உள்ளடக்கத்துக்குச் செல்

தங்குதன் ஈராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்குதன் ஈராக்சைடு
Tungsten(IV) oxide
பெயர்கள்
வேறு பெயர்கள்
தங்குதன் ஈராக்சைடு
இனங்காட்டிகள்
12036-22-5 Y
EC number 234-832-7
InChI
  • InChI=1S/2O.W
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82850
  • O=[W]=O
பண்புகள்
WO2
வாய்ப்பாட்டு எடை 215.839 கி/மோல்
தோற்றம் வெண்கல நிற திண்மம்
அடர்த்தி 10.8 கி/செ.மீ3
உருகுநிலை 1,700 °C (3,090 °F; 1,970 K) சிதைவடைகிறது
மிகக்குறைவு
5.7×105 cm3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு உருதிரிந்த உரூத்தைல், (ஒற்ரைச்சரிவு), mP12, Space group P21/c, No 14
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் தங்குதன் இருசல்பைடு
ஏனைய நேர் மின்அயனிகள் குரோமியம்(IV) ஆக்சைடு
மாலிப்டினம்(IV) ஆக்சைடு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

தங்குதன் ஈராக்சைடு (Tungsten dioxide) என்பது WO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்கலம் நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இது ஒற்றைச் சரிவில் படிகமாகிறது[1]. உருத்திரிந்த எண்முக WO6 மையங்களுடன் மாற்று குறுகிய W–W பிணைப்புகள் (248 பைகோ மீட்டர்|பை.மீ) அமைந்துள்ள உரூத்தைல் போன்ற அமைப்பு அம்சங்களுடனான அமைப்பை பெற்றுள்ளது.[1] ஒவ்வொரு தங்குதன் மையமும் d2 வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் இச்சேர்மம் உயர் மின்கடத்துகைத் திறன் பெற்றுள்ளது.

900° செல்சியசு வெப்பநிலையில் WO3 சேர்மத்துடன் தங்குதன் பொடியைச் சேர்த்து 40 மணி நேர ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் தங்குதன் ஈராக்சைடைத் தயாரிக்கமுடியும். இவ்வினையில் கலப்பு இணைதிறன் சேர்மமான W18O49 பகுதியாக ஒடுக்கப்படுகிறது.

2 WO3 + W → 3 WO2

மாலிப்டினம் வரிசைச் சேர்மமான MoO2 இம்முறையிலேயே தயாரிக்கப்படுகிறது. வேதியியல் போக்குவரத்து நுணுக்கத்தில் அயோடினைப் பயன்படுத்தி ஒற்றைப் படிகங்கள் தயாரிக்கப்படுகின்றன. WO2 சேர்மத்தை அயோடின் ஆவியாகும் வரிசைச் சேர்மமாகச் செலுத்துகிறது[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Wells 5th
  2. Conroy, L. E.; Ben-Dor, L. (1995), "Molybdenum(IV) Oxide and Tungsten(IV) Oxides Single-Crystals", Inorg. Synth., Inorganic Syntheses, 30: 105–07, doi:10.1002/9780470132616.ch21, ISBN 0-471-30508-1{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்குதன்_ஈராக்சைடு&oldid=4309347" இலிருந்து மீள்விக்கப்பட்டது