பியர்சன் குறியீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பியர்சன் குறியீடு அல்லது பியர்சன் குறியீட்டு முறை (The Pearson symbol, or Pearson notation) என்பது படிகவியலில் ஒரு படிகத்தின் அமைப்பை விவரிக்கின்ற முறையாகும். டபிள்யூ.பி. பியர்சன் இம்முறையைத் தோற்றுவித்தார்[1] . இக்குறியீட்டில் இரண்டு எழுத்துக்களும் அவற்றைத் தொடர்ந்து ஒரு எண்ணும் கொண்ட ஒரு குறியீட்டு முறையாகும். உதாரணமாக, வைர அமைப்பு - cF8 உரூத்தைல் அமைப்பு - tP6 இரண்டு சாய்வெழுத்துகளும் பிராவைசு அணிக்கோவையைக் குறிப்பிடுகின்றன. அடித்தட்டு எழுத்து படிக வகையையும் மேல்தட்டு எழுத்து அணிக்கோவை வகையையும் குறிப்பிடுகின்றன. ஓர் அலகு கூட்டில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையை எண்மதிப்பு குறிப்பிடுகிறது. ஐயுபிஏசி (2005) [2]

படிக வகை
a முச்சரிவு
m ஒற்றைச் சரிவு
o செஞ்சாய்சதுரம்
t நாற்கோணம்
h அறுகோணம் மற்றும் சாய்சதுரம்
c கனசதுரம்
அணிக்கோவை வகை
S,A,B,C பக்க முகமையம்
F அனைத்து முகமையம்
I உடல் மையம் [3]
R சாய்சதுரம்
P முதனிலை

முன்னதாக S என்ற எழுத்துக்குப் பதிலாக A, B மற்றும் C முதலியன பயன்படுத்தப்பட்டன. மையமாக்கலில் ஒரிணை எதிரெதிர் முகங்களை X -- அச்சு கொண்டிருந்தால் அதை A- மையம் என்றும் Y- மற்றும் Z- அச்சுகளில் சம மையம் கொண்டிருந்தால் முறையே B- மற்றும் C- மைய என்றும் குறிக்கப்பட்டன.[3]

14 வகையான வாய்ப்புள்ள பிராவைசு அணிக்கோவைகள் முதல் இரண்டு எழுத்துகளால் அடையாளம் காணப்படுகின்றன:

படிக வகை அணிக்கோவை குறியீடு பியர்சன் குறியீட்டு எழுத்துகள்
Tமுச்சரிவு P aP
ஒற்றைச் சரிவு P mP
S mS
செஞ்சாய்சதுரம் P oP
S oS
F oF
I oI
நாற்கோணம் P tP
I tI
அறுகோணம் (மற்றும் முக்கோணம்) P hP
சாய்சதுரம் R hR
கனசதுரம் P cP
F cF
I cI

பியர்சன் குறியீடு மற்றும் இடக்குழு[தொகு]

பியர்சன் குறியிடு படிக அமைப்புகளின் இடக்குழுவை தனித்துவமாக அடையாளம் காட்டவில்லை. உதாரணமாக, சோடியம் குளோரைடின் இரண்டு வகை படிக அமைப்புகளும் (இடக்குழு Fm3m) மற்றும் வைர அமைப்பு இடக்குழு Fd3m) பியர்சன் குறியீடு cF8 என்றே உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. W.B. Pearson, A Handbook of Lattice Spacings and Structures of Metals and Alloys,Vol. 2, Pergamon Press, Oxford, 1967
  2. Nomenclature of Inorganic Chemistry IUPAC Recommendations 2005; IR-3.4.4, pp.49-51; IR-11.5, pp.241-242
  3. 3.0 3.1 page 124 in chapter 3. Crystallography: Internal order and symmetry in Cornelius Klein & Cornelius S. Hurlbut, Jr.: Manual of Mineralogy, 21st edition, 1993, John Wiley & Sons, Inc., ISBN 0-471-59955-7

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியர்சன்_குறியீடு&oldid=3220999" இலிருந்து மீள்விக்கப்பட்டது