லியுதேத்தியம்(III) ஆக்சைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
லியுதேத்தியம் ஆக்சைடு, லியுதேத்தியம் செசுகியுவாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12032-20-1 | |
பப்கெம் | 159406 |
பண்புகள் | |
Lu2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 397.932 கி/மோல் |
உருகுநிலை | 2,490 °C (4,510 °F; 2,760 K) |
கொதிநிலை | 3,980 °C (7,200 °F; 4,250 K) |
பிற கரைப்பான்கள்-இல் கரைதிறன் | கரையாது |
Band gap | 5.5 eV[1] |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | N/A |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | லியுதேத்தியம்(III) குளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இட்டெர்பியம்(III) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
லியுதேத்தியம்(III) ஆக்சைடு (Lutetium(III) oxide) என்பது Lu2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மமாகும். வெண்மை நிறத்திலுள்ள இத்திண்மம் கனசதுர படிக அமைப்பில் காணப்படுகிறது. சில சிறப்பு வகை கண்ணாடிகள் செய்வதற்கு இதைப் பயன்படுத்துகிறார்கள். அருமண் சேர்மமான இதை லியுத்தேசியா என்ற பெயராலும் அழைக்கிறார்கள்.
வரலாறு
[தொகு]1879 இல் யீன்–சார்லசு-காலிசார்டு டி மார்க்நாக் (1817–1894) என்ற பிரஞ்சு வேதியியலாளர் இட்டெர்பியம் தனிமத்தை கண்டறிந்ததாக தெரிவித்தார். ஆனால் அதில் தனிமங்களின் கலவையாக இருந்தது. 1907 இல் சியார்ச்சசு உர்பெயின் என்ற மற்றோர் பிரஞ்சு வேதியியலாளர் (1872–1938) இட்டெர்பியம் ஒரு தனித்த தனிமம் அல்ல என்றும் அது புதிய இரண்டு தனிமங்களின் கலவையென்றும் அறிவித்தார். செருமனியைச் சேர்ந்த கார்ல் அவுர் (1858–1929) மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சார்லசு யேம்சு (1880–1926) போன்ற வேறு சில வேதியியலர்களும் இதே கருத்தைத் தெரிவித்தனர். இவர்கள் கண்டறிந்த இரண்டு தனிமங்கள் நியோயிட்டெர்பியம், லியுட்டேசியம் என்பனவாகும். எனினும், எவரும் தூய்மையான லியுத்தேத்தியத்தைக் கண்டறிந்து கூறவில்லை.பொதுவாக இவர்கள் கண்டறிந்து அறிவித்தத்து லியுதேத்தியம்(III) ஆக்சைடு என கருதப்படுகிறது.
பயன்கள்
[தொகு]சீரொளி படிகங்களைத் தயாரிக்கும் முக்கியமான தாதுப் பொருள் லியுதேத்தியம்(III) ஆக்சைடு ஆகும். பீங்கான், கண்ணாடி மற்றும் பாசுபர் தொழில்களில் இது சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. சேர்மங்களை உடைத்தல், ஆல்க்கைலேற்றம் செய்தல், ஐதரசனேற்றம் செய்தல், பலபடியாக்குதல் போன்ற வினைகளில் லியுதேத்தியம்(III) ஆக்சைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. லியுதேத்தியம்(III) ஆக்சைடின் ஆற்றல் இடைவெளி 5.5 எலக்ட்ரான் வோல்ட்டு ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Optical and dielectric characteristics of the rare-earth metal oxide Lu2O3," S. V. Ordin and A. I. Shelykh, Semiconductors, Vol. 44, Num. 5 (2010), pp. 558-563, DOI: 10.1134/S1063782610050027