலந்துள்ளது. எளிமையாக இதை அமோனியாவாகவும் ஐதரசன் சல்பைடு வாயுவாகவும் மாற்ற முடியும். இதை பின்வரும் சமன்பாடு விளக்குகிறது.
(NH4)SH⇌ NH3 + H2S
அமோனியா மற்றும் ஐதரசன் சல்பைடு ஆகிய இரண்டு வாயுக்களும் கடுமையான விரும்பத்தகாத மணம் வீசுபவைகளாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
- ↑ Record of ammonium hydrosulfide in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health, accessed on October 22, 2010.
- ↑ Goodman, J. T.; Rauchfuss, T. B. (2002). "Tetraethylammonium-tetrathioperrhenate [Et4N][ReS4]". Inorganic Syntheses 33: 107–110. doi:10.1002/0471224502.ch2.
- ↑ W. P. Bloxam (1895). "The Sulphides and Polysulphides of Ammonium". J. Chem. Soc., Trans. 67: 283. doi:10.1039/CT8956700277.