ஆக்சிசனேற்ற நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புளுடோனியம் அயனி - வெவ்வேறு ஆக்சிசனேற்ற நிலைகளில்

ஆக்சிசனேற்ற நிலைஅல்லது ஆக்சிசனேற்ற எண் (Oxidation State) என்பது ஒரு மூலக்கூறில் , பிற எல்லா அணுக்களும் அயனிகளாக வெளியேறிய பின் அணுவின் மீதுள்ள எஞ்சிய மின்னூட்டமே, அத்தனிமத்தின் ஆக்சிசனேற்ற எண் எனப்படும். அணுக்கள், அவைகளின் சேர்ந்த நிலைகளைப் பொறுத்து, சுழி,எதிர் அல்லது நேர் ஆக்சிசனேற்ற எண்களைப் பெறுகின்றன.

ஆக்சிசனேற்றம் என்ற சொல் முதன்முதலில் அந்துவான் இலவாசியே என்ற பிரான்சிய வேதியலாளரால் பயன்படுத்தப்பட்டது. ஒரு பொருள் ஆக்சிசனுடன் வினைபுரிவதை குறிப்பிடவே இச்சொல் பயன்படுத்தப்பட்டது.பின்னர் நீண்ட காலத்திற்குப் பின்னரே ஆக்சிசனேற்றம் என்பது எலக்ட்ரான்களை இழப்ப்து என்று அறியப்பட்டது. இதன் பின்னர் எலக்ட்ரான்களை இழக்கும் வினைகள் யாவும் ஆக்சிசனேற்ற வினைகள் எனப்பட்டன்.

ஒரு தனிமம் எலக்ட்ரானைப் பெறுமாயின் அது எதிர்மறை ஆக்சிஜனேற்ற நிலையை அடைகிறது. கந்தகம் இரண்டு ‌‌ஐதரசன் அணுக்களிடமிருந்து ஒரு ஒரு எலக்ட்ரானைப் பெறுவதால் +2 ஆக்சிஜனேற்ற நிலையை அடைகிறது.

இரும்பு, தாமிரம் போன்ற தனிமங்கள் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைக் கொண்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சிசனேற்ற_நிலை&oldid=2223182" இருந்து மீள்விக்கப்பட்டது