நியோடிமியம்(III) சல்பைடு
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
இருநியோடிமியம் முச்சல்பைடு
| |
வேறு பெயர்கள்
நியோடிமியம் சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12035-32-4 | |
ChemSpider | 145460 |
EC number | 234-820-7 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 166011 |
| |
பண்புகள் | |
Nd2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 384.66 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நியோடிமியம்(III) சல்பைடு (Neodymium(III) sulfide) என்பது Nd2S3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2] நியோடிமியமும் கந்தகமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இச்சேர்மத்தில் இரண்டு நியோடிமியம் அணுக்கள் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் மூன்று கந்தக அணுக்கள் +2 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் காணப்படுகின்றன. மற்ற அருமண் சல்பைடுகளைப் போலவே, நியோடிமியம்(III) சல்பைடும் உயர் செயல்திறன் கொண்ட கனிம நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]
தயாரிப்பு
[தொகு]நியோடிமியமும் கந்தகமும் சேர்ந்து நேரடியாக வினைபுரிவதால் நியோடிமியம்(III) சல்பைடு உருவாகிறது.[4]
- 2Nd + 3S → Nd2S3
நியோடிமியம் ஆக்சைடை ஐதரசன் வாயு முன்னிலையில் ஐதரசன் சல்பைடுடன் 1450 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலமும் இதை தயாரிக்கலாம்:[5][6]
- Nd2O3 + 3 H2S → Nd2S3 + 3 H2O
பண்புகள்
[தொகு]நியோடிமியம்(III) சல்பைடு மூன்று வடிவங்களில் கிடைக்கிறது.[3] α-வடிவம் செஞ்சாய்சதுரப் படிக அமைப்பைக் கொண்டுள்ளது, β வடிவம் நாற்கோண படிக அமைப்பைக் கொண்டுள்ளது. மற்றும் γ வடிவம் கனசதுரப் படிக அமைப்பில் வெளிர்பச்சை நிற திண்மமாகக் காணப்படுகிறது. வெற்றிடத்தில் 1650 °செல்சியசு வெப்பநிலையில் γ வடிவ நியோடிமியம்(III) சல்பைடு சிதைந்து நியோடிமியம் மோனோசல்பைடை உருவாக்குகிறது. [6]
நியோடிமியம்(III) சல்பைடு அதிக உருகுநிலை கொண்டதாகும். மேலும் இது பல பல்லுருவ வடிவங்களையும் கொண்டுள்ளது. இதனால் படிகவளர்ச்சி கடினமாகும்.[2] வெப்பமடையும் போது, நியோடிமியம்(III) சல்பைடு கந்தக அணுக்களை இழக்கிறது. Nd2S3 மற்றும் Nd3S4 சேர்மங்களுக்கு இடையில் வெவ்வேறு சேர்மங்களாக மாற்றமடைகிறது. நியோடிமியம்(III) சல்பைடு ஒரு மின் கடத்தாப் பொருளாகும்.[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Neodymium sulfide (Nd2S3)". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 April 2022.
- ↑ 2.0 2.1 Uspenskaya, S. I.; Eliseev, A. A.; Fedorov, A. A. (1975), Sheftal’, N. N.; Givargizov, E. I. (eds.), "Vapor Growth of Lanthanum and Neodymium Sulfide Crystals", РОСТ КРИСТАЛЛОВ/Rost Kristallov/Growth of Crystals (in ஆங்கிலம்), Boston, MA: Springer New York, pp. 257–260, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-1-4684-1689-3_55, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4684-1691-6, பார்க்கப்பட்ட நாள் 2023-04-22
- ↑ 3.0 3.1 Faulkner, Edwin B.; Schwartz, Russell J. (2009-03-09). High Performance Pigments (in ஆங்கிலம்). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-527-62692-2.
- ↑ A. W. Sleight and D. P. Kelly (1973), Aaron Wold and John K. Ruff (ed.), Rare-earth sesquisulfides, Ln2S3, Inorganic Syntheses (in German), vol. 14, McGraw-Hill Book Company, Inc., pp. 152–155
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 5.0 5.1 Cotton, Simon (2006). Lanthanide and Actinide Chemistry. John Wiley & Sons Ltd.
- ↑ 6.0 6.1 Meyer, G.; Morss, Lester R. (1990-12-31). Synthesis of Lanthanide and Actinide Compounds (in ஆங்கிலம்). Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7923-1018-1.