உள்ளடக்கத்துக்குச் செல்

நியோடிமியம்(III) ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியோடிமியம்(III) ஆக்சைடு
Neodymium(III) oxide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நியோடிமியம்(III) ஆக்சைடு
வேறு பெயர்கள்
நியோடிமியம் ஆக்சைடு, நியோடிமியம் செசுகியுவாக்சைடு
இனங்காட்டிகள்
1313-97-9 Y
பண்புகள்
Nd2O3
வாய்ப்பாட்டு எடை 336.48 கி/மோல்
தோற்றம் வெளிர் நீல சாம்பல் அறுகோண படிகங்கள்
அடர்த்தி 7.24 கி/செ.மீ3
உருகுநிலை 2,233 °C (4,051 °F; 2,506 K)
கொதிநிலை 3,760 °C (6,800 °F; 4,030 K)[1]
.0003 g/100 mL (75 °C)
+10,200.0•10−6 செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம், hP5
புறவெளித் தொகுதி P-3m1, No. 164
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1807.9 கி.யூ•மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
158.6 யூல்•மோல்−1•K−1
வெப்பக் கொண்மை, C 111.3 J•mol−1•K−1[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நியோடிமியம்(II) குளோரைடு
நியோடிமியம்(III) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் யுரேனியம்(VI) ஆக்சைடு
பிராசியோடிமியம்(III) ஆக்சைடு
புரோமித்தியம்(III) ஆக்சைடு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
Y verify (இது Y☒N ?)

நியோடிமியம்(III) ஆக்சைடு (Neodymium(III) oxide) என்பது Nd2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியம் செசுகியுவாக்சைடுஎன்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் நியோடிமியம் மற்றும் ஆக்சிசன் சேர்ந்து உருவாகிறது. வெளிர் சாம்பல்-நீல அறுகோண படிகங்களாக இச்சேர்மம் உருவாகிறது[1]. முன்னதாக ஒரு தனிமம் எனக்கருதப்பட்ட அரிய-மண் கலவையான டிடிமியத்தில் ஒரு பகுதியாக நியோடிமியம்(III) ஆக்சைடு காணப்படுகிறது[2].

பயன்கள்

[தொகு]

சூரிய ஒளிக்காப்பு கண்ணாடிகள் உள்ளிட்ட கண்ணாடிகளில் கலக்க மாசாக நியோடிமியம்(III) ஆக்சைடு பயன்படுகிறது. மேலும் திண்மநிலை சீரொளிகள் உருவாக்கவும், வண்ணக்கண்ணாடிகள் தயாரிக்கவும், மிளிர்பூச்சுகள் தயாரிப்பிலும் இதைப்பயன்படுத்துகின்றனர்[3]. நியோடிமியம் கலக்கப்பட்ட கண்ணாடி மஞ்சள் மற்றும் பச்சை ஒளியை ஈர்த்துக் கொள்வதால் செவ்வூதா நிறத்திற்கு மாறுகிறது. இதனால் பற்றவைப்புக் கண்ணாடிகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது[4]. நியோடிமியக் கலப்பு கண்ணாடிகளில் சில இருநிறங்காட்டிகளாக விளங்குகின்றன. அதாவது ஒளி அமைப்பைப் பொறுத்து இக்கண்ணாடி நிறத்தை மாற்றிக் கொள்கிறது. அலெக்சாண்டரைட்டு என்று பெயரிடப்பட்ட கனிமம் சுரிய ஒளியில் நீலமாகவும் செயற்கை ஒளியில் சிவப்பாகவும் தோன்றுகிறது[5]. உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 7000 டன்கள் நியோடிமியம்(III) ஆக்சைடு உற்பத்தி செய்யப்படுகிறது. பலபடியாக்கல் வினையூக்கியாகவும் நியோடிமியம்(III) ஆக்சைடைப் பயன்படுத்துகின்றனர்[4].

வினைகள்

[தொகு]

நியோடிமியம்(III) ஆக்சைடை நியோடிமியம்(III) நைட்ரைடு அல்லது நியோடிமியம்(III) ஐதராக்சைடு சேர்மத்தை காற்றில் எரித்துத் தயாரிக்கிறார்கள்[6].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 471, 552, ISBN 0-8493-0594-2
  2. Brady, George Stuart; Clauser, Henry R.; Vaccari, John A. (2002), Materials Handbook (15 ed.), New York: McGraw-Hill Professional, p. 779, ISBN 978-0-07-136076-0, retrieved 2009-03-18
  3. Eagleson, Mary (1994), Concise Encyclopedia of Chemistry, Springer, p. 680, ISBN 978-3-11-011451-5, retrieved 2009-03-18
  4. 1 2 Emsley, John (2003), Nature's Building Blocks, Oxford University Press, pp. 268–9, ISBN 978-0-19-850340-8, retrieved 2009-03-18
  5. Bray, Charles (2001), Dictionary of Glass (2 ed.), University of Pennsylvania Press, p. 103, ISBN 978-0-8122-3619-4, retrieved 2009-03-18
  6. Spencer, James Frederick (1919), The Metals of the Rare Earths, London: Longmans, Green, and Co, p. 115, retrieved 2009-03-18
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோடிமியம்(III)_ஆக்சைடு&oldid=4483029" இலிருந்து மீள்விக்கப்பட்டது